மேக்ரோபிராக்கியம் ரோசென்பெர்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோபிராக்கியம் ரோசென்பெர்கி
Macrobrachium rosenbergii.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: கணுக்காலி
துணைத்தொகுதி: ஓடுடயவை
வகுப்பு: மெல்லிய ஓடுடையவை
வரிசை: பத்துகாலிகள்
உள்வரிசை: கரிடியா
குடும்பம்: பேலிமோனிடே
பேரினம்: மேக்ரோபிராக்கியம்
இனம்: மே. ரோசென்பெர்கி
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் ரோசென்பெர்கி
டீ மேன், 1879

பெரும் நன்னீர் இறால் என்பது ஆற்றுப் படுகையில் காணப்படும் ஓர் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நன்னீர்வாழ் உயிரினமாகும். இவ்வகை இறால்கள் ஆழமற்ற சேறு நிறைந்த சூழ்நிலையில் நன்கு வளர்ச்சி பெறும்.

இந்த இனத்தின் உயிரியல் பெயரானது மேக்ரோபிராக்கியம் ரோசென்பெர்கி (Macrobrachium rosenbergii) ஆகும். கருஞ்சாம்பல் நிறத்தில் இந்த இறால் காணப்படும். இதன் எடை 300 கிராம் அளவிற்கு இருக்கும். இதன் இரண்டாவது நடைக் கால்கள் பெரியதாக இருக்கும். நன்னீர் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்றவற்றில் மட்டுமின்றி கழிமுகப் பகுதிகளிலும் காணப்படும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. S. De Grave; J. Shy; D. Wowor; T. Page (2013). "Macrobrachium rosenbergii". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2013: e.T197873A2503520. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T197873A2503520.en. http://www.iucnredlist.org/details/197873/0. பார்த்த நாள்: 14 January 2018. 
  2. ரெங்கராஜன், இரா, (2008), மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு, சாரதா பதிப்பகம், சென்னை, ப. 251-253.