உள்ளடக்கத்துக்குச் செல்

மேகா மசூம்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகா மசூம்தார்
டெக்சாஸ் புத்தகத் திருவிழாவில் மேகா மசூம்தார் (2022)
டெக்சாஸ் புத்தகத் திருவிழாவில் மேகா மசூம்தார் (2022)
பிறப்பு1987/1988 (அகவை 37–38)[1]
கொல்கத்தா,இந்தியா
தொழில்எழுத்தாளர், இதழாசிரியர்
கல்வி நிலையம்ஹார்வார்ட் பல்கலைக்கழகம்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்எ பர்னிங்
ஒரு பாதுகாவலனும் ஒரு திருடனும்
குறிப்பிடத்தக்க விருதுகள்யுவ புரஸ்கார் 2021
வைட்டிங் விருது-2022
இணையதளம்
meghamajumdar.com

மேகா மசூம்தார் (Megha Majumdar: பிறப்பு 1987/1988) நியூயார்க் நகரில் வசிக்கும் ஒரு இந்தியப் புதின ஆசிரியர் ஆவார். இவரது முதல் புதினமான எ பர்னிங், நியூயார்க் டைம்சின் சிறந்த விற்பனையான புதினமாகவும், 2021 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதையும், 2022 ஆம் ஆண்டில் வைட்டிங் விருதையும் வென்றது.

தொடக்ககால வாழ்க்கை.

[தொகு]

மேகா இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிறந்தார்.[1] 2006 ஆம் ஆண்டில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியல் படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.[1][2] அங்கு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து, மானுடவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]

மேகா மசூம்தாரின் முதல் புதினமான எ பர்னிங் 2020 இல் வெளியிடப்பட்டது மேலும் நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனையாளராக மாறியது. தி வாஷிங்டன் போஸ்ட் இதழில் இவரைப்பற்றி ரான் சார்லஸ், "விளிம்புகளில் வாழும் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அச்சங்களைப்பற்றி கவனம் செலுத்துவதன் மூலம் ஒரு கொந்தளிப்பான சமூகத்தின் பரந்த நோக்கத்தை மையப்படுத்தும் ஒரு விசித்திரமான திறனை மேகா மசூம்தார் நிரூபிக்கிறார். இந்தப் புதினத்தின் போக்கு அடிக்கடி பரபரப்பாகச் சென்று, இறுதியாக வேதனை அளிக்கிறது. இந்த ஊக்கமூட்டும் புதினம் நாவல் டுடே ஷோ புத்தகக் கிளப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உடனடியாக சிறந்த விற்பனையாளர் பட்டியலில் இடம் பெற்றது ஆச்சரியமில்லை" என்று குறிப்பிடுகிறார். மேலும் டைம் இதழில், நைனா பஜேகல் இந்தப் புதினத்தை "சமகால இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய அரசியல் கதைகளுக்கு ஒரு சக்திவாய்ந்த திருத்தம்" என்று விவரித்தார்.[3]

2020 ஆம் ஆண்டில்,மேகா தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம், "நான் நூலில் கேட்கும் கேள்விகள் இந்தியாவில் மட்டும் இல்லை என்றும்... இங்குள்ள வாசகர்கள் சமகால அமெரிக்காவையும் சிந்திக்க முடியும் என்றும் நம்புகிறேன்".[4][5] என்று குறிப்பிடுகிறார்.

அவரது புதினம் வெளியிடப்பட்ட நேரத்தில், மேகா நியூயார்க் நகரில் உள்ள கேடபுல்ட் புக்ஸில் ஆசிரியராக பணியாற்றினார்.[2] 2021 ஆம் ஆண்டில், கேடபுல்டின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார், மேலும் அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களில் மத்தேயு சாலேசஸ், ரண்டா ஜரார், ரூபி ஹமாத், சிந்தியா பானு மற்றும் யே சுன் ஆகியோர் அடங்குவர்.[6][7] மே 2022 இல், அவர் தனது எழுத்து மற்றும் கற்பித்தலில் கவனம் செலுத்த அந்த பதவியை விட்டு வெளியேறினார்.[8]

விருதுகளும், கௌரவங்களும்

[தொகு]

புனைகதைக்கான 2021 ஆண்ட்ரூ கார்னகி பதக்கத்திற்கான பட்டியலில் எ பர்னிங் இடம்பெற்றது. மேலும் 2021 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை வென்றது.[9] ஏப்ரல் 2022 இல் மெகா மசூம்தார் ஒரு வைட்டிங் விருதை வென்றார். புனைகதைக்கான 2020 தேசிய புத்தக விருதுக்கு எ பர்னிங் நீண்டநாட்களாக பட்டியலிடப்பட்டது.[10]

மேகாவின் இரண்டாவது நாவலான ஏ கார்டியன் அண்ட் எ தீஃப், 2025 ஆம் ஆண்டு புனைகதைக்கான தேசிய புத்தக விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[11][12]

நூலியல்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "A Burning, the breakaway novel that everyone is talking about and its Indian-origin author". The Indian Express (in ஆங்கிலம்). 2020-06-14. Retrieved 2020-06-16.
  2. 2.0 2.1 2.2 "4 Writers to Watch This Summer" (in en-US). 2020-05-13. https://www.nytimes.com/2020/05/13/books/writers-to-watch-summer-Brit-Bennett-Megha-Majumdar-Roddy-Doyle-Marie-Helene-Bertino.html. 
  3. Bajekal, Naina (20 May 2020). "A Defiant New Take on Contemporary India". Time. Retrieved 4 July 2020.
  4. Ghoshal, Somak (2020-01-03). "Read, resist and relearn from new books in the new year". Livemint (in ஆங்கிலம்). Retrieved 2020-06-16.
  5. "Worth a read this month". The Daily Star (in ஆங்கிலம்). 2020-06-11. Retrieved 2020-06-16.
  6. "Megha Majumdar Leads Catapult as Editor in Chief, Rachel Syme on Deadlines, and More". Poets & Writers (in ஆங்கிலம்). 2021-06-29. Retrieved 2021-10-05.
  7. "Sindya Bhanoo | The Odyssey Bookshop". www.odysseybks.com. Retrieved 2022-02-28.
  8. "Megha Majumdar on What Debut Authors Need to Know". 13 June 2022. https://newsletters.theatlantic.com/i-have-notes/62a387e699d36800216192bb/megha-majumdar-interview-writing-publishing-tips/. 
  9. "Giggs shortlisted for ALA Andrew Carnegie Medal". Books+Publishing (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 2020-11-18. Retrieved 2020-11-18.
  10. "The 2020 National Book Awards Longlist: Fiction". The New Yorker. September 18, 2020. Retrieved October 7, 2025.
  11. Harris, Elizabeth A. (October 7, 2025). "Here Are the Finalists for the 2025 National Book Awards". The New York Times. Retrieved October 7, 2025.
  12. Lee, Benjamin (October 7, 2025). "Bryan Washington and Rabih Alameddine among National Book Award finalists". The Guardian. Retrieved October 7, 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகா_மசூம்தார்&oldid=4393518" இலிருந்து மீள்விக்கப்பட்டது