மேற்குவங்க முற்போக்கு முசுலிம் லீக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்குவங்க முற்போக்கு முசுலிம் லீக்கு (Progressive Muslim League (West Bengal) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஓர் அரசியல் கட்சியாக இருந்தது. 1969 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இக்கட்சி உருவானது. மேற்கு வங்க சட்டமன்றத்தில் கட்சி மூன்று இடங்களை வென்றது; நவோடாவில் நசிருதீன் கான், அரிகர்பராவில் அகமது அக்புதீன் மற்றும் தேகங்காவில் ஆருன்-ஆர்-ரசீத். ஆகியோர் வெற்றி பெற்ற உறுப்பினர்களாவர். [1] மொத்தத்தில் கட்சி 280 இடங்களில் 40 இடங்களில் போட்டியிட்டு 208,574 வாக்குகளைப் பெற்றது மாநில அளவிலான வாக்குகளில் இது 1.56% ஆகும். [1] இக்கட்சி மாநிலத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் சேராமல், அக்கட்சிக்கு ஆதரவளித்தது.

1971 ஆம் ஆண்டின் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் கட்சி இரண்டு வேட்பாளர்களை நிறுத்தியது, அவர்களில் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. [2] கட்சி 13,821 வாக்குகள் (0.11%) மட்டுமே பெற்றது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (PDF). Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2016.
  2. 2.0 2.1 "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF). Election Commission. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.