மேலகா காட்சிக்கூடம், இந்தோனேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலகா காட்சிக்கூடம்
Galeri Melaka
Map
பொதுவான தகவல்கள்
வகைகாட்சிக்கூடம்
இடம்7-9 மலாக்கா தெரு, ரோ மலாக்கா, தம்போரா, ஜகார்த்தா, இந்தோனேசியா
நிறைவுற்றது22 Fபிப்ரவரி 2013
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு90 m2

மேலகா காட்சிக்கூடம் (Melaka Gallery (Indonesia)) என்பதானது இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் தம்போரா பகுதியினைச் சேர்ந்த ரோ மலாக்காவில் உள்ள மேலகா கலையைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1][2]

ரோ மலாக்கா[தொகு]

ரோ மலாக்காவின் என்ற பெயர் அமைந்தது இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. முதல் கருத்து சதுப்புநிலத்தினைக் குறிக்கின்ற இரண்டு சொற்களிலிருந்து ("சதுப்பு நிலத்திற்கு இந்தோனேசிய)) மற்றும் மலாக்கா (இந்திய நெல்லிக்காய்க்கான இந்தோனேசிய பெயர்) வந்ததாகும். ஆரம்ப காலங்களில், இந்த பகுதி சதுப்பு நிலமாகவும், இந்திய நெல்லிக்காய்கள் நிறைந்ததாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மற்றொரு கருத்து, இந்தப் பெயரானது போர்த்துகீசிய சொற்களான ருவா மலாக்கா (மலாக்கா தெரு) என்பதிலிருந்து உருவானது என்பதாகும். முற்காலத்தில், இப்பகுதியானது படேவியாவில் உள்ள போர்த்துகீசிய கைதிகளைச் சிறைபிடித்து வைக்கின்ற சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் இப்பகுதியானது. சில மாற்றங்களுக்குப் பின்னர் படிப்படியாக ருவா மலாக்கா என அழைக்க ஆரம்ம்பிக்கப்படுகிறது, இறுதியில் ரோவா மலாக்கா ஆனது.[3]

சிறப்பு[தொகு]

மேலகா காட்சிக்கூடம் மேலகா பகுதியில் அமைந்துள்ள, அதிகம் பிரபலமாகாத, சிலருக்கே தெரிந்த நிலையில் அமைந்துள்ள அருங்காட்சியகமாகும். அந்நகரின் முக்கியமான சுற்றுலா பகுதியாகக் கருதப்படுகின்ற புகித் பெரிங்கிட் என்ற இடத்திற்கு வெளிப்பகுதியில் இது அமைந்துள்ளது. அப்பகுதியில் அதிகமான அளவில் காலனிய காலத்தைச் சேர்ந்த கட்டடங்களும், மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் அமைந்துள்ளன. இவற்றுள் பெரும்பாலான பகுதிகள் மேலகா அரசாங்கத்தைச் சேர்ந்த அலுவலர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் சில அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவ்வாறாக மாற்றப்பட்ட அருங்காட்சியகங்களில் இந்த காட்சிக்கூடமும் ஒன்றாகத் திகழ்கிறது. வரலாற்றை நேசிக்கின்ற ஆர்வலர்களுக்கு இந்த காட்சிக்கூடம் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.ஆனால் குழந்தைகள் மற்றும் சாதாரண சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த அளவிற்கு ஆர்வத்தை இந்த காட்சிக்கூடம் வழங்கவில்லை. இருப்பினும் மிகவும் பாதுகாக்கப்பட்ட நிலையில் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த கட்டடங்களை இங்கே காணும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது. புகிட் பெரிங்கிட் அமைந்துள்ள பகுதி முழுக்க முழுக்க இப்பகுதியில் காணப்படுகின்ற பிரித்தானிய காலத்திய அரசுக்கட்டடத்திற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது

வரலாறு[தொகு]

மலாக்கா தெருவில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தை புதுப்பித்து இந்த காட்சிக்கூடம் அமைக்கப்பட்டது. இந்த காட்சிக்கூடம் அமைந்துள்ள தெருவின் இருப்பிடமானது அதன் பெயரோடு ஒத்துவருகின்ற நிலையில் தெரிவு செய்யப்பட்டது. மேற்கு ஜகார்த்தா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த காட்சிக்கூடம் கட்டப்பட்டது. இந்த காட்சிக்கூடம் 22 பிப்ரவரி 2013 ஆம் நாளன்று ஜகார்த்தா கவர்னர் ஜோகோ விடோடோ மற்றும் மேலகா முதல்வர் மொஹமட் அலி ருஸ்தம் ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

கட்டிடக்கலை[தொகு]

90மீ 2 தளப் பரப்பளவு கொண்ட கட்டடத்தில் இந்த காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது  

காட்சிப்பொருள்கள்[தொகு]

இந்த காட்சிக்கூடத்தில் மேலகா தொடர்பான படங்கள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் மேலலா தொடர்பான அனைத்தும் காட்சியில் உள்ளன. அவற்றுள் மேலகாவினைச் சேர்ந்த தலைவர்கள், இருப்பிடங்கள், சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவறையும் அவை தொடர்பானவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது மேலகா பற்றிய வரலாற்று மற்றும் கலாச்சார நூல்களையும் சில கைவினைப் பொருட்களையும் காட்சிப் பொருள்களாகக் கொண்டு அமைந்துள்ளது.

பார்வையாளர் நேரம்[தொகு]

மேலகா காட்சிக்கூடமானது திங்கள் கிழமை தவிர அனைத்து நாள்களிலும் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Malaysia Dirikan Galeri Kebudayaan di Jakarta – Tempo Metro". Tempo.
  2. Kompas Cyber Media. "Melawat Melaka Lewat Galeri Melaka". KOMPAS.com.
  3. Roa Malaka பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம், Ensiklopedi Jakarta, © 1995 - 2010 Dinas Komunikasi, Informatika dan Kehumasan Pemprov DKI Jakarta. Diakses 22 September 2010]