மேலக்காவேரி கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ கோபுரம்

மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரி என்னும் இடத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். [1]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் மேலக்காவேரியில் கீழத்தெருவில் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

விமானம்

நுழைவாயிலில் உள்ள சிறிய ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மண்டபம் உள்ளது. அதில் நந்தியும், பலி பீடமும் காணப்படுகின்றன. அடுத்து உள்ளே செல்லும்போது வலது புறம் சித்தி விநாயகர், இடது புறம் பால தண்டாயுதபாணி. கருவறையில் மூலவர் கைலாசநாதர் உள்ளார். மூலவருக்கு முன் இரு புறமும் தண்டியும், முண்டியும் உள்ளனர். மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர். மூலவர் கருவறையின் இடது புறமாக கற்பகாம்பாள் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் முன்பாக இரு புறமும் ஜெயா, விஜயா உள்ளனர். திருச்சுற்றில் ஞானசம்பந்தர், சொக்கியார் அம்மையார், சந்திரன், கால பைரவர், சனீஸ்வரன், சூரியன் ஆகியோர் உள்ளனர். நிருதி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சுந்தரேஸ்வரர், மீனாட்சி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் கைலாசநாதர், இறைவி கற்பகாம்பாள்.

கும்பகோணம் சப்தஸ்தானம்[தொகு]

கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் சப்தஸ்தான விழாவில் தொடர்புடைய ஏழு தலங்கள் உள்ளன. 2016இல் சப்தஸ்தான பல்லக்கு பல்லக்கு சீர்செய்யப்பட்டு, வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. [2] 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது. [3] பல்லக்குத் திருவிழா 23 ஏப்ரல் 2016 இரவு 7.30 மணிக்கு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் தொடங்கி கீழ்க்கண்ட கோயில்களுக்குச் சென்று இக்கோயிலில் 25 ஏப்ரல் 2016 காலை நிறைவுற்றது.

குடமுழுக்கு[தொகு]

21 மார்ச் 2005 திங்கட்கிழமை (தாரண வருடம் பங்குனி 8ஆம் நாள்) மற்றும் 2 நவம்பர் 2015 திங்கட்கிழமை (மன்மத வருடம் ஐப்பசி 16)[4] ஆகிய நாள்களில் குடமுழுக்கு நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]