மேந்தலைச் செலவு
வணிகத்தில் மேந்தலைகள் அல்லது மேந்தலைச் செலவுகள் (overhead cost) என குறிப்பிடப்படுவது, வணிக செயற்பாட்டு நடவடிக்கையின்பொழுது ஏற்படும் நிலையான செலவுகளை (Fixed cost) ஆகும்.
கிரயக் கணக்கீட்டிலும்,பொருளொன்றின் விலையினை தீர்மானிப்பதற்கும் வணிக நடவடிக்கைகளின் போது ஏற்படும் செலவுகளை பகுத்து ஆய்வு செய்வது அவசியமாகும். அந்த வகையில் ஏற்படும் செலவுகளை நேர்ச் செலவுகள்,நேரில் செலவுகள் என இரண்டாக வகைப்பிரிக்கலாம்.இதில் நிலையான நேரில் செலவுகளே மேந்தலைகள் ஆகும்.
எடுத்துக்காட்டாக பொருளொன்றின் உற்பத்தி நடவடிக்கையில் அதில் நேரடியாக ஈடுபடும் ஊழியரது சம்பளம் நேர்ச் செலவாகும்,ஆனால் இதனை மேற்பார்வை செய்யும் முகாமையாளரது சம்பளம் நேரில் செலவாகும் அதாவது மேந்தலையாகும்.பொதுவாக மேந்தலைகளாக குறிப்பிடப்படுவது,வாடகை,அலுவலக மின்சாரம்,காப்புறுதி போன்றனவாகும்.[1][2][3]
மேந்தலைகள் தொடர்பான செலவுகள் உற்பத்தி பொருட்களின் நேர்கிரயங்களோடு மேந்தலை உறிஞ்சல்,மேந்தலை பகிர்தல் அல்லது மேந்தலை ஒதுக்கம் மூலம் சேர்த்து கூட்டப்பட்டு மொத்தச்செலவு கணிக்கப்படும்.இதன் அடிப்படையிலே விலை தீர்மானம்,முகாமை தீர்மானங்கள் துணியப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PMO and Project Management Dictionary - PM Hut". www.pmhut.com. Retrieved 2015-10-26.
- ↑ "What is overhead? - Questions & Answers - AccountingTools". www.accountingtools.com. Retrieved 2015-10-26.
- ↑ "Calculating overhead and price | Missouri Business Development Program". missouribusiness.net. Archived from the original on 2019-03-07. Retrieved 2015-10-26.