மேரி பிராக்டர்
மேரி பிராக்டர் (Mary Proctor) (1862 – செப்டம்பர் 11, 1957) அமெரிக்க மக்கள் வானியல் பரப்புரையாளர் ஆவார்.[1] இவர் தொழில்முறை வானியலாளர் ஆகவில்லை. ஆயினும் வானியல் கட்டுரைகளையும் நூல்களையும் பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[2] இவர் அமெரிக்கராக அறியப்பட்டாலும், இவர் பிரித்தானியர் என 1924 பயணர் பட்டியலில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இளமை
[தொகு]இவர் அயர்லாந்தில் உள்ள டப்ளினில் பிறந்தார்.[3] இவரது தந்தையார் இரிச்சர்டு அந்தோனி பிராக்டர் ஆவார்; தாயார் பெயர் மேரி. இவரது தாயார் 1879 இல் இறந்தார். எனவே உஇவரது தந்தையார் 1881 இல் மறுமணம் செய்துகொண்டார். இவரது குடும்பம் 1882 இல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து மிசிசோரியில் உள்ள செயிண்ட் யோசப்புக்கு சென்று குடியேறியது.[3] இவரது தந்தையார் இலண்டனில் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் புனித ஜான் கள்ளூர்யில் பட்டம் பெற்றவர். இவர் மக்கள் வானியல் பரப்புரையாளரும் விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆவார். மேரி வானியல் அறிவையும் எழுத்தையும் தந்தையாரிடம் இருந்து வரித்துகொண்டார். இளமையிலேயே இவர் தந்தையாரின் நூலகத்திக் கவனிதுக் கொண்டதோடு, அவரது கடிதங்களை அடுக்கிவைப்பார்; அவரதுநூல்களுக்கு மெய்ப்பு திருத்துவார். இவர் 1898இல் இலண்டன் பிரிசெப்டார் கல்லூரியில் தன் பட்ட்த்தைப் பெற்றார்.[2] பிராக்டர் எனும் நிலாக் குழிப்பள்ளமும் இவரது நினைவாகவும் பிராக்டர் எனும் செவ்வாய்க் குழிப்பள்ளமும் இவரது தந்தையாரின் நினைவாகவும் பெயரிடப்பட்டுள்ளன.)[4][5]
வாழ்க்கைப்பணி
[தொகு]பிராக்டர் தன் தந்தையார் தொடங்கிய அறிவு எனும் இதழின் பணியில் தன் பணியைத் தொடங்கினார். இந்த இதழை இவரது தந்தையார் நிறுவி பதிப்பித்து வந்தார். இவர் முதலில் இவ்விதழில் ஒப்பீட்டுத் தொன்மவியலில் தொடர் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பின்னர் இவர் வானியல் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1893 இல் சிகாகோவில் நடந்த உலக்கொலம்பியக் கண்காட்சியில் வெற்றிகறமாகப் பணியாற்றிப் பெயர்பெற்றுள்ளார். இவரது 1898 இல் வெளியிட்ட முதல் நூலாகிய விண்மீன்நாட்டுக் கதைகளை நியூயார்க் நகரக் கள்விக்குழும் ஏற்று பயன்படுத்தியுள்ளது. இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவாறே தனியார் பள்ளிகளில் வானியலைக் கற்பித்துள்ளார்.[2]
பணிகள்
[தொகு]இவர் செய்தாள்களிலும் இதழ்களிலும் பல கட்டுரைகளை வெளியிட்டதோடு பல மக்கள் அறிவியல் நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது கட்டுரைகளும் நூல்களும் இளைஞருக்கானவை ஆகும். இதனால் இவர் இளைஞர் வானியலாளர் என அழைக்கப்பட்டார். இவரது நூல்கள் படிக்க எளியஐ;உள்ளடக்கத்தில் துல்லியமானவை; இவை தகவல்களும் ப்ட விளக்கங்களும் நிரம்பியவை. இவை தொழில்முறை வானியலாளராலும் பராட்டப்பட்டவை. எனவே இவர்1898 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் 1916 இல் அரசு வானியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[2][6]
நூல்தொகைகள்
[தொகு]- Stories Of Starland, 1895.
- Giant Sun And His Family, 1896.
- "Halley's Comet after 75 years rushes Earthward again", San Francisco Call, August 23, 1908.
- Half Hours With The Summer Stars, 1911.
- Legends Of The Stars, 1922.
- The Children's Book Of The Heavens, 1924.
- Evenings With The Stars, 1924.
- Legends Of The Sun And Moon, 1926.
- The Romance Of Comets, 1926.
- The Romance Of The Sun, 1927.
- The Romance Of The Moon, 1928.
- The Romance Of The Planets, 1929.
- Wonders Of The Sky, 1931.
- Our Stars Month By Month, 1937
- M. Proctor and A. C. D. Crommelin, Comets, 1937.
- Everyman's Astronomy 1939.
- Comets, Meteors And Shooting Stars, 1940.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Corresponding Member: Miss Mary Proctor". பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Moore, Patrick (2007). "Proctor, Mary". The biographical encyclopedia of astronomers ([Online-Ausg.]). New York, NY: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387304007.
- ↑ 3.0 3.1 Hoffleit, Dorrit (2001). "The Maria Mitchell Observatory--For Astronomical Research and Public Enlightenment" (pdf). The Journal of the American Association of Variable Star Observer 30 (1): 67. Bibcode: 2001JAVSO..30...62H. http://articles.adsabs.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?2001JAVSO..30...62H&data_type=PDF_HIGH&whole_paper=YES&type=PRINTER&filetype=.pdf.
- ↑ Autostar Suite Astronomer Edition. CD-ROM. Meade, April 2006.
- ↑ Saum, Lewis O. (February 1999). "The Proctor interlude in St. Joseph and in America: Astronomy, romance and tragedy". American Studies International 37 (1): –54. http://www.ianridpath.com/atlases/Proctor_in_America.PDF. பார்த்த நாள்: 24 May 2014.
- ↑ "Proceedings of the American Association for the Advancement of Science, August 1898". Archived from the original on 12 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
மேலும் படிக்க
[தொகு]- Creese, Mary R. S. (1998). Ladies in the laboratory? : American and British women in science, 1800-1900 : a survey of their contributions to research. Lanham, Md.: Scarecrow. pp. 236–238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810832879.
- Lienhard, John H. "Episode no. 2681: Mary Proctor". Engines of our ingenuity. Houston Public Media. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- Mary A. Proctor House of Proctor Genealogy
- Works by மேரி பிராக்டர் at LibriVox (public domain audiobooks)