உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்க நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கு வங்க நாள்
கடைப்பிடிப்போர்மேற்கு வங்க மக்கள்
வகைபொது (மேற்கு வங்காளம்)
நாள்20 சூன்
நிகழ்வுஆண்டு

மேற்கு வங்க நாள் (West Bengal Day) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் அதிகாரப்பூர்வ மாநில நாளாகும். வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தை ஒரு தனி மாநிலமாக உருவாக்க வழிவகுத்த, 1947 ஆம் ஆண்டு வங்காள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சூன் 20 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியம், வரலாறு மற்றும் சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது. மேற்கு வங்கத்தின் சமூக, இலக்கிய மற்றும் கலைப் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்காக, கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்களின் பொது உரைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது ஒரு பொது விடுமுறை நாள் அல்ல என்றாலும், மேற்கு வங்க தினம் அதன் தனித்துவமான அடையாளம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் மற்றும் அனுசரிப்புகளுடன் கொண்டாடப்படுகிறது.[1][2][3][4][5][6]

வரலாறு

[தொகு]

18 ஆகத்து 2023 அன்று, சட்டமன்ற சபாநாயகர் பிமன் பானர்ஜி, மேற்கு வங்க தின நிர்ணயக் குழுவை அதிகாரப்பூர்வமாக உருவாக்கினார்.[7][8] .மேற்கு வங்க நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான ஒரு முன்மொழிவு ஆகத்து 2023 இல் மேற்கு வங்க சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.[6] நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, ஆகத்து 22 அன்று, வங்காள நாட்காட்டியின் (அசல் பதிப்பு) 1வது போயிசாக் அல்லது பொகேலா போயிசாக் (ஏப்ரல் 14/15) தேதியை அதிகாரப்பூர்வ மேற்கு வங்க நாளாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. PR, ANI; ThePrint (2025-06-21). "Raj Bhavan Telangana organizes West Bengal Foundation Day : Governor Shri Jishnu Dev Varma felicitates Bengali Pride in Hyderabad: Abhijeeth Bhattacharjee". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-06-24.
  2. "West Bengal day, 20 june".
  3. "20th June, why important for Bengal?".
  4. "সরকারি 'পশ্চিমবঙ্গ দিবস' পাবে বাংলা, একই দিনে জোড়া উৎসবের সুপারিশ, সিলমোহর দেবেন মমতা". Anandabazar (in Bengali). Kolkata: Anandabazar Patrika. 21 August 2023. Archived from the original on 21 August 2023. Retrieved 22 August 2023.
  5. "Committee to determine celebration day of Paschimbanga Divas". www.millenniumpost.in. Kolkata. 20 August 2023. Archived from the original on 22 August 2023. Retrieved 22 August 2023.
  6. 1 2 "Bengal government picks Poila Baisakh as state day to counter BJP's June 20 commemoration". www.telegraphindia.com. The Telegraph India. Archived from the original on 22 August 2023. Retrieved 22 August 2023.
  7. "রাজ্যের 'প্রতিষ্ঠা দিবসে'র খোঁজে এ বার শাসকও". Anandabazar (in Bengali). Kolkata: Anandabazar Patrika. 19 August 2023. Archived from the original on 22 August 2023. Retrieved 22 August 2023.
  8. Apromeya Datta Gupta (19 August 2023). "'‌পশ্চিমবঙ্গ দিবস' কবে পালন করা হবে?‌ তৃণমূলের বিকল্প তারিখ, কমিটি গড়লেন অধ্যক্ষ". bangla.hindustantimes.com (in Bengali). Hindustan Times - Bangla. Archived from the original on 22 August 2023. Retrieved 22 August 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_வங்க_நாள்&oldid=4511346" இலிருந்து மீள்விக்கப்பட்டது