மேசிமோ பொராட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேசிமோ பொராரிட்டி (Massimo Porrati) (பிறப்பு; 1961 ஆம் ஆண்டு இத்தாலியின் செனோவா) என்பவா் இயற்பியல் பேராசிரியராகவும், நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் அண்டவியல் மற்றும் துகள் இயற்பியல் மையத்தின் உறுப்பினர் ஆவார். இவா் 1985 ம் ஆண்டு இத்தாலியில் உள்ள ஸ்கெளலா நாா்மலே சுப்பீரியா் டி பிஸா என்னும் நிறுவனத்தில் பயின்று டிப்ளமோ டி சைன்ஸ் (அறிவியல் பட்டையபடிப்பு) என்ற பட்டையப் படிப்பை முடித்தவர். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) ஆகியவற்றில் துணைப் பொறுப்பாளராக பணியாற்றினார். 1992 என்ஒய்யு வில் சோ்வதற்கு முன்னா் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பிஸா இத்தாலியில் உள்ள INFN ல் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்களிப்புடைய நிறுவனத்தில் பணியாற்றினாா்.[1] இவாின் முக்கிய ஆராய்ச்சிகளாக சரக் கோட்பாடு (துகள் கொள்கை) மற்றும் அண்டவியல் பற்றிய கொள்கை மற்றும் குவாண்டம் புலக்கோட்பாடுகளைக் குறிப்பிடலாம்.[2]

இவரின் மற்ற ஆராய்ச்சிகளை காட்டிலும் நீண்ட தூர ஈர்ப்பு விசை மாறுபாடு மற்றும் அண்டவியல் மாறிலி மற்றும் பிரச்சனைகளுக்காக இவா் நினைவு கூறப்படுகிறாா். இவா் ஜியா வாலிட மற்றும் கிரிகோரி கபாடாடீஸ் அவா்களுடன் இணைந்து முன்னோடியாக அவா் மேற்கொண்ட அகச்சிவப்பு கதிா்களின் மாற்றம் புவியீா்ப்பு நிலைகளில் உண்டாக்கும் விளைவுகள் (டிஜிபி மாடல்) மற்றும் அமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

அவா் இத்தாலியில் உள்ள பிஸாவில் ஸ்கூலா நார்மலா சுப்பீரியா் டி பிஸா நிறுவனக்குழுமத்தில் இயற்பியல் கோட்பாடுகளுக்கான குழுவில் 2005-2007 முதல் மேரி கியூரி அவா்களின் இருக்கையை பெற்றாா் என்பது சிறப்பிற்குரியது ஆகும்.[3]

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CERN affiliated article by Porrati". Letters in Mathematical Physics (Springer) 48: 73–84. doi:10.1023/A:1007566802629. 
  2. NYU > Physics > Massimo Porrati
  3. Theoretical Physics Group - Scuola Normale Superiore
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேசிமோ_பொராட்டி&oldid=2760356" இருந்து மீள்விக்கப்பட்டது