மேகேலா சடோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகேலா சடோர் ஆடை அணிந்து நெற்றியின் மையத்தில் பொட்டு வைத்த அசாமிய பெண்
காசிரங்காவில் உள்ள வனவிலங்குகளின் அழகிய வடிவத்தை சித்தரிக்கும் பேட் பட்டில் கையால் நெய்யப்பட்ட மேகேலா சடோர்

மேகேலா சடோர் (அசாமி : মেখেলা চাদৰ,) என்பது பாரம்பரியமாக அசாமிய பெண்கள் அணியும் ஒரு பாரம்பரிய சரோங் ஆடை ஆகும்.[1][2] இதில் உடலைச் சுற்றி இரண்டு முக்கிய உடைகள் (துண்டுகள்) உள்ளது.

உடுத்துதல்[தொகு]

இதன் கீழ் பகுதி இடுப்பிலிருந்து கீழ்நோக்கி மூடப்பட்டிருக்கும்,மேகேலா (அசாமி:মেখেলা )இது பரந்த உருளைத் துணியாகும்,இது இடுப்பைச் சுற்றி அமையும் வகையில் ஒன்று அல்லது பல மடிப்புகளாக மடிக்கப்பட்டு உள்ளே சொருகப்படுகிறது.பட்டைகள் வலப்புறமாக மடிக்கப்பட்டு,புடவையின் மடிப்புகளை விட குறைவாக உள்ளது, அவை இடதுபுறமாக மடிக்கப்பட்டு பல மடிப்புகளைக் கொண்டுள்ளது. மேகேலாவை இடுப்பில் கட்ட சரங்கள் பயன்படாது,ஆனால் கீழ்பாவாடையில் சரம் பயன்படுகிறது.

சடோர் என்று அழைக்கப்படும் இரண்டு பகுதி ஆடையின் மேல் பகுதி ஒரு நீண்ட துணியாகும். இதன் ஒரு முனையானது தொப்புளுக்கு மேலே உள்ள மேகேலாவுடன் இருக்கும்,இதர பகுதி மார்பு பகுதியினை சுற்றி மூடப்பட்டிருக்கும்.சில மடிப்புகளுக்குப் பின் சடோரின் மறுமுனை வயிற்றுப் பகுதியுடன் உள்ளிடப்பட்டிருக்கும்.அதனுடன் பொருத்தமான ரவிக்கை மேகேலா சடோருடன் அணியப்படும்.பாரம்பரியமாக கடந்த காலங்களில் ரிஹா என்ற ஆடை சடோராக அதன் கீழே உள் பகுதி துண்டாக சடோராக அணியப்பட்டது.அசாமிய திருமண விழாக்களில் இன்றளவும் ரிஹா அணியப்படுகிறது,மற்றும் பிஹூ பிற அசாமிய பண்டிகைகள் போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் அணிவதை காணலாம்.மேகேலா சாடர்களில் உள்ள அலங்கார வடிவமைப்புகள் அச்சிடப்படுவதில்லை அவை பாரம்பரியமாக நெய்யப்படுபவை ஆகும்.சில சமயங்களில் பாரி என்னறழைக்கப்படும் ஒரு வித பின்னல் வடிவம் சடோரின் பக்கங்களில் அல்லது மேகேலாவின் அடிப்பகுதியில் தைக்கப்படுகிறது. இதன் பல வடிவங்களானது விலங்குகள்,பறவைகள்,மனித வடிவங்கள்,பூக்கள், வைரம் மற்றும் வான்வெளி நிகழ்வுகள் போன்று உள்ளது. இவ்வடிவங்கள் உள்ளூர் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத நெசவாளர்களால் உருவாக்கப்படுகிறது.இவ்வடிவங்களின் மையக்கருக்கள் ஃபுல் என்றழைக்கப்படுகிறது. எடுப்பான நிறமுள்ள வைரக் கருக்கள் சிறந்த வேலைப்பாடுகளைக் குறிக்கிறது,இவை அசாமின் பொதுவான பாரம்பரிய அம்சமாகும். பாட் மற்றும் முகா பட்டுகளில் பூக்கள் மற்றும் படர்ந்த கொடிகளின் நுட்பமான வடிவமைப்புகளும், எரி மற்றும் பருத்தி ஆகியவற்றில் தடித்த வடிவியல் வடிவங்கள் காணப்படுகின்றன.[3]

பொருள்கள்[தொகு]

பாரம்பரியமான மேகேலா சடோர் பின்வரும் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

நவீன காலத்தில் விலை குறைந்த சில ஆடைகள் பருத்தி மற்றும் முகா அல்லது பேட் பட்டு ஆகியவற்றின் செயற்கை கலவைகளால் தயாரிக்கப்படுகிறது.

கிடைக்குமிடம்[தொகு]

கவுகாத்தி மற்றும் அசாமின் பிற நகரங்களில் உள்ள பல கடைகளில் மேகேலா சடோர் கிடைக்கிறது. பல இணையதளங்கள் மூலமாகவும் கிடைக்கிறது.[4][5][6][7] வாடிக்கையாளர்களிடம் தூய பேட் பட்டிற்கான வரவேற்பு அதிகமாக உள்ளது.பேட் பட்டு மற்றும் பாலியெஸ்டர் மேகேலா சடோர் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது.முகா பட்டு அசாமின் தங்கப்பட்டு என்றழைக்கப்படுகிறது இதன் தேவை அதிகமாக உள்ளது இதனை ஈடு செய்யும் டசார் போன்றவற்றின் இருப்பும் குறைவாவாகவே உள்ளது.[8]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mekhela chador
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. Sharma, M. B. (2005). Silk Mekhela Chador–A traditional dress of Assamese women. Indian Silk, 44(5), 26-29.
  2. Brahmachary, S. (2016). IMPERIALISTIC ASSAM: AN ANALYSIS OF CULTURAL IMPERIALISM IN ASSAM. Regional Cooperation Newsletter-South Asia July-September, 2016, 10.
  3. Chakravorty, R., Dutta, P., & Ghose, J. (2010). Sericulture and traditional craft of silk weaving in Assam.and Traditional Craft of Silk Weaving in Assam
  4. "Mekhela Chador". http://unika.in/Mekhela-Chador-depid-99514-page-1.html. 
  5. "Mekhela Chador". Assam Silk Shopping. http://assamsilkshopping.com/Mekhela-Chadar. 
  6. "Mekhela Chador". Rajmati Sarees. http://www.rajmatisarees.com/mekhla-chadar. 
  7. "Mekhela Chador". Sri Sai Tex Art. http://www.bazaarsurat.com/product-category/mekhela-chadars. 
  8. Aggarwal, A., Sharma, A., Tripathi, A., Wadhawan, A., Chongtham, E., Gupta, H., ... & Bhardwaj, R. Static or Dynamic-The Analysis of Handloom Industry of Assam.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகேலா_சடோர்&oldid=3669707" இருந்து மீள்விக்கப்பட்டது