உள்ளடக்கத்துக்குச் செல்

மேரி மிட்க்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி மிட்க்லி
2002-ல் மிட்க்லி
பிறப்புமேரி ஸ்க்ரட்டன்
(1919-09-13)13 செப்டம்பர் 1919 [1]
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு10 அக்டோபர் 2018(2018-10-10) (அகவை 99)
ஜெஸ்மண்டு, நியூகேஸில், இங்கிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்சோமர்வில் கல்லூரி, ஆக்ஸ்போர்டு (பி.ஏ.)
குறிப்பிடத்தக்க படைப்புகள்பீஸ்ட் அண்டு மேன் (1978)
அனிமல்ஸ் அண்டு வொய் தே மேட்டர் (1983)
எவல்யூஷன் அஸ் எ ரிலிஜியன் (1985)
சயின்ஸ் அஸ் சால்வேஷன் (1992)
வாழ்க்கைத்
துணை
ஜியோஃபரி மிட்க்லி (தி. 1950)
காலம்தற்கால மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிபகுப்பாய்வு மெய்யியல்[2]
முக்கிய ஆர்வங்கள்
நன்னெறி மெய்யியல், விலங்குரிமை, அறிவியலின் மெய்யியல், விலங்கின நடத்தையியல், படிவளர்ச்சிக் கொள்கை

மேரி பீட்ரைஸ் மிட்க்லி (Mary Beatrice Midgley) (திருமணத்திற்கு முந்தைய பெயர்: ஸ்க்ரட்டன் [Scrutton]; 13 செப்டம்பர் 1919–10 அக்டோபர் 2018)[1] ஒரு பிரித்தானிய மெய்யியலாளர் ஆவார். நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் மூத்த மெய்யியல் விரிவுரையாளராக இருந்த இவர் அறிவியல், நெறிமுறையியல், மற்றும் விலங்குரிமை குறித்த தனது பணிகளுக்காக அறியப்படுகிறார். இவர் 1978-ல் தனது ஐம்பதுகளின் பிற்பகுதியில் தனது முதல் புத்தகமான பீஸ்ட் அண்டு மேன் ("மிருகமும் மனிதனும்") எழுதினார். அதன் பின்னர் அனிமல்ஸ் அண்டு வொய் தே மேட்டர் ("விலங்குகளும் ஏன் அவை முக்கியம் என்பதும்") (1983), விக்கெட்னெஸ் ("துற்செயல்") (1984), த எத்திகல் பிரைமேட் ("முறையான முதனி") (1994), எவல்யூஷன் அஸ் எ ரிலிஜியன் ("ஒரு மதமாகப் பரிணாமம்") (1985), மற்றும் சயின்ஸ் அஸ் சால்வேஷன் ("அபயமான அறிவியல்") (1992) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். டர்ஹாம் மற்றும் நியூகேஸில் பல்கலைக்கழகங்களால் அவருக்கு கௌரவ முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. "தி ஆவ்ல் ஆவ் மினெர்வா" என்ற அவரது சுயசரிதை 2005-ல் வெளியிடப்பட்டது.

மிட்க்லி குறைப்புவாதத்தையும் அறிவியல்வாதத்தையும் கடுமையாக எதிர்த்தார். மேலும் அறிவியலை எந்தவொரு வகையிலும் மனிதத்திற்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுவதை எதிர்த்தார். மெய்யியலாளர்கள் இயற்கையிலிருந்தும் குறிப்பாக விலங்குகளிடமிருந்தும் கற்றுக்கொள்ளக் கூடியதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். மனிதர்களை முதன்மையாக ஒரு வகையான விலங்கு என்றே புரிந்து கொள்ள வேண்டும் என்று மிட்க்லி வலியுறுத்தினார். அவரது பல புத்தகங்களும் கட்டுரைகளும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் உள்ளிட்ட பிரபலமான அறிஞர்களின் அறிவியல் கட்டுரைகளில் தோன்றும் தத்துவக் கருத்துக்களை விரிவாக அலசின. கையா கருதுகோளின் தார்மீக விளக்கத்திற்கு ஆதரவாகவும் அவர் எழுதியுள்ளார். மிட்க்லி ஒரு கடும் போராட்ட மெய்யியலாளர் என்றும் இங்கிலாந்தின் "'அறிவியல் பாசாங்குகளுக்கான' சாட்டையடி" என்றும் தி கார்டியன் பத்திரிக்கை இவரை வர்ணித்தது.[3]

இவற்றையும் காண்க

[தொகு]

தரவுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Motyka, John (15 October 2018). "Mary Midgley, 99, Moral Philosopher for the General Reader, Is Dead". The New York Times. Retrieved 16 October 2018. She was born Mary Scrutton on Sept. 13, 1919, in Dulwich, England, to Lesley (Hay) and Tom Scrutton.
  2. 2.0 2.1 Mary Midgley, The Essential Mary Midgley, Routledge, 2005, p. 143.
  3. Brown, Andrew (13 January 2001). "Mary, Mary, quite contrary". The Guardian.

மேற்கோள் தரவுகள்

[தொகு]

இவற்றையும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_மிட்க்லி&oldid=4261844" இலிருந்து மீள்விக்கப்பட்டது