உள்ளடக்கத்துக்குச் செல்

மேகலை நகரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகலை நகரங்கள் என்பன அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் நான்கு நகரங்களாகும்.[1] அவை,

  1. லங்காபுரி
  2. ரோமகபுரி
  3. சித்தபுரி
  4. பத்ராசுவம்

இவை ஒவ்வொன்றும் நிலநடுக்கோட்டில் ஒன்றோடு ஒன்று 90 பாகை இடைவெளி விட்டு அமைந்திருந்ததாக குறிப்பிடுகின்றன. இந்த நான்கு நகரங்களில் ஒன்றான லங்காபுரி நிலநடுக்கோடும் உஜ்ஜைன் நகரத்தின் நேராக வரும் நிலநேர்க்கோடும் இணையும் இடத்தில் உள்ளதாக சில இந்து தொன்மவியல் ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் கூறியுள்ளனர்.[2] அதன்படி இராவணன் ஆண்ட இலங்கை நிலநடுக்கோட்டில் இருந்ததாகவும் அதற்கு அனுமன் பயனம் செய்த குறிப்புகள் இராமாயணத்தில் இருந்ததைக் கொண்டும், மகாபாரதத்தில் பாண்டவர்களில் ஒருவனின் திக்விசயத்தின் போது இலங்கை, சிங்களம் என்ற இரண்டு நாடுகளையும் பிரித்துக் கூறுவதைக் கொண்டும் இராவணின் லங்காபுரி தற்போதைய இலங்கை இல்லை என்று தொன்மவியல் ரீதியாக சில நூல்களில் நிறுவப்பட்டுமுளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகலை_நகரங்கள்&oldid=3802846" இலிருந்து மீள்விக்கப்பட்டது