மேரி வார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேரி வார்டு

மேரி வார்டு (Mary Ward) (கிங் எனப்பட்டவர் ; 27 ஏப்பிரல் 1827 – 31 ஆகத்து 1869, அகவை 42,) ஓர் ஆங்கிலேய அயர்லாந்து இயற்கையியலாளரும் வானியலாளரும் எழுத்தாளரும் கலைஞரும் நுண்ணோக்கியாளரும் ஆவார்.[1]

இளமை[தொகு]

இவர் இன்றைய ஒப்பாலி கவுண்டியில் உள்ள பெர்பேனில் 1827 ஏப்பிரல் 27 இல் பிறந்தார். இவரது பிறப்புப் பெயர் மேரி கிங் ஆகும். இவர் என்றி, ஆரியத் என்றியின் மிக இளைய குழவி ஆவார். இவரும் இவரது பெண் உடன்பிறப்புகளும் அக்கால வழக்கப்படி வீட்டிலேயே கல்வி பயின்றனர். இவர் ஓர் அறிவியல் குடும்பத்தில் பிறந்ததால் இவரது கல்வி சற்றே மாறுபட்டு அமைந்தது. இவர் இளம்பருவத்தில் இருந்தே இயற்கையில் ஆர்வம் காட்டியுள்ளார். தன் மூன்றாம் அகவையிலேயே பூச்சிகளைத் திரட்டியுள்ளார்.[2]

மேலும் படிக்க[தொகு]

காண்க, பக்கம் 653, The Field Day Anthology of Irish Writing, Volume IV, Irish Women's Writing and Traditions. Edited by Angela Bourke et al., NYU Press, 2002. The Field Day Anthology of Irish Writing.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ward [née King, Mary [pseud. the Hon. Mrs Ward] (1827–1869), microscopist and author]". Oxford University Press. பார்த்த நாள் 9 March 2017.
  2. "Mary Ward (1827 – 1869)". University Science. மூல முகவரியிலிருந்து 16 April 2005 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_வார்டு&oldid=2742884" இருந்து மீள்விக்கப்பட்டது