மேச்சேரி ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேச்சேரி ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறி ஆட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இவை சேலம் மாவட்டத்தின் மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, ஓமலூர் மற்றும் ஈரோடு, தர்மபுரி மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன.[1] இவை சேலம் மாவட்டம் மேச்சேரி ஊரின் பெயரில் இருந்து தோன்றியது.

தோற்றம்[தொகு]

இந்த இன ஆடுகள் நடுத்தர உடல் அளவு கொண்டவையாக, இளம்பழுப்பு நிறத்தில் இருக்கும். மேலும் இவற்றில் ஆண், பெண் இரு ஆடுகளும் கொம்புகள் அற்று இருக்கின்றன. இவற்றின் வால் குட்டையாகவும், மெலிதாகவும் இருக்கும். வளர்ச்சியடைந்த கிடா 36 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 22 கி.கி எடையுடனும் இருக்கும்.[2] இவற்றின் தோல், தரத்தில் உயர்ந்ததாக கருதப்படுகின்றது. மேலும் மற்ற இன ஆடுகளைவிட மொத்த உடல் எடையில் இறைச்சி கொடுக்கும் விழுக்காடு கூடுதல் ஆகும்.

ஆராய்ச்சி மையம்[தொகு]

இந்த ஆடுகளின் இன ஆராய்ச்சிக்காக 1978 ஆம் ஆண்டு மேச்சேரியில் ஆடு ஆராய்ச்சி நிலையம் அரசால் துவக்கப்பட்டு பாரம்பரிய மேச்சேரி செம்மறி ஆடுகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மேச்சேரி". தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம். பார்த்த நாள் 13 சனவரி 2017.
  2. "செம்மறியாட்டினங்கள்". அறிமுகம். agritech.tnau.ac.in. பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.
  3. "மேச்சேரி பகுதியில் மிகவும் பிரசிதிப்பெற்ற செம்மறி ஆடுகள்". http://ns7.tv.+பார்த்த நாள் 13 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேச்சேரி_ஆடு&oldid=2729495" இருந்து மீள்விக்கப்பட்டது