உள்ளடக்கத்துக்குச் செல்

மேக்ரோலைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரித்ரோமைசின். மேக்ரோலைடு வளையம் மேல் இடதுபுறத்தில் உள்ள லாக்டோன் (சுழற்சி எசுத்தர்) ஆகும்.
கிளாரித்ரோமைசின்
ரோக்சித்ரோமைசின்

மேக்ரோலைடுகள் (Macrolides) பெரும்பாலும் இயற்கை விளைபொருட்களின் வகுப்பைச் சேர்ந்ததாகும். இதில் ஒரு லாக்டோன் பெருவளையம் உள்ளது. மேக்ரோலைடுகளில் கிளாடினோசு, டெசோசமைன் போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐதராக்சைல் குழு நீக்கப்பட்ட சர்க்கரைகள் இணைக்கப்பட்டிருக்கலாம். மேக்ரோலைடுகள் பலகீட்டைடு வகுப்பைச் சேர்ந்தவை. சில மேக்ரோலைடுகள் நுண்ணுயிர் எதிர்ப்பி அல்லது பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளன. மேக்ரோலைடுகள் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, ராபமைசின் ஒரு மேக்ரோலைடாகும். இது முதலில் ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்தாக உருவாக்கப்பட்டு, பின்னர் நோயெதிர்ப்பு ஒடுக்கியாக (immunosuppressant) பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதை ஆயுட்காலத்தினை நீட்டிக்கும் சிகிச்சைக்குப் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்ரோலைடு&oldid=4370311" இலிருந்து மீள்விக்கப்பட்டது