மேரி பெய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேரி பெய்ன் (Mary Bain) என்பவர் ஓர் அமெரிக்க சதுரங்க வீராங்கனையும், சதுரங்க மாசுட்டரும் ஆவார். இவர் 1904 ஆம் ஆண்டு ஆகத்து எட்டாம் தேதி அங்கேரியில் பிறந்தார்.

1937 மற்றும் 1952 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக மகளிர் சதுரங்க போட்டிகளில் இவர் பங்கேற்றார். மேரி அமெரிக்காவின் திட்டமிடப்பட்ட சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆவார்[1].

இவருக்கு சர்வதேச மகளிர் சதுரங்க மாசுட்டர் பட்டம் 1952 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு குரோவாசியா நாட்டில் உள்ள சிபிளிட் நகரில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடில் தனது நாட்டின் சார்பாக கலந்துகொண்டார்.

சிடாக்கோம் நகரில் 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச போட்டியில் ஐந்தாவது இடத்தை பிடித்தார்[2]. இப்போட்டியில் வெரா மென்சிக் முதல் இடத்தைப் பிடித்தார். 1952 ஆம் ஆண்டு மாசுக்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் மேரி பதினான்காவது இடத்தைப் பிடித்தார். எலிசபெத் பைகோவா முதல் இடத்தைப் பிடித்தார். 1951 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க மகளிர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை மேரி பெய்ன் வென்றார்.

இவர் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி நியூயார்கில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Women and Chess". மூல முகவரியிலிருந்து October 28, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-10-26.
  2. World Chess Championship (women) : 1952 Candidates Tournament
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_பெய்ன்&oldid=2960440" இருந்து மீள்விக்கப்பட்டது