உள்ளடக்கத்துக்குச் செல்

மேடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவசர உதவி சமிக்ஞை

மேடே (Mayday) என்கிற வார்த்தை வானூர்தி, கப்பல் மற்றும் பிற போக்குவரத்தில் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆபத்து கால குறியீட்டு வார்த்தை ஆகும்.

இந்த 'Mayday' என்கிற வார்த்தை 'm'aider' என்கிற பிரெஞ்சு வார்த்தையிலிருந்தே பிறந்தது[1]. இதற்கு 'உதவி செய்யுங்கள்' (help me) எனப் பொருள்.

இயந்திரக் கோளாறு, தீ விபத்து, வானூர்திக் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை போன்ற கையை மீறி செல்லும் அவசரச் சூழல்களில் வானூர்தி ஓட்டிகள் கட்டுப்பாட்டு அறைக்கு 'மேடே, மேடே, மேடே' ('Mayday, Mayday, Mayday') என மூன்று முறை தகவல் சொல்வார்கள். இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒட்டுமொத்த கவனமும் அந்த வானூர்தியின் மீது குவிக்கப்படும். அவசரக் காலங்களில் என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமோ அதையெல்லாம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செய்துவிடுவார்கள். மருத்துவக்குழுவினர், மீட்புப்படையினர் என எல்லாருமே தயாராகிவிடுவார்கள்.

தொலைபேசியில் அல்லது வானொலியில் படகு/வானூர்தியின் பெயர், அதன் தற்போதைய இடம், என்ன தடுமாற்றம், இதில் எத்தனை பேர் இருக்கிறார்கள், மற்றும் என்ன உதவி தேவை என்பது போன்ற விவரங்கள் கூறப்பட வேண்டும். தவறாகப் பயன்படுத்தினால் அது குற்றம், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உதாரணமாக, அமெரிக்காவில் 6 ஆண்டுகள் வரை சிறை, $250,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

எஸ்ஓஎஸ்‑ஐப் பின்பற்றுவதற்குப் பதிலாக வாய்மொழி முறையில் எளிதாக புரிந்துகொள்வதற்காகவே 'மேடே' என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது.

லண்டன் வானூர்தி நிலையத்தைச் சேர்ந்த ரேடியோ ஆபிசர் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி மாக்ஃபோர்ட் என்பவரே இதை அறிமுகப்படுத்தினார். 1927 முதல் அவசரகால குறியீட்டு அழைப்பாக இந்த 'மேடே' என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு கடல்சார் உதாரணம்: 1980 மே 9-ம் தேதி, சமிட் வெஞ்சர் கப்பல், அமெரிக்காவின் முக்கிய பாலமான சன்ஷைன் ஸ்கைவே பாலம் (Sunshine Skyway Bridge) மீது மோதி விழுந்தது. பாலத்தில் மோதியபோது சம்மிட் வென்ச்சர் செய்த உண்மையான அவசர உதவி சமிக்ஞை 'மேடே' அழைப்பு.

சமீபத்திய நிகழ்ச்சி – இந்தியாவில் வானூர்திப் பேரழிவு

[தொகு]

2025 ஜூன் 12‑ம் தேதி, அகமதாபாது அருகே ஏர் இந்தியா வானூர்தி சேதமடைந்தபோது, கடைசி முன்மொழிவு 'மேடே' அழைப்பாக இருந்தது. இது உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் உதவி வேண்டி கொடுத்த அழைப்பு ஆகும்.

வரலாறு

[தொகு]

"மேடே" (Mayday) என்ற வார்த்தை 1920களின் தொடக்கத்தில் அவசர சமிக்ஞை (சிக்னலாக) உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கியது இங்கிலாந்தில் உள்ள க்ராய்டன் விமான நிலையத்தில் வானொலி தொடர்புகளுக்குப் பொறுப்பாக இருந்த பிரடெரிக் ஸ்டான்லி மாக்ஃபோர்ட் என்பவர் ஆவார்.

அவரிடம், அவசர சூழ்நிலையில் பைலட்டுகள் மற்றும் தரைபணியாளர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக ஒரு சிறப்பு வார்த்தையை உருவாக்கச் சொன்னார்கள். அப்போது, பெரும்பாலான விமான போக்குவரத்து க்ராய்டனுக்கும் பாரிசின் லே பூர்ஜெட் விமான நிலையத்துக்கும் இடையில் இருந்ததால், பிரெஞ்சு மொழியில் உள்ள "m’aider" (அதாவது "வந்து எனக்கு உதவி செய்யுங்கள்" என்பதற்கான சுருக்கம்) என்பதற்கே ஒத்த ஒலியாக "mayday" என்ற வார்த்தையை அவர் தேர்ந்தெடுத்தார்.

பிறகு, சில சோதனைகள் நடைபெற்றன. அதன் பிறகு, 1923ஆம் ஆண்டின் பிப்ரவரியில், குரல்வழி (Voice/vocal) தொடர்புக்கு இந்த வார்த்தை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கு முந்தைய அவசர சமிக்ஞை எஸ்ஓஎஸ் என்ற மோர்ஸ் குறியீடு ஆகும். ஆனால் தொலைபேசி வழியே "S" என்ற எழுத்தை சரியாக கேட்க இயலாமல் இருப்பதால், அதை குரல் மூலம் பயன்படுத்த முடியாது எனக் கருதப்பட்டது.

1927ஆம் ஆண்டு, வாஷிங்டன் D.C. நகரில் நடைபெற்ற சர்வதேச வானொலி ஒப்பந்தம் (International Radiotelegraph Convention) "எஸ்ஓஎஸ்" மோர்ஸ் குறியீடுடன் சேர்த்து, "மேடே"(Mayday) என்ற குரல் மூல அவசர அழைப்பையும் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

குறிப்பு: இந்த "Mayday" என்ற வார்த்தைக்கு மே மாத திருநாளான May Day-யுடன் எந்தத் தொடர்பும் இல்லை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மேடே - பக்கம் 12" (PDF). Retrieved 2025-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடே&oldid=4297581" இலிருந்து மீள்விக்கப்பட்டது