மேக்கொங் வாலாட்டி
மேக்கொங் வாலாட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பசாரிபார்மிசு
|
குடும்பம்: | மோட்டாசில்லிடே
|
பேரினம்: | மோட்டாசில்லா
|
இனம்: | மோ. சாம்வேசுனே
|
இருசொற் பெயரீடு | |
மோட்டாசில்லா சாம்வேசுனே டக்ஒர்த் மற்றும் பலர், 2001[2] |
மேக்கொங் வாலாட்டி (மோட்டாசில்லா சாம்வேசுனே) என்பது மோட்டாசிலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது முதன்முதலில் 2001-ல் விவரிக்கப்பட்டது. மறைந்த கம்போடிய பறவையியலாளர் சாம் வெசுனாவின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது கருப்பு மற்றும் வெள்ளை நிறப் பறவை. மேக்கொங் வாலாட்டி ஆப்பிரிக்கக் கருப்பு வெள்ளை வாலாட்டிப் போன்று தோற்றத்தில் காணப்படும். இருப்பினும் இவற்றின் பரவல் வேறுபடுகிறது. இதன் முக அம்சங்கள் மற்றும் தனித்துவமான குரல் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற கருப்பு மற்றும் வெள்ளை வாலாட்டிகளிலிருந்து வேறுபடுகிறது.
மேக்கொங் வாலாட்டி, கம்போடியா மற்றும் லாவோஸின் மேக்கொங் ஆற்றுப் பள்ளத்தாக்கில் காணப்படுகிறது, மேலும் இது தாய்லாந்து மற்றும் வியட்நாமுக்கு இனப்பெருக்கம் செய்யாத இடம்பெயரும் பறவையாகும். இதன் வழக்கமான வாழ்விடம் பருவகால வெள்ளம் ஏற்படும் நதியின் வேகமாக ஓடும் பகுதிகளுக்கு அருகிலுள்ள பாறைப் பகுதிகள் ஆகும். மனிதர்களுடன் சகிப்புத்தன்மை கொண்டதாக இருந்தாலும், ஆற்றின் அணைக்கட்டைத் தொடர்ந்து ஆற்றின் வாழ்விடங்களில் வெள்ளம் போன்ற இதன் வாழ்விடத்தில் பெரிய அளவிலான மாற்றங்களால் அச்சுறுத்தப்படுகிறது.
விளக்கம்
[தொகு]மேக்கொங் வாலாட்டியின் மிக நெருக்கமாக ஆப்பிரிக்கக் கருப்பு வெள்ளை வாலாட்டி மோ. அகுயும்ப்ஐ ஒத்திருக்கிறது. இருப்பினும் இந்த இரண்டு சிற்றினங்களின் வரம்புகள் வேறுவேறாக உள்ளன. இது பல சிறிய விடயங்களில் மோ. அகுயும்ப்-லிருந்து வேறுபடுகிறது. குறிப்பாக இறக்கை வடிவிலும் தனித்துவமா குரலினாலும் வேறுபடும். இது மிகவும் தனித்துவமான சிற்றினமாகும். இது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரே ஒரு கருப்பு மற்றும் வெள்ளை வாலாட்டி ஆகும். கருப்பு நெற்றி, புருவ மற்றும் காது உறைகள், வெளிப்படையான வெள்ளை சூப்பர்சிலியா, வெள்ளை தொண்டை மற்றும் கழுத்து இணைப்புடன் கூடிய இறகுகளின் கலவையை வெளிப்படுத்துகிறது.[3]
வகைப்பாட்டியல்
[தொகு]2001வரை விவரிக்கப்படும் வரை இந்த சிற்றினம் கவனிக்கப்படவில்லை. மறைந்த கம்போடிய பறவையியலாளர் சாம் வெசுனாவின் நினைவாக இது பெயரிடப்பட்டது.[2] இது ஆப்பிரிக்க கறுப்பு வெள்ளை வாலாட்டியுடன் தோற்றத்தில் மிகவும் ஒத்திருக்கிறது ஆனால் வெள்ளை வாலாட்டிக் குருவி மோ. ஆல்பா இனக்குழு அல்லது வரி வாலட்டிக் குருவிஎம். மெட்ராசுபேடென்சிசு போன்ற மற்ற கருப்பு மற்றும் வெள்ளை வாலாட்டிகளுடன் ஒப்பிடும்போது இவை இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புகொண்டவை இல்லை என்று மரபணு சான்றுகள் தெரிவிக்கின்றன.[3]
பரவல்
[தொகு]மேக்கொங் வாலாட்டி கம்போடியா மற்றும் லாவோஸில் இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் தாய்லாந்தில் இனப்பெருக்கம் செய்வதில்லை. இது வியட்நாமிலும் காணப்படுகிறது.[4]
வாழ்விடம்
[தொகு]மேக்கொங் வாலாட்டி பரந்த தாழ் நில ஆற்றுக் கால்வாய்களில் காணப்படுகிறது. பிராந்திய பறவைகள் ஆற்றின் வேகமாக ஓட்டத் தடைப் பகுதிகளுடன் தொடர்புடையவை. இவை பாறைகளின் தனித்துவமான நிலப்பரப்பில் காணப்படுகிறது. புதர்கள் நீண்ட பருவகால நீரில் மூழ்குவதற்கு ஏற்றது. முக்கியமாக கோமோனோயா ரிபாரியா, மணல் திட்டுகள் மற்றும் சரளைப் பகுதிகளில் கூட்டமாக வாழும். மே/சூன்-அக்டோபர்/நவம்பர் மழைக்காலங்களில் ஆற்றின் நீர்மட்டம் உயரும் போது இப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும். இந்த சிற்றினங்கள் மண் கரைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலோட்டமான தாவரங்கள் மற்றும் வெளித்தெரியும் மணல் மற்றும் வண்டல் திட்டுகள் ஆகியவற்றில் காணப்படும். இங்கு இவை இணையாகக் காணப்படும். சிறிய கூட்டமாகவும் காணப்படும்.[3]
அச்சுறுத்தல்கள்
[தொகு]மேக்கொங் வாலாட்டி மனித இருப்பை மிகவும் பொறுத்துக்கொள்கிறது. மேலும் இதன் வாழ்விடங்கள் மனிதனால் தூண்டப்பட்ட மாற்றங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. மேக்கொங் ஒட்டிய அணைக்கட்டு, குறிப்பாக ஆற்றின் குறைந்த சாய்வு உள்ள பகுதிகள், ஆற்றின் கால்வாயை மூழ்கடிப்பதன் மூலம் இதன் வரம்பின் கணிசமான பகுதிகளை அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2020). "Motacilla samveasnae". IUCN Red List of Threatened Species 2020: e.T22729485A181850469. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22729485A181850469.en. https://www.iucnredlist.org/species/22729485/181850469. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ 2.0 2.1 Duckworth, J.W.; Alstrom, Per; Davidson, P.; Evans, T.D.; Poole, C.M.; Setha, Tan; Timmins, R.J. (2001). "A new species of wagtail from the lower Mekong basin". Bulletin of the British Ornithologists' Club 121 (3): 152–182. https://archive.org/stream/bulletinofbritis12120brit#page/152/mode/1up.
- ↑ 3.0 3.1 3.2 "Mekong Wagtail". Oriental Bird Club. பார்க்கப்பட்ட நாள் 22 October 2016.
- ↑ "Mekong Wagtail at Yok Don HQ". Vietnam Birding. Archived from the original on 21 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 October 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- ADW இல் படம் பரணிடப்பட்டது 2011-10-16 at the வந்தவழி இயந்திரம்