மேலக்கடம்பூர்

ஆள்கூறுகள்: 11°13′55″N 79°31′27″E / 11.23194°N 79.52417°E / 11.23194; 79.52417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலக்கடம்பூர்
—  கிராமம்  —
மேலக்கடம்பூர்
இருப்பிடம்: மேலக்கடம்பூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°13′55″N 79°31′27″E / 11.23194°N 79.52417°E / 11.23194; 79.52417
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சி தலைவர் க. தேவதாஸ்
மக்கள் தொகை 1,500 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


மேலக்கடம்பூர் இந்தியாவின் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் கிராமமாகும். மேலக்கடம்பூர் 500 ஏக்கர் பரப்பளவுள்ள சிறிய கிராமம். 1500 மக்கள் தொகை கொண்டது. ஒரு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.

இது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் உள்ளது[4]. வடவாற்றின் கரையில் உள்ளது. செட்டிதாங்கல் வழியாக எய்யலூர், ஆயங்குடி, முட்டம் செல்லும் சாலையில் ஆறாவது கி.மீட்டரில் உள்ளது.

இங்கமைந்துள்ள மிக நுட்பமான சிற்பங்களைக் கொண்ட மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் தொன்மையான சிவாலயமாகும். இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்

கடம்பூர்[தொகு]

1500 மக்கள் தொகை கொண்ட கிராமம், 450 மாணவ, மாணவிகள் படிக்கும் ஓர் நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. பிள்ளைமார்களும், ஆதிதிராவிடர்களும், வன்னியர்களும், பிற இனத்தவரும் வாழ்கின்றனர். நெல் பிரதான விவசாயம், தென்னை, எண்ணெய் பனை, ஆகியவையும் பயிரிடப்படுகின்றன. ஐந்து குளங்கள் உள்ளன. இரண்டு சிறிய அரிசி அரைக்கும் ஆலை உள்ளது. ஒரு கூட்டுறவு பண்டக சாலை,கிராம நூலகம்,ஊராட்சி மன்றம், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம், மூன்று பேருந்து நிறுத்தங்கள் கட்டிடம் உள்ளன.

வடக்கில் வேளாளர் குல தெய்வ கோயிலும், ஈசானியத்தில் விநாயகர் கோயிலும், மேற்கில் அய்யனார் இருப்பிடமும், திரௌபதி கோயிலும் உள்ளன. ஊரின் நடுவில் அமிர்தகடேசுவரர் ஆலயம் உள்ளது. அதன் நான்கு புறமும் வீதிகள் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலக்கடம்பூர்&oldid=3699551" இலிருந்து மீள்விக்கப்பட்டது