உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு நுசா தெங்காரா

ஆள்கூறுகள்: 8°35′S 116°7′E / 8.583°S 116.117°E / -8.583; 116.117
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு நுசா தெங்காரா
Nusa Tenggara Barat
Province of West Nusa Tenggara
Provinsi Nusa Tenggara Barat
மாதரம் நகரம்
லொம்போக் சின்னம்
கிலி திரவாங்கான்
சங்கேயாங் மலை
மேற்கு நுசா தெங்காரா -இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மேற்கு நுசா தெங்காரா
சின்னம்
மேற்கு நுசா தெங்காரா அமைவிடம்
Map
மேற்கு நுசா தெங்காரா is located in இந்தோனேசியா
மேற்கு நுசா தெங்காரா
      மேற்கு நுசா தெங்காரா

ஆள்கூறுகள்: 8°35′S 116°7′E / 8.583°S 116.117°E / -8.583; 116.117
பகுதிசுண்டா தீவுகள்
மாநிலம்மேற்கு நுசா தெங்காரா
தலைநகரம்மாதரம்
பரப்பளவு
 • மொத்தம்19,675.89 km2 (7,596.90 sq mi)
உயர் புள்ளி3,727 m (12,228 ft)
மக்கள்தொகை
 (2024)[1]
 • மொத்தம்56,46,000
 • அடர்த்தி290/km2 (740/sq mi)
மக்கள் தொகை
 • இனக்குழுக்கள்[2]56% சாசாக்; 14% பீமா; 12% பாலி மக்கள்; 8% சும்பாவா மக்கள்; 3% டோம்புவான்; 2% ஜாவானியர் [3]
 • சமயம் (2023) [4]96.88% இசுலாம்
2.38% இந்து சமயம்
0.74% வேறு
 • மொழிகள்இந்தோனேசிய மொழி
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +7
HDI (2024)Increase 0.731[5]
இணையதளம்ntbprov.go.id

மேற்கு நுசா தெங்காரா; (ஆங்கிலம்: West Nusa Tenggara; இந்தோனேசியம்: Nusa Tenggara Barat) என்பது இந்தோனேசியா, சுண்டா தீவுகளில் உள்ள ஒரு மாநிலம்; இதன் தலைநகரம் மாதரம். இது சுண்டா தீவுகளின் மேற்குப் பகுதியை உள்ளடக்கியது. ஆனால் அதில் பாலி சேர்க்கப்படவில்லை. ஏனெனில் பாலி என்பது தனி ஒரு மாநிலம் ஆகும்.

இந்த மாநிலத்தின் பரப்பளவு 19,675.89 கிமீ2 (7,596.90 சதுர மைல்) ஆகும். இது இரண்டு முக்கிய தீவுகளைக் கொண்டுள்ளது; அதாவது லோம்போக் தீவு; சும்பாவா தீவு; மற்றும் பல சிறிய தீவுகள்.[6]

இந்த மாநிலத்தில் உள்ள இரண்டு தீவுகள்; மேற்கில் அதிக மக்கள் தொகை கொண்ட லோம்போக் தீவு; கிழக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட சும்பாவா தீவு ஆகும். லோம்போக்கில் உள்ள மாதரம், மாநிலத்தின் தலைநகரம்; மற்றும் மிகப்பெரிய நகரமாகும். இந்த மாநிலம் மேற்கில் பாலி தீவுடனும், கிழக்கில் கிழக்கு நுசா தெங்காராவுடனும் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

புவியியல்

[தொகு]

புவியியல் ரீதியாக, மேற்கு நுசா தெங்காரா மாநிலம், குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு லோம்போக்கில் ஒரு தட்டையான கடற்கரைப் பகுதியாகவும்; மாநிலத்தின் மிக உயரமான மலையான 3,726 மீட்டர் உயரமுள்ள ரிஞ்சனி மலையை உள்ளடக்கிய ஒரு மலைப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

ரிஞ்சனி மலை ஒரு செயல்நிலை எரிமலையாகவும், மிகவும் பிரபலமான இயற்கைச் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. சும்பாவா தீவில், அதன் நிலப்பரப்பு மிகவும் மாறுபட்டது; செங்குத்தான மலைகளும் மற்றும் கிழக்கில் வறண்ட புல்வெளிகளும் உள்ளன.[7]

உள்ளூர் பழக்கவழக்கங்கள்

[தொகு]

இந்த மாநிலம் சுமார் 5.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கடலோரப் பகுதிகளிலும், லோம்போக் தீவில் அமைந்துள்ள மாகாணத் தலைநகரான மாதரம் போன்ற பெரிய நகரங்களிலும் வாழ்கின்றனர்.[8]

மேற்கு நுசா தெங்காரா மாநிலம், லோம்போக்கில் சசாக் கலாசாரத்திற்கும்; சும்பாவாவில் சமாவா மற்றும் எம்போஜோ கலாசாரத்திற்கும் பெயர் பெற்றது. இந்த இரு இடங்களும் இன்னும் தங்கள் உள்ளூர் பழக்கவழக்கங்களையும் கலைகளையும் பேணி வருகின்றன.

பவளப்பாறைகள்

[தொகு]
தம்போரா எரிமலை
பீமா சுல்தானகத்தின் அரச முடி

மேற்கு நுசா தெங்காரா மாநிலம் அதன் இயற்கை சூழலுக்கும் பெயர் பெற்றது. லோம்போக்கில் உள்ள கூத்தா கடற்கரை (Kuta Beach); மற்றும் சும்பாவாவில் உள்ள லேக்கி கடற்கரை (Lakey Beach) போன்ற இடங்களுக்குப் பிரபலமானது.

லோம்போக் கடற்கரையில் அமைந்துள்ள கிலி தீவுகள் (Gili Islands), இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும், அவை தெளிவான கடல் நீர் மற்றும் பவளப்பாறைகளுக்கு பெயர் பெற்றவை.[9]

பீமா சுல்தானகம்

[தொகு]

கடற்கரை சுற்றுலாவைத் தவிர, மேற்கு நுசா தெங்காராவில் பாரம்பரிய சசாக் கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை முறையைப் பராமரிக்கும் இடங்களும் உள்ளன. லோம்போக்கில் சேட் கிராமம் (Sade Village), பண்பாட்டு வரலாற்றுத் தளமாக அறியப்படுகிறது.

சும்பாவாவில் உள்ள பீமா சுல்தானகத்தின் (Bima Sultanate) பண்டைய அரண்மனைகளும் சேட் கிராமத்தில் உள்ளன.[10][11]

காலநிலை

[தொகு]

காலநிலையைப் பொறுத்தவரை, மேற்கு நுசா தெங்காரா இரண்டு முக்கிய பருவங்களைக் கொண்ட வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது; அதாவது நவம்பர் முதல் மார்ச் வரை நீடிக்கும் மழைக்கால;ம் மற்றும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை வறண்ட காலம்.[12]

அதன் புவியியல் அமைப்பின் காரணமாக, மேற்கு நுசா தெங்காராவின் பல பகுதிகள், குறிப்பாக சும்பாவாவின் கிழக்குப் பகுதி, குறைந்த மழைப்பொழிவுடன் நீண்ட வறண்ட காலத்தை அனுபவிக்கின்றன. எனவே இந்தப் பகுதி வறண்டதாகவும் தரிசாகவும் இருக்கின்றன.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Provinsi Nusa Tenggara Barat Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.52)
  2. Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape, Institute of Southeast Asian Studies, 2003
  3. Bengkulu Lumbung Nasionalis yang Cair. February 11, 2009.
  4. "Visualisasi Data Kependuduakan - Kementerian Dalam Negeri 2020". www.dukcapil.kemendagri.go.id. Retrieved 14 August 2021.
  5. "Indeks Pembangunan Manusia 2024" (in இந்தோனேஷியன்). Statistics Indonesia. 2024. Retrieved 15 November 2024.
  6. Nusa Tenggara Barat, BPS Provinsi (28 February 2024). Provinsi Nusa Tenggara Barat Dalam Angka 2024 [Nusa Tenggara Barat Province in Figures 2024]. Nusa Tenggara Barat: BPS Provinsi Nusa Tenggara Barat. p. 7.
  7. "Peraturan Daerah tentang Pengelolaan Lingkungan Hidup" (PDF). JDIH NTB. Retrieved 2 September 2024.
  8. "Population Regency/City - Statistical Data - BPS-Statistics Indonesia Nusa Tenggara Barat Province". ntb.bps.go.id. Retrieved 2024-09-02.
  9. "Gili Islands Dive Sites". Manta Dive (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2024-09-10.
  10. "Ekowisata di Desa Sade" (in ஆங்கிலம்). Retrieved 2024-09-02.
  11. artanegara (2020-02-17). "Kegiatan Studi Teknis Arkeologi Di Istana Kesultanan Bima". Balai Pelestarian Cagar Budaya Bali. Retrieved 2024-09-03.
  12. "West Nusa Tenggara Weather and Climate". Weather and Climate. Retrieved 2 September 2024.

சான்றுகள்

[தொகு]
  • Reid, Anthony (ed.). 1995. Witnesses to Sumatra: A traveller's anthology. Kuala Lumpur: Oxford University Press. pp. 125–133.
    • Reprints of British-era primary source material
  • Wilkinson, R.J. 1938. Bencoolen. Journal of the Malayan Branch Royal Asiatic Society. 16(1): 127–133.
    • Overview of the British experience in Bencoolen

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_நுசா_தெங்காரா&oldid=4276275" இலிருந்து மீள்விக்கப்பட்டது