மேக்காய் லாகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேக்காய் லாகசு (Mackay Lacus ) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் எண்ணற்ற ஐதரோகார்பன் ஏரிகளில் இதுவும் ஒரு ஏரியாகும் [1]. 78.32° மற்றும் 97.53° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் தோராயமாக 180 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக டைடனின் வடதுருவத்தில் இந்த ஏரி காணப்படுகிறது நீர்ம ஐதரோகார்பன்களான திரவ ஈத்தேனும் மீத்தேனும் [2] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. கேசின் விண்வெளி ஆய்வு விண்கலம் இந்த ஏரியைக் கண்டுபிடித்தது. பூமியில் உள்ள மேற்கு ஆசுத்திரேலியாவின் மேக்காய் ஏரியின் நினைவாக டைட்டனின் இந்த ஏரிக்கு மேக்காய் லாகசு என்று பெயரிடப்பட்டது .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்காய்_லாகசு&oldid=2173871" இலிருந்து மீள்விக்கப்பட்டது