மேக்ரோபிராக்கியம் மால்கம்சோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோபிராக்கியம் மால்கம்சோனி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: கணுக்காலி
துணைத்தொகுதி: கிறசுடாசியா
வகுப்பு: மலக்கோசிடிரக்கா
வரிசை: பத்துக்காலிகள்
உள்வரிசை: கரிடியா
குடும்பம்: பேலிமோனிடே
பேரினம்: மேக்ரோபிராக்கியம்
இனம்: மேக்ரோபிராக்கியம் மால்காம்சோனி
வேறு பெயர்கள்

பேலிமோன் மால்கம்சோனி மில்னி எட்வர்ட்சு, 1844

மேக்ரோபிராக்கியம் மால்காம்சோனி (மில்னே-எட்வர்டுசு, 1844) (Macrobrachium malcolmsonii) நன்னீரில் வாழும் அனைத்துண்ணி வகையினைச் சார்ந்த இறால் ஆகும். இவை நீர்நிலைகளின் அடிப்பகுதியில் வசிக்கும் தன்மையுடையன. இவை பொதுவாகப் பருவகால நதி இறால் என அறியப்படுகிறது.[1]

இவை அழுகும் தாவரங்கள் மற்றும் விலங்குகள், சிறிய புழுக்கள், பூச்சிகள் மற்றும் அவற்றின் இளம் உயிரிகளை உண்ணுகிறது. இயற்கையில் இவை நரமாமிசம் உண்ணக்கூடியன. மேலும் புதிதாக உரிக்கப்படும் புறத் தோலினை உண்ணக்கூடியன. ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசில் நன்னீர் இறால் இனங்களான மேக்ரோபிராக்கியம் மால்கம்சோனி, எம். ரோசன்பெர்கி மற்றும் எம் . கேன்ஜெட்டியம் நன்னீர் உயிரி வளர்ப்பில் முக்கியமாக உள்ளது. இரவாடிகளான இவை இரவில் மிகவும் சுறுசுறுப்பாக உணவினைத் தேடி உண்ணுகிறது. ஒரு பூர்வீக நன்னீர் நதி இனமாக இருப்பது எம். மால்கம்சோனி சுற்றுச்சூழல் ஏற்ற இறக்கங்களைத் தாங்கி வளரக்கூடிய வகையில் உள்ளது. ஆண்கள் பெண்களை விடப் பெரிதாக வளர்கின்றன. மேலும் ஆண்களின் வளர்ச்சியில் பன்முகத்தன்மை காணப்படுகிறது. வேகமாக வளரக்கூடிய ஆண்கள் அதிக ஆதிக்கம் செலுத்துவதால் மற்றவை வளர்ச்சி குறைந்து காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. WoRMS (2018). Macrobrachium malcolmsonii (H. Milne Edwards, 1844). Accessed at: http://marinespecies.org/aphia.php?p=taxdetails&id=220142 on 2018-04-28
  • Milne Edwards, H., 1844. Crustacés. In: Voyage dans l’Inde, par Victor Jacquemont, pendant les années 1828 à 1832. Descriptions des collections, vol 4 (2): 1-9, Plates 1-3
  • Fischer, W. & G. Bianchi (Eds.) (1984). FAO Species identification sheets For Fisheries Purposes: Western Indian Ocean. FAO, Rome.