மேற்றிசைத் திருப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்றிசைத் திருப்பம்

மேற்திசை திருப்பம் அல்லது நேர்பக்கவாட்டுத் திருப்பம்(Hyponastic response) என்பது இலைகளில் நடக்கும் ஒரு தாவர உடற்செயலியல் ஆகும். இச்செயலானது, ஒரு தாவரம் வளரும் போது, அதில் தோன்றும் இலைகளும், அதன் இலைக்காம்பும், முதலில் செங்குத்தாக, இரு கைகள் குவித்து வணக்கம் சொல்வது போல இருக்கும். இதன் கீழே, அடுத்த இலை அடுக்கு தோன்றும் போது, முதலில் தோன்றிய செங்குத்தான இலையடுக்கானது, பக்கவாட்டில் வளையும்.[1] இச்செயலானது செல்லினுள் நடைபெறும், உயிரணுப்பிரிதல் செயலாலும், தாவரவேதிப்பொருளாலும் நடைபெறுகிறது. குறிப்பாக, எத்திலீன் போன்ற தாவர வளரூக்கிகள், இதற்கு காரணிகளாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.[2] பெரும்பாலான நிலத்தாவரங்களில், இச்செயல் நடைபெறுகிறது. நீர்த்தாவரங்களின் இலைக்காம்புகள் நீளமாகி, அவற்றின் இலைகளின் மேற்பரப்பில் சூரிய ஒளி அதிகம் படும்படி செய்கிறது. இச்செயலுக்கு இத்திருப்புவிசை அதிகத் தொடர்புடையதாக உள்ளது. மேலும், தாவரங்கள் தயாரிக்கும் எத்திலீன், காற்றில் இதனால் அதிகம் கலக்கிறது. இலைகள் மேற்பரப்பில் வராவிட்டாலும், சில நீர்த்தாவரங்களில், எத்திலீன் காற்றில் கலப்பது நடப்பதாக, ஆய்வுக்கூடச் சோதனைகள் தெரிவிக்கின்றன.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்றிசைத்_திருப்பம்&oldid=2747414" இலிருந்து மீள்விக்கப்பட்டது