உள்ளடக்கத்துக்குச் செல்

மேரி மேப்ஸ் தாட்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி மேப்ஸ் தாட்ஜ்
பிறப்புமேரி எலிசபெத் மேப்ஸ்
(1831-01-26)சனவரி 26, 1831
நியூயார்க்கு நகரம்
இறப்புஆகத்து 21, 1905(1905-08-21) (அகவை 74)
டானெர்ஸ்வில்லி, நியூயார்க்
தொழில்
  • சிறுவர் இலக்கிய எழுத்தாளர்
  • பத்திரிகை ஆசிரியர்
மொழிஆங்கிலம்
தேசியம்அமெரிக்கர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆன்சு பிரிங்கர் அல்லது தி சில்வர் இசுகேட்சு
துணைவர்
வில்லியம் தாட்ஜ்
(தி. 1851; இற. 1858)
பிள்ளைகள்
  • ஜேம்சு மேப்ஸ் தாட்ஜ்
  • ஆரிங்டன் எம். தாட்ஜ்
பெற்றோர்ஜேம்சு ஜே மேப்ஸ்
கையொப்பம்

மேரி எலிசபெத் மேப்ஸ் தாட்ஜ் (சனவரி 26, 1831 – ஆகத்து 21, 1905) என்பவர் ஒரு அமெரிக்கச் சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். இவர் தன் ஆன்சு பிரிங்கர் புதினத்திற்காக அறியப்படுகிறார். இப்புதினக் கதையே தமிழக அரசுப்பள்ளி 10ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில், அணையில் ஏற்பட்ட ஓட்டையைத் தன் விரலைக் கொண்டு அடைக்கும் பீட்டர் என்ற சிறுவனை மையமாகக் கொண்ட பாடமாக பயிற்றுவிக்கப்பட்டது. இவர் 19ஆம் நூற்றாண்டின் 3இல் 1 பங்கு காலத்திற்கு சிறுவர் இலக்கியத்தில் முதன்மை எழுத்தாளராக இருந்தார்.[1]

புனித நிக்கோலசு என்ற இதழில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாட்ஜ் பணியில் இருந்தார். 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் இந்த இதழ் ஒரு வெற்றிகரமான சிறுவர் இதழாக நீடித்தது. இந்த இதழ் கிட்டத்தட்ட 70,000 பிரதிகள் விற்பனையானது. இந்த இதழில் பரிந்துரைத்தல், உருவாக்குதல் மற்றும் பங்களிப்புகளைப் பெறுதல் ஆகிய பணிகளைச் செய்ய இவருக்கு ஆசிரியர்கள் இருந்தனர். எழுத விருப்பமுள்ளவர்களை எழுத வைப்பது இவரது பணியாக இருந்தது.

உலகின் முக்கியமான எழுத்தாளர்கள் பலரை தனது சிறுவர் இதழுக்காக எழுத வைப்பதில் இவர் வெற்றி கண்டார். அவர்களில் முக்கியமானவர்கள் மார்க் டுவெய்ன், லூயிசா மே அல்காட், ஆர். எல். இசுட்டீவன்சன், ஆல்பிரட் டென்னிசன், ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, வில்லியம் கல்லன் பிரையன்ட், ஆலிவர் வென்டெல் ஹோம்ஸ் சீனியர், பிரெட் ஹார்ட், யோவான் ஹே, சார்லசு டுட்லே வார்னர், எலிசபெத் இசுடூவர்டு பெல்ப்சு வார்டு, மற்றும் பலர். ஒரு நாள் இரட்யார்ட் கிப்ளிங் இவரிடம் இந்தியக் காட்டைப் பற்றிய ஒரு கதையைக் கூறினார். தான் தொடர்புடைய புனித நிக்கோலசு இதழுக்காக அக்கதையை எழுதுமாறு தாட்ஜ் கூறினார். கிப்ளிங் அக்கதையை அந்நேரத்தில் எழுதி முடிக்கவில்லை. ஆனால் முயற்சித்தார். அக்கதையே தி ஜங்கிள் புக்.[2]

உசாத்துணை

[தொகு]
  1. Dodge 1905, ப. 1059.
  2. Ellsworth 1919, ப. 89-.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_மேப்ஸ்_தாட்ஜ்&oldid=3438219" இலிருந்து மீள்விக்கப்பட்டது