மேற்கு பப்புவா
மேற்கு பப்புவா
West Papua | |
---|---|
Province of West Papua Provinsi Papua Barat | |
![]() | |
குறிக்கோளுரை: எனது அன்பு, எனது நாடு | |
![]() மேற்கு பப்புவா அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 0°52′S 134°5′E / 0.867°S 134.083°E | |
நாடு | ![]() |
பகுதி | ![]() |
மாகாணம் | மேற்கு பப்புவா |
தலைநகரம் | மனோக்குவாரி |
முன்னாள் தொகுதி | சொரோங் |
அரசு | |
• துணை ஆளுநர் | முகமது லகோதனி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,40,375.62 km2 (54,199.33 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5வது இடம் |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 8,77,437 |
• அடர்த்தி | 6.3/km2 (16/sq mi) |
மக்கள் தொகையியல் | |
• இனக்குழுக்கள் | மெலனேசிய மக்கள், பாப்புவானிய மக்கள் (51.5%), ஜாவானிய மக்கள் (14.8%), புக்கி மக்கள் (5.3%), அம்போனிய மக்கள் (4.4%), புட்டோனிய மக்கள், (4.1%), மகாஸ்சர் மக்கள்(2.3%), கேய் மக்கள் (2.2%), தெராஜா மக்கள் (1.8%), மினாசா மக்கள் (1.8%), செரம் மக்கள் (1.3%), பிளோர் மக்கள் (1%), சூடானிய மக்கள் (1%), பதக் மக்கள் (1%), தெர்னெட் மக்கள் (0.9%), சீனர்கள் (0.3%), பிறர்: 8.3% |
• சமயம் | கிறித்துவம் (60.80%), இசுலாம் (38.4%), இந்து சமயம் (0.11%), பௌத்தம் (0.08%) |
• மொழிகள் | இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி) |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +9 |
வாகனப் பதிவு | வாகனக் குறியீட்டென் - PB |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | ![]() |
HDI rank | 33வது இடம் ஆ(2016) |
இணையதளம் | PapuaBaratProv.go.id |
மேற்கு பப்புவா (West Papua; இந்தோனேசியம்: Papua Barat) இந்தோனேசியாவின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். நியூ கினி தீவின் மேற்கில் மேற்கு பாப்புவா மாகாணம் அமைந்துள்ளது. மேற்கு பாப்புவாவின் தலைநகரம் மனோக்குவாரி என்றாலும், பெரிய நகரமாக சோரோங் உள்ளது. இந்த மாகாணம் 2003-இல் நிறுவப்பட்டது. இது ஒரு தீவு மாகாணம் ஆகும். இந்த மாநிலத்தில் புன்சாக் ஜெயா எரிமலை உள்ளது.
2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மேற்கு பாப்புவாவின் மக்கள்தொகை 7,60,855 ஆகும்.[1]
இதன் அதிக நிலப்பரப்புகள் தெற்கு அரைக்கோளத்திலும், சிறிதளவு பகுதிகள் வடக்கு அரைக்கோளத்திலும் பரவியுள்ளது. மேற்கு பாப்புவா மாகாணத்தின் கிழக்கே பப்புவா நியூ கினி நாடு உள்ளது.[2]
2014-இல் மாநிலத்தின் மக்கள் தொகை 877,437 ஆக இருந்தது.[1] இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தன் மாகாணத்திற்கு அடுத்து, மேற்கு பாப்புவா மாகாணம் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டுள்ளது.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]2010-இல் மேற்கு பாப்புவா மாகாணம்; 13 பிராந்தியங்களாகவும், 155 மாவட்டங்களாகவும், தன்னாட்சி கொண்ட நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
பெயர் | பரப்பளவு (km2) | மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டு 2010 |
மக்கள் தொகை 2014ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி |
தலைநகரம் | மாவட்டங்களின் எண்ணிக்கை |
HDI rank[4] 2014 மதிப்பீடு |
---|---|---|---|---|---|---|
சொராங் நகரம் | 656.64 | 190,625 | 219,958 | சொராங் | 6 | 0.757 (High) |
பக்பக் மண்டலம் | 11,036.48 | 66,828 | 77,112 | பக்பக் | 9 | 0.647 (Medium) |
கைமனா மண்டலம் | 16,241.84 | 46,249 | 53,366 | கைமனா | 7 | 0.610 (Medium) |
மனோக்வரி மண்டலம் | 11,674.76 | 187,726 | 216,614 | மனோக்வரி | 29 | 0.693 (Medium) |
தென் மனோக்வரி செலதான் மண்டலம் | 2,812.44 | 18,564 | * | ரண்சிக்கி | 0.553 (Low) | |
மெப்பிராத் மண்டலம் | 5,461.69 | 33,081 | 38,067 | குமுர்கேக் | 11 | 0.553 (Low) |
ஆர்பக் மலை மண்டலம் | 2,773.74 | 23,877 | * | அங்க்கி | 0.536 (Low) | |
ராஜ அம்பத் மண்டலம் | 8,034.44 | 42,507 | 49,048 | வைசாய் | 17 | 0.608 (Medium) |
சொராங் மண்டலம் | 7,415.29 | 70,619 | 81,486 | ஐமாஸ் | 18 | 0.612 (Medium) |
தெற்கு சொராங் மண்டலம் | 3,946.94 | 37,900 | 43,898 | தெமினாபுவன் | 14 | 0.582 (Low) |
தம்பிராவு மண்டலம்[5] | 5,179.65 | 6,144 | 7,028 | பெப் | 7 | 0.494 (Low) |
தெலுக் பிண்டுனி மண்டலம் | 20,840.83 | 52,422 | 60,489 | பிண்டுனி | 24 | 0.604 (Medium) |
தெலுக் ஒண்டமா மண்டலம் | 3,959.53 | 26,321 | 30,371 | ரசியய் | 13 | 0.562 (Low) |
மக்கள் தொகையியல்
[தொகு]ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1971 | 1,92,146 | — |
1980 | 2,83,493 | +47.5% |
1990 | 3,85,509 | +36.0% |
2000 | 5,71,107 | +48.1% |
2010 | 7,60,422 | +33.1% |
Source: Statistics Indonesia 2010. 2004 முடிய பாப்புவா மாகாணத்தின் ஒரு பகுதியாக மேற்கு பாப்புவா மாகாணம் இருந்தது. |
இதனையும் காண்க
[தொகு]- நியூ கினி தீவு
- புன்சாக் ஜெயா மலை
- கலிமந்தன்
அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-24. Retrieved 2018-01-07.
- ↑ Papua New Guinea country profile
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ "Indeks-Pembangunan-Manusia-2014". Archived from the original on 2016-11-10. Retrieved 2018-01-07.
- ↑ Undang-Undang Nomor 56 Tahun 2008 tentang Pembentukan Kabupaten Tambrauw di Provinsi Papua Barat பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (Law Number 56 of 2008 regarding the Formation of Tambrauw Regency in West Papua Province). In Indonesian.
- ↑ "Population by Region and Religion in Indonesia". BPS. 2010.