மேசன்-டிக்சன் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேசன்-டிக்சன் கோட்டை காட்டும் நிலப்படம்

மேசன்- டிக்சன் கோடு (Mason–Dixon line அல்லது Mason's and Dixon's line) எனப்படுவது 1763க்கும் 1767க்கும் இடையே சார்லசு மேசன் என்பவராலும் ஜெரெமியா டிக்சன் என்பவராலும் குடியேற்றக் கால அமெரிக்காவில் பிரித்தானிய குடியேற்றங்களிடையே எல்லைத் தகராறுகளுக்குத் தீர்வாக அமைந்த நில அளவைக் கோடாகும். நான்கு அமெரிக்க மாநிலங்களுக்கிடையேயான எல்லை வரையறுப்பாகும். இது பென்சில்வேனியா, மேரிலாந்து, டெலவெயர், மற்றும் மேற்கு வர்ஜீனியா (அப்போது வர்ஜீனியாவின் அங்கமாக இருந்தது) இடையேயான எல்லைகளை வரையறுக்கிறது. பரவலானப் பயன்பாட்டில், மேசன்–டிக்சன் கோடு வடகிழக்கு மாநிலங்களுக்கும் தெற்கத்திய மாநிலங்களுக்கும் இடையேயான பண்பாட்டு எல்லையாகக் கருதப்படுகிறது. தென் மாநில மக்கள் டிக்சி (Dixie) என்று அழைக்கப்படுகின்றனர்.

சட்டபூர்வமான அடிமைத்தனத்திற்கான எல்லைக் கோடாக இதனைக் கொள்ள முடியாது. அடிமை மாநிலமான டெலவெயர் இக்கோட்டிற்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ளது. அதேபோல இக்கோட்டிற்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள நியூ ஜெர்சியில் 1865 வரை, குறைந்தளவே எனினும், அடிமைத்தனம் இருந்து வந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேசன்-டிக்சன்_கோடு&oldid=2608365" இருந்து மீள்விக்கப்பட்டது