மேக்ரோபிராக்கியம் லமாரே
மேக்ரோபிராக்கியம் லமாரே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடியா
|
குடும்பம்: | பேலிமோனிடே
|
பேரினம்: | |
இனம்: | மே. லமாரே
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் லமாரே ஹெச் மில்னே எட்வர்ட்ஸ், 1837 |
மேக்ரோபிராக்கியம் லமாரே (Macrobrachium lamarrei) எனும் நன்னீர் இறாலானது பொதுவாக இந்திய மீசை இறால், குஞ்சோ ஆற்று இறால் என அறியப்படுகிறது. இந்த நன்னீர் இறால் இரவாடி வகையினைச் சார்ந்தது. இது நேபாளத்தில் உள்ள பிர்ராட்நகர் பகுதியிலும் காணப்படுகின்றது.[1] இவை இந்தியாவில் குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள நீர் நிலைகளில் காணப்படுகிறது.[2][3]
விளக்கம்
[தொகு]மே. லமாரேயின் தலை மார்புப் பகுதி நுரை வெண்மையிலிருந்து பழுப்பு வெள்ளையுடன் பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். ரும் ஆண் இறால் ஒன்றின் நீளம் சுமார் 80 மிமீ வரை இருக்கும், இது பெண் இறாலில் 75 மிமீ ஆக இருக்கும். இந்த இறாலின் தலைகூர் நீட்சியில் முதுகு பக்கத்தில் 7-9 பற்களும், எதிர் புறத்தில் 5-8 பற்களும் காணப்படும்.[4]
இளம் மற்றும் முதிர் இறால்கள் அனைத்து உண்ணி வகையினைச் சார்ந்ததாகும். இவை பாசிகள், மிதவை உயிரினங்கள், பிற இறால்களின் சிறிய தசை துண்டுகளை உண்ணுகின்றன. இறால்களின் குஞ்சுகள் விலங்கு உணவினை உண்ணுகின்றன.[4]
நடத்தை
[தொகு]பிற இறால்களைப்போல் இவை அளவு மாறுபாடுடையன தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. ஆனால் இறால்கள் வலிமைக் குன்றி இறக்க நேரிடும் போது ஏனைய இறால்கள் அவற்றை தங்கள் உணவாக உண்ணுகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] in the World Register of Marine Species
- ↑ Purohit B and Vachhrajani KD (2018) First record of freshwater shrimp, Macrobrachium lamarrei lamarrei (H. Milne Edwards, 1837) from Gujarat, India. Journal of Fisheries 6(3): 654–657. DOI: 10.17017/jfish.v6i3.2018.322
- ↑ Mariappan, P., P.Balamurugan and C. Balasundaram. 2002. Diversity and utilization of freshwater prawns (Macrobrachium) in river Cauvery, Tamilnadu. Zoos’ Print Journal 17(10):919-920.
- ↑ 4.0 4.1 4.2 Sharma and B.R. Subba (2005). Our Nature: General Biology of Freshwater Prawn, Macrobrachium lamarrei (H. Milne-Edwards) of Biratnagar, Nepal.