உள்ளடக்கத்துக்குச் செல்

மேரி என்டியாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி என்டியாய்
2017 இல் என்டியாய்
2017 இல் என்டியாய்
பிறப்பு4 சூன் 1967 (1967-06-04) (அகவை 59)
பித்திவியே, லுவாரே, பிரான்ஸ்
தொழில்புதின எழுத்தாளர், கட்டுரையாளர், நாடகாசிரியர்
காலம்1984–தற்போதுவரை
குறிப்பிடத்தக்க விருதுகள்கோன்கூர் பரிசு (2009); நெல்லி சாக்ஸ் பரிசு (2015)
துணைவர்ஜீன்-ஈவ் செண்ட்ரே
குடும்பத்தினர்பாப் ண்டியாய் (சகோதரர்)

மேரி என்டியாய் (Marie NDiaye, பிறப்பு 4 சூன் 1967) என்பவர் ஒரு பிரெஞ்சு புதின எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தனது 17 வயதில், குவாண்ட் ஓ ரிச் அவெனிர் என்ற தனது முதல் புதினத்தை வெளியிட்டார். 2009 ஆம் ஆண்டில் திராய்ஸ் ஃபெம்ஸ் புயிசாந்தஸ் ( மூன்று வலிமையான பெண்கள் ) என்ற புதினத்துக்காக பிரிக் கோன்கோர்ட் விருதைப் பெற்றார். இவரது பாப்பா டாய்ட் மாங்கர் என்ற நாடகம், காமடி ஃபிரான்சேஸ் நாடகக் குழுவின் நிரந்தர நாடகத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இதுவே அதில் இடம்பெற்ற உயிருடன் இருக்கும் ஒரு பெண் எழுத்தாளரின் ஒரே நாடகமாகும். 2022-ஆம் ஆண்டு வெளியான செயின்ட் ஓமர் என்ற சட்ட நாடகத்தின் திரைக்கதையை அதன் இயக்குனர் ஆலிஸ் டியோப் மற்றும் அம்ரிதா டேவிட் ஆகியோருடன் இணைந்து இவர் எழுதினார். 2022 செப்டம்பரில், 95வது அகாதமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பிரான்சின் அதிகாரப்பூர்வ தேர்வாக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. [1] ஜோர்டான் ஸ்டம்ப் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட இவரது தி விட்ச் புதினத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு 2026 ஆண்டுக்கான, சர்வதேச புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. [2]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

என்டியாய் 1967 இல் பிரான்சின் பிதிவியர்ஸில் ஒரு பிரெஞ்சு தாய்க்கும் ஒரு செனகல் தந்தைக்கும் பிறந்தார். இவர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் தன் தாய் மற்றும் சகோதரர் பாப் என்டியாயுடன் வளர்ந்தார். இவரின் பெற்றோர் 1960களின் நடுப்பகுதியில் மாணவர்களாக இருந்தபோது சந்தித்தனர். ஆனால் இவருக்கு ஒரு வயதாக இருந்தபோது இவரின் தந்தை செனகலுக்குச் சென்றுவிட்டார். [3]

இவர் தனது 12 வயதில் எழுதத் தொடங்கினார். உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டில் பயின்றுகொண்டிருந்தபோது, எடிஷன்ஸ் டி மினூட் பதிப்பகத்தின் நிறுவனர் ஜெரோம் லிண்டன் என்பவரால் இவரது எழுத்தாற்றல் அளையாளம் காணப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் இவரது முதல் புதினமான குவாண்ட் ஓ ரிச் அவெனிரை அவர் வெளியிட்டார். [4]

அதன்பிறகு மேலும் ஆறு புதினங்களை எழுதினார். அவை அனைத்தும் மினூட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. மேலும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதினார். மேலும், ஒரே ஒரு வாக்கியத்தால் மட்டுமே ஆன, 200 பக்கங்கள் கொண்ட காமெடி கிளாசிக் என்னும் புதினத்தையும் எழுதினார். இவரின் 21 வயதில், 1988-இல் எடிஷன்ஸ் போல் பதிப்பகத்தால் இது வெளியிடப்பட்டது. என்டியாய் பல நாடகங்களையும் எழுதியுள்ளார். இவர் ஒயிட் மெட்டீரியல் என்ற திரைப்படத்திற்கான திரைக்கதையை இயக்குநர் கிளேர் டெனிசுடன் இணைந்து எழுதியுள்ளார். என்டியாயின் 2003-ஆம் ஆண்டு நாடகமான பாப்பா துவா மாங்கர் காமடி பிரான்சேஸ் நாடகக் குழுவின் நிரந்தர நாடகப் பட்டியலில் இடம்பெற்ற, ஒரு பெண் எழுத்தாளரின் இரண்டாவது நாடகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

1998 ஆம் ஆண்டில், என்டியாய் பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட தனது புதினமான லா சோர்சியர், வெற்றிகரமான எழுத்தாளரான மேரி டாரியூசெக்கின் இரண்டாவது புதினமான நைசான்ஸ் டெஸ் ஃபாண்டோம்ஸின் உள்ளடக்கத்தை வெகுவாகப் பாதித்திருப்பதாக வாதிட்டார். [5]

என்டியாயின் புதினமான டிராய்ஸ் ஃபெம்ஸ் புய்ஸான்டெஸ் 2009 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் கோன்கோர்ட் விருதைப் பெற்றது. [6] 2013 ஆம் ஆண்டில் இவரைப் பற்றிய தனது விமர்சன ஆய்வான, மேரி என்டியா: வெற்றுத்தன்மை மற்றும் அங்கீகாரம் என்பதில், பிரித்தானிய கல்வியாளர் ஆண்ட்ரூ அசிபாங் இவரை "ஒரு குறிப்பிட்ட வகையான பண்பாட்டு மேதைமையின் உருவகம்" என்று விவரிக்கிறார். இவரின் அதிர்ச்சி மற்றும் மறுதலிப்பு பற்றிய தனது உளவியல் பகுப்பாய்வில், "என்டியாயின் படைப்பு, ஒருவரின் உணரும் மற்றும் அறியும் திறனுக்கு இழைக்கப்படும் வன்முறையை ஆராய்கிறது" என்று அவர் கூறுகிறார்.

2026 ஆம் ஆண்டில், ஜோர்டான் ஸ்டம்ப் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது புதினமான தி விட்ச், சர்வதேச புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. [7] 2013 ஆம் ஆண்டில் என்டியாய் தனது ஒட்டுமொத்த படைப்புகளுக்காகவும் அப்பரிசுக்கான இறுதித் தேர்வில் இடம்பெற்றார். [7]

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]

படைப்புகள்

[தொகு]

புதினங்களும் சிறுகதைகளும்

[தொகு]

நாடகங்கள்

[தொகு]

சிறார் புதினங்கள்

[தொகு]

கட்டுரைகள்

[தொகு]

திரைக்கதை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roxborough, Scott (23 September 2022). "Oscars: France Picks 'Saint Omer' as International Feature Submission". The Hollywood Reporter (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2 November 2022.
  2. "The International Booker Prize 2026". The Booker Prizes. Retrieved 25 February 2026.
  3. Cappelle, Laura (2023-10-18). "Marie NDiaye Raises Questions She Has No Intention of Answering". த நியூயார்க் டைம்ஸ். பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2023/10/18/books/booksupdate/marie-ndiaye-vengenance-is-mine.html.
  4. Rérolle, Raphaëlle (3 November 2009). "Libre d'écrire". Le Monde. https://www.lemonde.fr/livres/article/2009/11/03/marie-ndiaye-prix-goncourt-une-force-de-l-ecriture_1261954_3260.html#ens_id=1237690.
  5. de Gaudemar, Antoine (3 March 1998). "Marie NDiaye polémique avec Marie Darrieussecq". லிபரேஷன் (நாளிதழ்). Retrieved 6 June 2025.
  6. Rousseau, Ingrid (2 November 2009). "Novelist NDiaye wins France's top literary prize". Seattle Times. https://www.seattletimes.com/nation-world/novelist-ndiaye-wins-frances-top-literary-prize/.
  7. 1 2 3 Marshall, Alex (31 March 2026). "International Booker Prize Shortlist: 6 Novels With ‘Burning Humanity’". The New York Times. https://www.nytimes.com/2026/03/31/books/international-booker-prize-shortlist.html.
  8. "Marie N'Diaye erhält Nelly-Sachs-Preis". dortmund.de (in German). 7 September 2015. Retrieved 8 September 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "The Man Booker International Prize 2016 Longlist Announced", The Man Booker Prizes, 2016.
  10. "Marie NDiaye" பரணிடப்பட்டது 25 சூலை 2016 at the வந்தவழி இயந்திரம், The Man Booker Prizes.
  11. "The 2017 BTBA Finalists for Fiction and Poetry", The Millions, 18 April 2017.
  12. Williams, Mark (5 April 2018), "2018 International DUBLIN Literary Award shortlist announced", The New Publishing Standard.
  13. Cudjoe, Selwyn (6 April 2019). "New daughters of Africa". Trinidad and Tobago Express. Retrieved 6 June 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_என்டியாய்&oldid=4521877" இலிருந்து மீள்விக்கப்பட்டது