மேகமலை அருவி
மேகமலை அருவி என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், கோம்பைத்தொழு அருகே மேகமலை வனப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அருவி[1]. இந்த அருவியானது, தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சுருளி அருவியைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால், இதனை சின்ன சுருளி அருவி என்றும் அழைக்கின்றனர்.[2]
அமைவிடம்
[தொகு]தேனியிலிருந்து 51 கி.மீ தொலைவில் இருக்கும் மேகமலை அருவி , கடமலைக்குண்டு கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மதுரையிலிருந்து ஆண்டிப்பட்டி வழியாக 95 கிலோமீட்டர் தொலைவில் மேகமலை அருவி உள்ளது.
கட்டணம்
[தொகு]இந்த அருவி அமைந்திருக்கும் பகுதி திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால், அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த அருவியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அருவியில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குளிப்பதற்கேற்ற அளவில் தண்ணீர் வருகிறது. மற்ற மாதங்களில் நீரின்றி வறண்டு போய்விடுகிறது. அருவியில் குளிக்கவும் மற்றும் மோட்டார் வாகனங்கள் நிறுத்தவும் சோதனைச் சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும்.[3]