மேக்னிஃபி அறிவியல் கண்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவூத் அறக்கட்டளை மேக்னிஃபி-அறிவியல் கண்காட்சி
The Dawood Foundation Magnifi-Science Exhibition
வகைதொழினுட்பம் அறிவியல் புவி அறிவியல்
நிகழிடம்தாவூத் பொதுப் பள்ளி
அமைவிடம்கராச்சி
முதல் நிகழ்வு23–25 செப்டம்பர் 2016
அமைப்பாளர்(கள்)தாவூத் அறக்கட்டளை
வந்தோர் எண்ணிக்கை50,000
இணையத்தளம்dawoodfoundation.org

மேக்னிஃபி அறிவியல் கண்காட்சி (Magnifi-Science Exhibition) பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் நடத்தப்படுகிறது. கண்காட்சிகள், சோதனைகள் மற்றும் வெளிப்பாடுகள் மூலம் அறிவியல் மற்றும் முறைசாரா கற்றல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தாவூத் அறக்கட்டளை இக்கண்காட்சியை நடத்துகிறது. [1][2][3][4] 2016 ஆம் ஆண்டு கண்காட்சி தொடங்கப்பட்டபோது முதல் நாளில் 55 பள்ளிகளைச் சேர்ந்த 20,000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.[1] முதல்வர் முராத் அலி சா மற்றும் கல்வி அமைச்சர் இயாம் மெக்தாப் உசைன் தகார் ஆகியோர் கண்காட்சியில் கலந்து கொண்டனர். இந்தக் கண்காட்சியில் சில அறிவியல் ஆய்வுக் குழுக்களும் பங்கேற்றன. கண்காட்சியின் முக்கிய கவனம் இளம் குழந்தைகளை அறிவியல் ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவிப்பதாகும்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "20,000 plus students attend TDF 'Magnifi Science Exhibition' on first day - The Express Tribune" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-09-23. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
  2. "Dawood Foundation announces 'Magnifi-Science' exhibition". Business Recorder e-Paper. 2016-09-21. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
  3. "Dailytimes | Three-day TDF Magnifi-Science Exhibition begins from 23rd". dailytimes.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
  4. Reporter, The Newspaper's Staff (2016-09-24). "Three-day science exhibition opens". பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.