மேரி-லூயிஸ் கோலிரோ பிரேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
மேரி-லூயிஸ் கோலிரோ பிரேகா
2017 இல் பிரேகா
மால்ட்டாவின் 9வது அதிபர்

மேரி-லூயிஸ் கோலிரோ பிரேகா, ( Marie-Louise Coleiro Preca ) (பிறப்பு 7 டிசம்பர் 1958) மால்ட்டாவை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2014 முதல் 2019 வரை மால்டாவின் அதிபராகப் பணியாற்றினார். 2019 முதல் யூரோசைல்ட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

முன்னதாக, தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக, 1998 முதல் 2014 வரை மால்டாவின் பிரதிநிதிகள் சபையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் [1] பிரதம மந்திரி ஜோசப் மஸ்கட்டின் கீழ் 2013 முதல் 2014 வரை குடும்பம் மற்றும் சமூக ஒற்றுமைக்கான அமைச்சராக பணியாற்றினார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

கோர்மியில் பிறந்த கோலிரோ பிரேகா மால்டா பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு சட்ட மற்றும் மனிதநேய ஆய்வுகள் (சர்வதேச ஆய்வுகள்) மற்றும் பத்திரத் துறை பதிவாளருக்கான பட்டம் பெற்றார். [2]

தொழிலாளர் கட்சிக்குள், அதன் நிர்வாக குழுவிலும் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், உதவிப் பொதுச் செயலாளராகவும், பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். மால்டா அரசியல் கட்சியில் இவ்வளவு உயர் பதவியில் பணியாற்றிய ஒரே பெண் இவர்தான். இந்த பதவிகளுக்கு கூடுதலாக, கோலிரோ பிரேகா சோசலிச இளைஞர்களின் தேசிய பணியகத்தின் உறுப்பினராகவும் (தற்போது தொழிலாளர் இளைஞர் மன்றம் ), கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராகவும் (1996-2001) இருந்தார். [3]

1998 முதல் 2014 வரை மால்டா நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2008 பொதுத் தேர்தலில் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊறுப்பினராவார். ஒரு எதிர்க்கட்சி உறுப்பினராக கோலிரோ பிரேகா சமூகக் கொள்கைக்கான நிழல் அமைச்சராகவும், 1998 இல் தொடங்கி சமூக விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிரந்தரக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார் [4]

2008 இல் ஆல்ஃபிரட் சான்ட் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு, கொலிரோ பிரேகா தலைமைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [5] இவர் 2008 முதல் 2013 வரை ஐரோப்பிய அமைப்பின் பாராளுமன்ற சட்டசபைக்கான மால்டா பிரதிநிதிகளின் குழுவில் பணியாற்றினார் [2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]