மேக்னுசு கியார்கு வான் பவுக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேக்னுசு கியார்கு வான் பவுக்கர்
Magnus Georg von Paucker
பிறப்புநவம்பர் 1787
இறப்புவார்ப்புரு:D-da
தேசியம்உருசியர்
பணியிடங்கள்மித்தவு பள்ளி
கல்வி கற்ற இடங்கள்தோர்பத் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுHandbuch der Metrologie Rußlands und seiner deutschen Provinzen
விருதுகள்தெமிதோவ் பரிசு (1832)

மேக்னுசு கியார்கு வான் பவுக்கர் (Magnus Georg von Paucker) (உருசியம்: Магнус-Георг Андреевич Паукер;அல்லது Magnus-Georg Andreyevich Pauker, 26 நவம்பர் [யூ.நா. 15 நவம்பர்] 1787, சிமுனா – 31 ஆகத்து [யூ.நா. 19 ஆகத்து] 1855, யெல்கவா)[1] இவரே 1832 இல் Handbuch der Metrologie Rußlands und seiner deutschen Provinzen என்ற அவரது பணிக்காக முதலில் தெமிதோவ் பரிசு பெற்ற உருசிய செருமானியர் ஆவார்.[2]

வாழ்க்கை[தொகு]

இவர் எசுத்தோனியவில் உள்ள சிமுனா எனும் சிற்றூரில் பிறந்தார். இவர் 1805 இல் தோர்பத் பல்கலைக்கழகத்தில் வானியலும் இயற்பியலும் கற்கத் தொடங்கினார். அப்போது இவர் கியார்கு பிரீட்ரிக் பேரட், யோகான் வில்கெல்ம் ஆந்திரியாசு பாஃப் ஆகிய பேராசிரியர்களிடம் கல்விகற்றார்.[2] இவர் 1808–1809 ஆண்டுகளுக்கிடையில் எமயோகி ஆற்று அளக்கைத் திட்ட்தில் பங்குபற்றினார். எசுதோனிய நாட்டில் மேற்கொண்ட முதல் புவிபுறப் பரப்பளக்கை இதுவேயாகும்.[3]இவர் 1809 இல் உருசியாவில் முதல் ஒளியியல் (கண்ணாடியிழைத்) தொலைவரித் தொடரைக் கட்டிமுடித்தார். இத்தொடர் [[புனித பீட்டர்சுபர்குக்கும் சார்சுகோயே செலோவுக்கும் இடையில் அமைந்த்து.[2]

இவர் 1811 இல் தோர்பத் பல்கலைக்கழகத்தில் எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் அவர்களைத் தொடர்ந்து விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். இவர் 1813 இல் De nova explicatione phaenomeni elasticitatis corporum rigidorum எனும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.[2]

தோர்பத் (தார்த்து) பல்கலைக்கழகத்தை விட்டு இவர் 1813 இல் மித்தவுக்குச் சென்றுதங்கி, எஞ்சிய நாழ்நாள் முழுவதும் அங்கேயே மித்தவு பள்ளியில் கணிதவியல் பேராசிரியராக விளங்கினார் இவர் அங்கே இலாவ்சியாவில் முதல் அறிவியல் கல்விக்கழகத்தை குர்லாந்து கலை, இலக்கியக் கழகம் எனும் பெயரில் நிறுவினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]