மேலச்சேரி கோட்டுப்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோட்டுப்பக்கம் என்கின்ற இந்த கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ளது .இங்கு சுமார் 1002 பேர் வசிக்கிறார்கள் .இங்கு விவசாயமே முதன்மையான தொழிலாகும் .இங்கு சுமார் 1000 ஏக்கர் நிலம் உள்ளது.இங்கிருந்து வருடத்திற்கு குறைந்தபட்சம் 20000 நெல் மூட்டைகளை உற்பத்தி செய்கிறார்கள் [சான்று தேவை] .விவசாயம் தவிர மற்ற தொழில்களும் செய்கின்றனர். .

கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசியாக வந்து தங்கி தன் யோகசக்தியால் மக்களின் தீராத வியாதிகளை தீர்த்தும். குழந்தை பேரவற்றவர்களுக்கு குழந்தை வரம் தந்தும், ஆடி அமாவாசை பூச நட்சத்திரப் புண்ணிய நாளில் ஜீவசமாதியடைந்து சுயம்பு லிங்கமாய் அவதரித்து அருள்பாலித்து வரும் பரதேசி ஆறுமுக சுவாமி கோவிலில் ஆடி மாதத்தில் குரு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. வருடாவருடம் ஆடி அமாவாசையையொட்டி பரதேசி ஆறுமுக சுவாமி குரு பூஜை மிக சிறப்பாக பல்லாண்டுகளாக நடக்கிறது. இதற்காக இங்கு யாக குண்டம் அமைத்து யாகங்கள் நடத்தி. பின்னர் பரதேசி சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தை, விழாவில் பங்கேற்ற குழந்தை இல்லாத பெண்கள், முந்தானையால் வாங்கிக் கொண்டு அருகே உள்ள குளக்கரை படி மீது வைத்து, மண்டியிட்டு கைகளை பின்னால் கட்டிக் கொண்டு குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் . கடந்த ஆண்டு குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டு, குழந்தை பெற்றவர்கள், குடும்பத்துடன் வந்து, பிறந்த குழந்தைக்கு எடைக்கு எடை நாணயம் போட்டு, பால் காவடி, போன்ற காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். 182 வருடங்களாக பரதேசி ஆறுமுக சுவாமி குரு பூஜை மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 1000 மாணவர்கள் படிக்கிறார்கள் .இந்த ஊரில் உயர்நிலை பள்ளி வரை உள்ளது. இந்த பள்ளியில் படித்த பலர் பெரிய பதவிகளில் உள்ளனர்[சான்று தேவை].