மேகாலயா மக்கள் ஜனநாயக முன்னணி
தோற்றம்
| மேகாலயா மக்கள் ஜனநாயக முன்னணி | |
|---|---|
| சுருக்கக்குறி | |
| தலைவர் | ஐ. மர்பானியங் |
| தொடக்கம் | 2017 |
| கலைப்பு | 2023 |
| இணைந்தது | தேசிய மக்கள் கட்சி |
| கொள்கை | பழங்குடியினர் நலன் |
| Alliance | வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி |
| Seats in மேகாலயாவின் சட்டமன்றம் | 4 / 60 |
| தேர்தல் சின்னம் | |
| கட்சிக்கொடி | |
| PDF party flag.jpg | |
மேகாலயா மக்கள் ஜனநாயக முன்னணி (People's Democratic Front (PDF) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் செயல்படும் ஒரு மாநிலக் கட்சியாகும். இது மேகாலயா பழங்குடி மக்கள் நல்னகளுக்காக நிறுவப்பட்ட கட்சியாகும். இக்கட்சி 2017ஆம் ஆண்டில் பி. என். சையம் மற்றும் எல். மாவ்லாங் ஆகியோரால் நிறுவப்பட்டது. தற்போது வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் இக்கட்சி அங்கம் வகிக்கிறது.[1] மேகாலயா மாநிலத்தின் காசி மற்றும் செயிந்தியா மலைப்பகுதிகளில் வாழும் இரண்டு பழங்குடி மக்களான காசி மக்கள் மற்றும் காரோ மக்கள் ஆகியோரின் நலன்களுக்காக இக்கட்சி துவக்கப்பட்டது. 2018 மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி 1,28,413 வாக்குகளையும் (8.2%) மற்றும் 4 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியது. தற்போது இக்கட்சி வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.