உள்ளடக்கத்துக்குச் செல்

மேடான் துவாங்கு நிலையம்

ஆள்கூறுகள்: 3°9′33″N 101°41′55″E / 3.15917°N 101.69861°E / 3.15917; 101.69861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 MR9  மேடான் துவாங்கு
Rapid_KL_Logo | KL Monorail_Logo ஒற்றைத் தண்டூர்தி
Medan Tuanku Station
மேடான் துவாங்கு நிலையம் (2023)
பொது தகவல்கள்
அமைவிடம்சுல்தான் இசுமாயில் சாலை, மேடான் துவாங்கு, கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள்3°9′33″N 101°41′55″E / 3.15917°N 101.69861°E / 3.15917; 101.69861
உரிமம் பிரசரானா மலேசியா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்8  கோலாலம்பூர் மோனோ 
நடைமேடை2 பக்க நடைமேடைகள்
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Klrt-unpaid link  AG5   SP5  580 மீட்டர் பாதசாரி பாலம் வழியாக. சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை MR9  உயர்த்திய நிலையம்
தரிப்பிடம் இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு MR9  கோலாலம்பூர் மோனோ
வரலாறு
திறக்கப்பட்டது31 ஆகத்து 2003
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
புக்கிட் நானாஸ்
கேஎல் சென்ட்ரல்
 
கோலாலம்பூர் மோனோ
 
சௌக்கிட் நிலையம்
தித்திவங்சா நிலையம்
அமைவிடம்
Map

மேடான் துவாங்கு நிலையம் அல்லது மேடான் துவாங்கு மோனோரெயில் நிலையம் (ஆங்கிலம்: Medan Tuanku Station; மலாய்: Stesen Medan Tuanku; சீனம்: 棉兰端姑站) என்பது மலேசியா, கோலாலம்பூர், மேடான் துவாங்கு, சுல்தான் இசுமாயில் சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும். இந்த நிலையம் முன்னர் வாவாசான் மோனோரெயில் நிலையம் (Wawasan Monorail) என்று அழைக்கப்பட்டது.[2] கம்போங் பாரு பகுதிக்கு அருகிலுள்ள வளர்ச்சித் திட்டத்திற்கு "பண்டார் வாவாசான்" என பெயரிடப்பட்டதால் இந்த நிலையத்திற்கும் தொடக்கத்தில் வாவாசான் மோனோரெயில் நிலையம் என்று பெயரிடப்பட்டது.

இந்த நிலையம் சுல்தான் இசுமாயில் சாலைக்கு மேலே, சௌக்கிட்டிற்கு சற்று தெற்கே அமைந்துள்ளது; மற்றும் துவாங்கு அப்துல் ரகுமான் சாலையுடனான சந்திப்பிற்கு கிழக்கே அமைந்துள்ளது; இது சுல்தான் இசுமாயில் சாலையில் இணையாக இயங்கும் மோனோரெயில் பாதையின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கிறது. புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம் வரை நீடிக்கும் இந்த மோனோரெயில் பாதை; இறுதியில் இம்பி சாலையின் மேற்கு புறமாகத் திரும்புகிறது.

இந்த நிலையம்; துவாங்கு அப்துல் ரகுமான் சாலை, சுல்தான் இசுமாயில் சாலை மற்றும் டாங் வாங்கி சாலை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய மாவட்டமான மேடான் துவாங்குவில் அமைந்துள்ளது; மற்றும் அந்த மாவட்டத்தின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.

பொது

[தொகு]

இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[3] கோலாலம்பூர் தங்க முக்கோணப் பகுதிக்கும்; மேடான் துவாங்கு பகுதிக்கும்; சேவை செய்யும் நான்கு கோலாலம்பூர் மோனோரெயில் நிலையங்களில் மேடான் துவாங்கு மோனோரெயில் நிலையமும் ஒன்றாகும்.

இந்த நிலையத்தின் அமைவிடம் காரணமாக, பொதுவாக நெரிசல் நேரங்களில்; பொது விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள்; மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இந்த நிலையம் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் பயணிகள் பலர் கோலாலம்பூர் மையப் பகுதியை அடைய இந்த நிலையத்தைப்ப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த நிலையம் பல வணிக நிறுவனங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது.

அருகாமை நிலயங்கள்

[தொகு]

அருகாமையில் உள்ள நிலையங்கள்:[4]

இவற்றைத் தவிர, இந்த நிலையத்திற்கு தெற்கே 1 கிமீ தொலைவில்  MR8  புக்கிட் நானாஸ் நிலையம் உள்ளது.[4]

நிலைய தள அமைப்பு

[தொகு]
L2 தள நிலை பக்க மேடை
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR11  புக்கிட் நானாஸ் நிலையம் (→)
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR1  கோலாலம்பூர் சென்ட்ரல் (←)
பக்க மேடை
L1 இணைப்புவழி கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, இணைப்புவழி, கட்டணமில்லாத பகுதி, நகரும் பாதை ⇌ தெரு நிலை. நுழைவாயில் B
G தெரு நிலை சுல்தான் இசுமாயில் சாலை; கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A & C

இந்த நிலையத்தில் 2 வெளியேறும் வழிகள் உள்ளன. அருகிலுள்ள ராஜா சூலான் நிலையத்தைப் போலவே, இந்த மேடான் துவாங்கு நிலையமும், பல்வேறு கடைவல மையங்களுக்கு நடந்து செல்லும் தொலைவில் உள்ளது.

காட்சியகம்

[தொகு]

மேடான் துவாங்கு நிலையக் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ABOUT RAPID RAIL". Retrieved May 8, 2020.
  2. Azliana Ahmad (1999). Peranan Sistem Transit Aliran Ringan (STAR) dalam mengatasi masalah pengangkutan awam di bandar Kuala Lumpur. Universiti Malaya: Jabatan Antropologi dan Sosiologi, Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya, 1998/99. pp. Lampiran 2.
  3. "Maharajalela Monorail station is a Malaysian elevated monorail train station that forms a part of KL Monorail line located in Kuala Lumpur and opened alongside the rest of the train service on August 31, 2003". klia2.info. 9 October 2017. Retrieved 6 February 2025.
  4. 4.0 4.1 "Raja Chulan monorail station is one of four Kuala Lumpur Monorail stations that serves the Kuala Lumpur Golden Triangle locality". klia2.info. 9 October 2017. Retrieved 9 February 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடான்_துவாங்கு_நிலையம்&oldid=4437131" இலிருந்து மீள்விக்கப்பட்டது