மேக்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேக்கரை (Mekkarai)
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. கோபால சுந்தர ராஜ், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மேக்கரை(MEKKARAI) தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம்.[3] இவ்வூரில் அடவி நயினார் அணை உள்ளது.மேக்கரை கிராமம் ஆனது தமிழக மற்றும் கேரள எல்லையில் உள்ளது.விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்ட மேக்கரை பகுதி நிலங்களில் மரவள்ளி கிழங்கு, நெல், தென்னை, வாழை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. கார் சாகுபடியில் நேரடியாக பாசன வசதி பெறும் 2,500 ஏக்கர் உள்பட மொத்தம் 3,500 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.

மேக்கரை கிராமத்தில் ஒரு கி.மீட்டர் இடைவெளியில் எருமைச்சாவடி அருவி உள்ளது, குறவன் பாறை என இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. இவை 20 அடி அகலம் கொண்டவை. இந்த ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேக்கரை, அச்சன்புதூர், இடைகால், சாம்பவர்வடகரை, சுரண்டை, வீ.கே.புதூர் வழியாக 50 கி.மீட்டர் வரை பயணித்து சிற்றாற்றில் கலக்கிறது. இந்த இரண்டு ஆறுகளில் வருடம் முழுவதும் தண்ணீர் ஓடுவது சிறப்பு.குருமுனிவன் புடை என்ற இடத்தில்ஸ்ரீஅகஸ்திய நவக்கிரக கோவில் உள்ளது, இங்கு வனமகா கணபதி மற்றும்,ஒன்பது நவக்கிரகங்கள் ஒரே இடத்தில் உள்ளது, இது மேக்கரையில் இருந்து 2 கிலோமீட்டர் மலை மேல் செல்ல வேண்டும்.மேக்கரை கிராம(தமிழக) எல்லையில் கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் உள்ளது..... இது மிகவும் பழமையான கோவில் ஆகும்,இந்த கோவிலில் தை மாதம் திருவிழா நடைபெறும்,மேக்கரை ஊரின் நடுவே பூதத்தார் கோவில் உள்ளது,இங்கு பழமையான நான்கு மரங்கள் உள்ளன,மேக்கரை ஊரில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று உள்ளது போக்குவரத்து வசதி-

    ஜெயராம் பஸ் இது மேக்கரையில் இருந்து செங்கோட்டை,தென்காசி, குற்றாலம்,வழியாக ஆலங்குளம் வரை செல்லும்,ஒரு நாளைக்கு மூன்று முறை வந்து செல்லும்,
     கேரள அரசு பேருந்து இது அச்சன்கோவிலில் இருந்து மேக்கரை மற்றும் செங்கோட்டை வழியாக புனலுருக்கு இரண்டு பேருந்துகள் வந்து செல்லும்
 அரசு பேருந்து காலை மற்றும் மாலை இருவேளை மேக்கரையில் இருந்து தென்காசி வரை செல்லும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2013-08-08 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்கரை&oldid=3255573" இருந்து மீள்விக்கப்பட்டது