மேகன் ஃபாக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


Megan Fox
Megan Fox.jpg
இயற் பெயர் Megan Denise Fox
பிறப்பு மே 16, 1986 (1986-05-16) (அகவை 30)
Oak Ridge, Tennessee, அமெரிக்க ஐக்கிய நாடு
தொழில் Actress
நடிப்புக் காலம் 2001–present
வீட்டுத் துணைவர்(கள்) Brian Austin Green (2004–present)

மேகன் டெனிஸ் ஃபாக்ஸ் (1986வது வருடம் மே 16 பிறந்தவர்) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் விளம்பர அழகி. அவர் 2001வது ஆண்டு தொலைக் காட்சியிலும், திரைப்படங்களிலும் பல சில்லறை வேடங்களுடன் தமது நடிப்புத் தொழிலைத் துவங்கினார். பிறகு ஹோப் அண்ட் ஃபெய்த் என்னும் நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப வரும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். 2004வது ஆண்டு, கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ டீனேஜ் டிராமா க்வீன் என்னும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்ததுடன் தனது திரை வாழ்க்கையைத் துவங்கினார். 2007வது வருடம், அவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் என்னும் மாபெரும் வெற்றித் திரைப்படத்தில் ஷியா லாபிவௌஃப் கதாபாத்திரத்தின் காதலியாக மிக்கேலா பேன்ஸ் என்னும் வேடம் அளிக்கப் பெற்றார். இது அவருக்கு ஒரு கட்டுடைத்த வெற்றிக் கதாபாத்திரமான அமைந்து பல டீன் சாய்ஸ் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். 2009வது வருடம் இதன் இணைத் தயாரிப்பில், ஃபாக்ஸ் தமது வேடத்தை மீண்டும் ஏற்று நடித்தார்.Transformers: Revenge of the Fallen 2009வது வருடத்தின் பிற்பகுதியில், ஜென்னிஃபர்'ஸ் பாடி என்னும் திரைப்படத்தில் முதன்மையான தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஃபாக்ஸ் ஒரு பாலியல் குறியீடு என்று கருதப்படுகிறார். இவர் அடிக்கடி மென்ஸ் மேகசீன் பத்திரிகையின் "கவர்ச்சி மிக்கவர்கள்" பட்டியலில் இடம் பெறுகிறார். 2007.2008 மற்றும் 2009 ஆகிய வருடங்களில் மாக்சிம் பத்திரிகையின் வருடாந்திர கவர்ச்சியான 100 பேர் பட்டியலில் இவர் முறையே #18, #16, மற்றும் #2 இடங்களைப் பெற்றார்; 2008வது வருடம், எஃப்ஹெச்எம் வாசகர்கள் இவருக்கு "உலகிலேயே மிகுந்த பாலியல் கவர்ச்சி கொண்ட பெண்" என்று வாக்களித்தனர்.[1] 2008வது வருடம் மூவிஃபோன் பத்திரிகையின், "25 வயதுக்கு உட்பட்ட 25 கவர்ச்சி மிகு நடிகர்கள்" பட்டியலில் முதலாம் இடத்தை அடைந்தார்.[2] 2004வது வருடம், ஃபாக்ஸ் பெவர்லி ஹில்ஸ் 90210 புகழ் ப்ரியான் ஆஸ்டின் கீரின் என்னும் நடிகரை ஹோப் அண்ட் ஃபெய்த் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்ததாகக் கூறப்பட்டது முதல், அவருடன் ஒன்றாகச் சுற்றத் துவங்கினார்.[3][4] அதிலிருந்து, இவர்கள் இருவருக்கும் தொடர்வதும் முறிவதுமான ஒரு உறவு இருந்து வருகிறது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஃபாக்ஸ் ஐரிஷ், ஃபிரெஞ்ச் மற்றும் அமெரிக்கப் பழங்குடி ஆகிய வம்ச பரம்பரைகளின்[5] வழி வந்தவர். இவர் ஓக் ரிட்ஜ், டென்னஸ் என்னும் இடத்தில் டார்லின் டொனாகியோ மற்றும் தனது குடும்பப் பெயரிலிருந்து ஒரு எக்ஸ் என்னும் எழுத்தைக் கைவிட்ட, ஃபிராங்க்ளின் ஃபாக்ஸ் ஆக்யோருக்குப் பிறந்தார்.[6] அவர்தாம் முத்த சகோதரி.[6] ஃபாக்ஸ் சிறுமியாக இருந்தபொழுது, அவரது பெற்றோர் விவாகரத்து செய்து விட்டனர். அவரும் அவருடைய சகோதரியும் அவருடைய தாயார் மற்றும் மாற்றாந்தந்தை ஆகியோரால் வளர்க்கப்பட்டனர்.[6][7][8] அவர்கள் இருவரும் "மிகவும் கண்டிப்பானவர்கள்"[7] என்றும், ஆண் சிநேகிதர்களை வைத்துக் கொள்ள தாம் அனுமதிக்கப்பட்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.[6][7] தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ளும் அளவு பணம் சம்பாதிக்கும் வரை அவர் தமது தாயுடனேயே வாழ்ந்து வந்தார்.[7]

ஃபாக்ஸ் ஐந்தாவது வயதில், கின்ங்ஸ்டன், டென்னஸில் நாடகம் மற்றும் நடனம் ஆகியவற்றில் தமது பயிற்சியைத் தொடங்கினார்.[9] அவர் ஒரு சமூக மையத்தில் நடந்த நடன வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்தார். அங்கு அவர் கிங்க்ஸ்டன் ஆரம்பப் பள்ளி சேர்ந்திசைக் குழு மற்றும் கிங்ஸ்டன் க்ளிப்பர்ஸ் நீச்சல் குழு ஆகியவற்றில் ஈடுபட்டார். பத்து வயதில், ஃபாக்ஸ் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ஃப்ளோரிடாவுக்கு சென்று, அங்கும் தமது பயிற்சியைத் தொடர்ந்தார்.[10][11] தமது 13வது வயதில் ஃபாக்ஸ் சௌத் கரோலினாவின் ஹில்டன் ஹெட்டில் நிகழ்ந்த 1999வது வருடத்திற்கான அமெரிக்க விளம்பர அழகி மற்றும் திறன் மாநாட்டில் பல விருதுகளை வென்றார்; இதன் பின்னர் அவர் விளம்பர அழகியானார்.[12] மார்னிங்சைட் அகாடமி[13] என்னும் ஒரு தனியார் கிறிஸ்துவப் பள்ளியில் ஃபாக்ஸ் இடை நிலைக் கல்வி பயின்றார். பின்னர் உயர் நிலைப் பள்ளிக் கல்வியை செயின்ட்.லூசி வெஸ்ட் செண்ட்டினியல் ஹை ஸ்கூல் பள்ளியில் முடித்தார். அவருக்கு 17 வயதாகியிருந்தபோதும், அஞ்சல் கல்வி மூலமே பள்ளிகளில் தேர்வு அளித்தார்.[10]

தமது படிப்புக் காலத்தைப் பற்றி ஃபாக்ஸ் நிறையப் பேசியிருக்கிறார். இடைநிலைப் பள்ளியில் தாம் மிரட்டப்பட்டு, கிண்டல் செய்யப்பட்டதாகவும், "சாறு நிரப்பிய பைகளால் அடிபடுவதை"த் தவிர்ப்பதற்காக தாம் குளியல் அறையிலேயே தமது மதிய உணவை உண்டதாகவும் கூறியுள்ளார். தமது தோற்றம் ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை என்று கூறும் அவர், "பையன்களுடன் எப்போதுமே சிநேகமாக இருந்ததாகவும்" "சிலரைத் தவறான வகையில் முறைத்துக் கொண்டதாகவும்" கூறியுள்ளார்.[14] தாம் உயர் நிலைப் பள்ளியிலும் புகழ் பெற்று விளங்கியதில்லை என்றும் ஃபாக்ஸ் கூறியுள்ளார். "எல்லோரும் என்னை வெறுத்தனர், நான் தீண்டத்தகாதவளாக இருந்தேன், என் நண்பர்கள் எப்போதும் ஆண்களாகவே இருந்தனர்; நான் அதிகம் ஆளுமை உணர்வு கொண்டவள்; அதனாலேயே பெண்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை. என் முழு வாழ்க்கையிலும் எனக்கு ஒரே ஒரு பெண் சிநேகிதிதான் இருந்திருக்கிறார்.[14] அதே பேட்டியில், அவர் தமது பள்ளியைத் தாம் வெறுத்ததாகவும் கூறுகிறார். மேலும், எப்போதுமே தாம் "முறைப்படுத்தப்பட்ட கல்வியில் பெரும் நம்பிக்கை" கொண்டிருந்ததில்லை என்றும், "நான் பெற்ற கல்வி பொருத்தமற்றதாகத் தோன்றியது" எனவும், ஆகவே, அந்தப் பகுதியைப் பொறுத்தவரையில் நான் கழற்றி விடப்பட்டவள்தான்" என்றும் அவர் குறிப்பிட்டார்.[14]

தொழில் வாழ்க்கை[தொகு]

2009வது ஆண்டு டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவின் நள்ளிரவு பித்தின்போது ஜென்னிஃபர் பாடி முதற்காட்சியில் ஃபாக்ஸ்.

2001வது வருடம் தமது 16வது வயதில், ஹாலிடே இன் தி சன் என்னும் திரைப்படத்தில், ப்ரயானா வாலேஸின் செல்லம் கொடுத்துக் கெட்டுப்போன வாரிசாகவும், அலெக்ஸ் ஸ்டெவார்ட் ஆஷ்லே ஓல்சென் போட்டியாளராகவும், ஃபாக்ஸ் தமது நடிப்புத் தொழிலைத் துவக்கினார். இந்தப் படம் நேரடி-ஒளித்தகடாக 2001வது வருடம் நவம்பர் 20 அன்று வெளியானது. இதற்கு அடுத்த வருடம் ஃபாக்ஸ் ஓஷன் ஏவ் என்னும் தொலைக் காட்சித் தொடரில் ஐயோன் ஸ்டார் என்னும் பிரதானக் கதாபாத்திரம் கிடைக்கப் பெற்றார். இந்த தொடர் 2002-2003 வருடங்களில் இரண்டு பருவங்களுக்கு நீடித்தது மற்றும் இதில் ஃபாக்ஸ் ஒரு-மணி-நேர நீளம் கொண்ட 122 பகுதிகளில் தோன்றினார். மேலும், 2002வது வருடத்தில் "லைக் எ வர்ஜின் (கைண்டா)" என்னும் தொடரில் "வாட் ஐ லைக் அபௌட் யூ" என்னும் பகுதியிலும் அவர் கௌரவ வேடமேற்று நடித்தார். 2003வது வருடம் வெளியான பேட் பாய்ஸ் II தொடரில் அவரது பங்கு பெயர் குறிப்பிடப்படாத ஒரு துணை நடிகை என்பதாகத்தான் இருந்தது. 2004வது வருடம், டு அண்ட் அ ஹாஃப் மென் என்னும் தொடரின் "கேமல் ஃபில்டர்ஸ் அண்ட் ஃபெர்மோன்ஸ்" என்னும் கதைப் பகுதியில் ஃபாக்ஸ் ஒரு கௌரவ வேடமேற்று நடித்தார். அதே வருடம், கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ டீன் ஏஜ் டிராமா க்வீன் என்னும் திரைப்படத்தில் ஃபாக்ஸ் தமது திரை வாழ்வைத் துவக்கினார்; இதில் அவர் லின்ட்ஸே லொஹானுடன் இணைந்து, கார்லா சாண்டி என்னும் லோலா (லின்ட்ஸே லொஹான்) கதாபாத்திரத்திற்குப் போட்டியான ஒரு துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். மீண்டும் 2004வது ஆண்டில், ஏபிசி சிட்காமின் ஹோப் அண்ட் ஃபெய்த் தில் ஃபாக்ஸ் ஒரு வழக்கமான கதாபாத்திரம் பெற்றார். சிட்னி ஷானௌஸ்கி என்னும் பெயர் கொண்ட இந்த வேடத்தில் முதலில் நடிப்பதாக இருந்த நிகோல் பேக்கியின் பாத்திரத்தில் இவர் நடித்தார். இந்த நிகழ்ச்சி 2006வது ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, இதில் 2 முதல் 3 பருவங்களில் ஃபாக்ஸ் 36 கதைகளில் தோன்றினார்.[15]

2007வது ஆண்டு ஃபாக்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் என்னும் அதிரடித் திரைப்படத்தில் மிக்கேலா பேன்ஸ் என்ற கதாநாயகி பாத்திரத்தை வென்றார்.இந்தத் திரைப்படம் அதே பெயரிலான பொம்மை மற்றும் கேலிச்சித்திரக் கதையின் அடிப்படையிலானதாகும்.

ஷியா பிவௌஃப் ஏற்று நடித்த சாம் விட்விக்கி என்னும் கதாபாத்திரத்தின் காதலியாக ஃபாக்ஸ் நடித்தார். "கட்டுடைத்த செயல்திறன்" என்னும் பிரிவில் எம்டிவி விருதுக்காக ஃபாக்ஸ் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அவர் மூன்று டீன் சாய்ஸ் விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டார்:"தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட நடிகை:அதிரடி சாகசம்";தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்:கட்டுடைத்த பெண்"; ,மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்:லிப்லாக்".[16]


டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தின் மேலும் இரண்டு இணைத் திரைத் தொடர்களுக்காகவும், ஃபாக்ஸ் கையெழுத்திட்டுள்ளார்.[15][17] 2007வது வருடம் ஜூன் மாதம் ஹௌ டு லூஸ் ஃப்ரண்ட்ஸ் அண்ட் ஏலியனேட் பீபிள் என்னும் ஒரு திரைப்படத்தில், ஜெஃப் ஃப்ரிட்ஜஸ், சைமன் பெக் மற்றும் க்ரிஸ்டென் டன்ஸ்ட் ஆகியோருடன் ஒரு சிறிய வேடத்தில் ஃபாக்ஸ் நடிக்க வைக்கப்பட்டார்.

அவர் அதில் சிட்னி யங்கின் (சைமன் பெக்) காதலியாக சோஃபி மேயஸ் என்ற பாத்திரமேற்று நடித்தார். இந்தப் படம் 2008 அக்டோபர் மூன்றாம் தேதி வெளியானது; ஆனால், வசூலில் தோல்வியுற்றதாகக் கருதப்பட்டது.[18][19] 2008வது வருடம் ஃபாக்ஸ் ரூமர் வில்லிஸ் உடன் வோர் என்னும் திரைப்படத்தில் லாஸ்ட் என்னும் கதாபாத்திரம் ஏற்றுத் தோன்றினார். இந்தப் படம் ஹாலிவுட்டிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் வரும் இளஞர்களைப் பற்றிய கதை. நடிப்புத் தொழிலை மேற்கொள்ள நம்பி வரும் இவர்கள் தாங்கள் கற்பனை செய்ததை விடவும் மிகக் கடினமாக இந்தத் தொழில் இருப்பதைக் காண்கிறார்கள்.


இந்தப் படம் 2008வது வருடம் அக்டோபர் 20 அன்று வெளியானது.[20]

2009வது வருடம் ஜூலை 28 அன்று, சாண்டியாகோ காமிக் கோனில் சக நடிகர்களான ஜோஷ் ப்ரோலின் மற்றும் மைக்கேல் ஃபாஸபெண்டர் ஆகியோருடன் திரைப்படத்தின் முன்னேற்றத்தில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ் மற்றும் ஜோனா ஹெக்ஸ்.

ஃபாக்ஸ் டிரான்ஸ்ஃபார்மர் திரைப்படத்தின் இணைத் திரைப்படத்தில் மிக்கேலா பேன்ஸ் என்ற தனது கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தார்.Transformers: Revenge of the Fallen டிரான்ஸ்ஃபார்மர்ஸ் இணைத் தொடரைப் படமாக்கும்போது, ஃபாக்ஸின் தோற்றம் பற்றி கொஞ்சம் சர்ச்சை எழுந்தது. இந்தப் படத்தின் இயக்குனரான மைக்கேல் பே பத்து பவுண்டுகள் எடை கூட்டும்படி அவருக்கு ஆணையிட்டார்.[21] டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் திரைப்படத்தின் பிரத்யேக முதற் காட்சி ஜூன் 8, 2009 அன்று ஜப்பானில் டோக்கியோ நகரில் திரையிடப்பட்டது. 2009வது வருடம் ஜூன் மாதம் 24ம் தேதி இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் வெளியானது.[22] ஜென்னிஃபர்'ஸ் பாடி என்னும் திரைப்படத்தில் ஃபாக்ஸ் தனது முதல் முன்னணிக் கதாபாத்திரத்தைப் பெற்றார். அவர் தலைப்புக் கதாபாத்திரமாக நடித்த இந்தப்படம் அகாடமி விருது வென்றவரான திரைக்கதை ஆசிரியர் டயப்லோ கோடி எழுதினார்.[23] இதில் அவர், மின்னோஸ்டா பண்ணை நகரத்தில் பேயால் பீடிக்கப்பட்ட, பையன்களைப் பிடித்துத் தின்னும் ஒரு மோசமான பெண்ணாக ஜென்னிஃபர் செக் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.[24] இந்தத் திரைப்படம் 2009வது வருடம் செப்டம்பர் 18[25] அன்று வெளியானது. இதில் அவருடன் அமண்டா செய்ஃப்ரைட் மற்றும் ஆடம் ப்ராடி ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.

2009வது வருடம் ஏப்ரல் மாதம் ஜோனா ஹெக்ஸ் என்னும் திரைப்படத்திற்காக ஃபாக்ஸ் நடிக்கத் துவங்கியுள்ளார். இதில் அவர் துப்பாக்கி ஏந்தும் தாரகையாக லெயிலா என்ற பாத்திரத்தில், ஜோனா ஹெக்சி ன் (ஜோஷ் ப்ரோலின்) காதலியாக நடிக்கவுள்ளார். தற்போது உள்ள தயாரிப்பில் உள்ள இந்தப் படம் 2010வது வருடம் ஜூன் 18 அன்று வெளியீட்டிற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜோஷ் ப்ரோலின் மற்றும் வில் ஆர்னெட்[26] ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் தனது வேடத்தை ஒரு சிறிய கௌரவ வேடம் என்று ஃபாக்ஸ் விவரித்தார்.[27] 2011வது வருடம் வெளியாவதற்காகத் தயாரிப்பில் இருக்கும் தி க்ராசிங் என்னும் திரைப்படத்தில் கதாநாயகி வேடத்திற்காக ஃபாக்ஸ் 2009வது வருடம் ஏப்ரல் மாதத் துவக்கத்தில் கையெழுத்திட்டார். இது மெக்சிகோவில் விடுமுறையைக் கழிக்கச் செல்கையில் போதை மருந்து கடத்தல் திட்டம் ஒன்றில் சிக்கும் ஒரு இளம் ஜோடியைப் பற்றியது.[28] 2009வது வருடம் மார்ச் மாதம் வெரைட்டி , ஃபாதாம் சித்திரக்கதைப் புத்தகங்களைத் தழுவிய திரைப்படத்தில் ஆஸ்பன் மேத்யூஸ் வேடமிட்டு முன்னணிக் கதாபாத்திரத்தில் ஃபாக்ஸ் நடிக்க இருப்பதாக அறிவித்தது. இந்தத் திரைப்படத்தை அவருடன் இணைந்து தயாரிப்பவர் ப்ரியான் ஆஸ்டின் க்ரீன்.[29] தற்போது, ஃபாதாம் தயாரிப்பிற்கு முந்தைய நிலையில் உள்ளது.[30]

பொது வாழ்வுப் படிமம்[தொகு]

தாம் ஒரு முன்னுதாரணமாக இருப்பது பற்றி தி டைம்ஸ் பத்திரிகையுடனான ஒரு பேட்டியில் ஃபாக்ஸ் கூறியுள்ளார்: "ஒரு முன்னுதாரணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய உங்களது கருத்தைப் பொறுத்தது அது". அவர் மேலும் தொடர்கிறார்: "திருமணத்திற்கு முன்னால் பாலுறவு கொள்வது தவறு என்றும், கெட்ட வார்த்தைகளில் திட்டுவது தவறு என்றும், பெண்கள் என்றால் இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்றும் உங்கள் குழந்தைகளிடம் அறிவுரை சொல்பவர்தான் ஒரு முன்னுதாரணம் என்பது உங்கள் கருத்தானால், நான் ஒரு முன்னுதாரணம் அல்ல.ஆனால், பெண்கள் தாங்கள் வலிமையாக உணரவேண்டும், புத்திசாலியாக இருக்க வேண்டும், வெளிப்படையாகப் பேசி தாம் சரியென்று நினைப்பதற்காகப் போராட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பிறகு அத்தகைய ஒரு முன்னுதாரணமாக இருக்கவே நான் விரும்புகிறேன், ஆம்."[31] அதே பேட்டியில் ஃபாக்ஸ் தாம் ஒரு குறிப்பிட்ட முறையில் வகைப்படுத்தப்படுவதைப் பற்றியும் கூறியுள்ளார்: "எந்த மாதிரி வகைப்படுத்தல்? கவர்ச்சிக் கன்னியாகவா? அது எந்த அளவு மோசமானது?" இவ்வாறு தாம் வகைப்படுத்தப்படுவது தவறான ஒரு விஷயம் அல்ல என்று அவர் உணர்கிறார். அது தமக்கு ஒரு புகழ்ச்சி என்றே அவர் கருதுகிறார். இது தமக்குச் சாதகமாக இருக்கிறது என்றும் அவர் நம்புகிறார். காரணம் அவர் கவர்ச்சியாக இருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். திறமையான நடிப்பாற்றலை அவர் வெளிப்படுத்தும்போது, மக்கள் வியப்படைந்து விடுவார்கள்.[31] டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத் தொடரில் தாம் ஏற்று நடித்த மிக்கேலா பேன்ஸ் கதாபாத்திரத்தை விடக் குறைந்த அளவுப் பாலியல் கொண்ட ஒரு கதாபாத்திரத்தைச் சித்தரிப்பதில் ஃபாக்ஸ் ஆர்வம் காட்டியுள்ளார்.[32]

தாம் ஊடகங்களின் பிரபலத் தலைப்பாக இருப்பது பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஜென்னிஃபர் அனிஸ்டன், ப்ரிட்னி ஸ்பியர்ஸ் அல்லது லின்ட்ஸே லொஹான் ஆகியோர் போன்ற நிலையில் தாம் இல்லாவிடினும், இதைத் தாம் மிகவும் கடினமாகவே உணர்வதாகவும், மற்றும் ஊடகங்களின் மஞ்சள் ஒளியை விரும்பாதவர்கள் தமக்கு அருகில் வருவதையே தவிர்க்கும் நேரங்களும் இருந்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "மற்றவர்கள் என்னை ஒரு பொருட்டாகக் கருதும் அளவு நான் என்னைக் கையாள்வது அவசியம்; அதற்கு ஏற்றாற்போல என் நடத்தை இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார். "[மேலும்] நீங்கள் பாலினக் கவர்ச்சி மிகுந்தும், புத்திசாலியாகவும் இருந்து பிறரால் தீவிரமாக கருதவும் படலாம் அல்லது நீங்கள் பாலினக் கவர்ச்சி மிகுந்து ஒவ்வொரு இரவும் கேளிக்கை இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு [ஒரு பொருட்டாக] மதிக்கப்படாமல் இருக்கலாம்"; ஆயினும் "முழுப் பித்தாக" தாம் மாறிவிடவில்லை என்றும் அவர் கூறுகிறார்.[32] "ஒப்புமையில் அவ்வளவாக அறியப்படாமல்" தாம் இருந்த நிலையிலிருந்து தற்போது இருக்கும் பிரபல நிலைக்குச் சென்றதைப் பற்றியும் ஃபாக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்: "நான் இதற்கு மிக மோசமான முறையில் தயாராக இருந்தேன் என்று நிச்சயம் உணர்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்றால், யாராவது சும்மா உட்கார்ந்து கொண்டு, 'இதுதான் நான் புகழ் வாய்ந்த ஒரு பிரபலமாக வேண்டிய நேரம்' என்று எண்ணுவதாக எனக்குத் தெரியவில்லை - ஆனால், நிச்சயம் அது சிறுபிள்ளைத் தனம் என்றே நான் நினைக்கிறேன். அதாவது, மக்கள் பார்த்த ஒரு திரைப்படத்தில் நான் இருந்தேன்."[32]

டிசம்பர் 9,2007 லைஃப் பத்திரிகையின் ஏழாவது ஆண்டு "வருடத்தின் கட்டுடைத்த வெற்றி" விருதுகளில் ஃபாக்ஸ்

பல பத்திரிகைகளின் அட்டைப் படத்தை ஃபாக்ஸ் அலங்கரித்துள்ளார். 2007வது வருடம் அவர் 'மாக்சிம் [33] பத்திரிகையில் தோன்றினார்; 2008வது வருடம், காஸ்மோ கேர்ல் ,[34][35] பா ப்ரின்ட் , ஜேக் (இத்தாலி), எஃப்ஹெச்எம் (யூகே) மற்றும் ஜிக்யூ [36][37] ஆகியவையும் அந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டன. 2009வது வருடத்தில் அந்தப் பட்டியலில்யூஎஸ்ஏ வீக் எண்ட் ,[38] எஸ்கொயர் ,[39] எம்பயர் , மாக்சிம் , ஜிக்யூ , (யூகே)என்டெர்டெயின்மெண்ட் வீக்லி மற்றும் எல்லி ஆகியவையும் அடங்கின. ஹாலிவுட் எதிர்கொள்ள விரும்பும் "நாளைய வருங்கால நட்சத்திரங்கள்" பற்றிய பேட்டிப் பத்திரிகைகளில், ஃபாக்ஸ் 17வது இடம் பெற்றார்; மாக்சிம் பத்திரிகையின் 2008வது வருடத்திற்கான கவர்ச்சி மிகுந்த 100 பேர் பட்டியலில் 16வது இடம் பெற்றார்; எஃப்ஹெச்எம் பத்திரிகையின், "2006வது வருடத்து "உலகின் மிகுந்த பாலியல் கவர்ச்சி கொண்ட 100 பெண்கள்" துணைப்பட்டியலில் 68வதாக அறிவிக்கப்பட்டார்; மாக்சிம் பத்திரிகையின் 2007வது வருடத்து கவர்ச்சி மிக்க 100 பேர் பட்டியலில் 18வது மதிப்பிடம் பெற்றார்; மூவிஃபோன் பத்திரிகையின் "25 வயதுக்கு உட்பட்ட கவர்ச்சி மிக்க 25 நடிகர்கள்" பட்டியலில் முதல் இடம் வென்றார் மற்றும் மாக்சிம் பத்திரிகையின் 2009வது வருடத்து கவர்ச்சி மிக்க 100 பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார். 2008வது வருடம், எஃப்ஹெச்எம் வாசகர்கள் "உலகின் மிகப் பெரும் பாலியல் கவர்ச்சி மிக்க பெண்" என்று அவருக்கு வாக்களித்தனர்.[1][2]

2009வது வருடம் ஜூலை பிற்பகுதியில், சில ஊடகங்களில் ஃபாக்ஸின் அதி வெளிப்பாடு, பல ஆண் வலைத்தளங்கள் அவரைப் புறக்கணிப்பு செய்வதில் விளைந்தது.[40] ஏஓஎல்லின் ஆண்-வலைத்தளமான அசைலம் 2009வது வருடம் ஆகஸ்ட் 4ம் தேதி அன்று அவரது பெயரையோ அல்லது செய்தியையோ வலைத்தளம் வெளியிடாது என்ற உறுதி மொழியுடன் அந்த நாளை "மேகன் ஃபாக்ஸ் இல்லாத ஒரு நாள்" என்று அறிவித்தது; தங்களது இந்த நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு இதர ஆண்-வலைத்தளங்களையும் அவர்கள் கோரினர்; (ஆஸ்க்மென்.காம், ஜஸ்ட் எ கை திங், மற்றும் பேன்ட் இன் ஹாலிவுட் போன்ற) பல வலைத் தளங்கள் இதற்கு இணங்கின. திபேச்சிலர்கை.காம் என்னும் வலைத் தளத்தின் எரிக் ரோஜல், நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகையில் கூறினார்: "கேளுங்கள், நாம் மேகனை விரும்புகிறாம்" "உயிருடன் இருக்கும் வேறு எந்தப் பிரபலத்தையும் விட பெரும் அளவில், நம் வலைத்தளத்தைப் பலர் உருட்டி விழித்துப் பார்ப்பதற்கு அவர் காரணமாகிறார்- அவர் வெள்ளை சடடை ஒன்றைப் போட்டுக் கொண்டு தெருவில் நடக்கும் ஒரு புகைப்படத்தைப் போட்டாலே போதும். [ஆனால்] வேறொரு இளம் நடிகைக்கு கவனம் அளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது."[40] இதற்குப் பதிலிறுப்பாகநைலான் என்னும் பத்திரிகைக்கு 2009 செப்டம்பர் மாதம் அளித்த ஒரு பேட்டியில், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்திற்கான "ஊடகங்களின் திடீர்த் தாக்குதல்", ஊடகங்களில் தமது நல்வரவை மிக அதிக அளவில் நீட்டிப்பதில் விளைந்து விட்டது என்று ஃபாக்ஸ் கூறினார்: "[படப்பிடிப்பு நிறுவனம்] $700 மில்லியன்கள் வசூல் செய்ய வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய ஒரு திரைப்படத்தில் நானும் இருந்தேன்; அவர்கள் தங்கள் நடசத்திரங்கள் திகட்டும் அளவு ஊடகங்களில் தோன்றுமாறு செய்து விட்டனர்." என்று அவர் கூறினார்.[41] "நான் உருப்படியாக ஏதும் செய்வதற்கு முன்பாக என்னைக் கண்டு மக்கள் சலிப்படைவதை நான் விரும்பவில்லை."[41]

மைக்கேல் பே படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றி, அடால்ஃப் ஹிட்லர் உடன் அவரை ஒப்புமை செய்ததையும் உள்ளிட்டு, ஃபாக்ஸ் எழுப்பியதாகச் சொல்லப்பட்ட, குற்றச்சாட்டுகளிலிருந்து அவரைக் காக்கும் வகையில், 2009வது வருடம் செப்டம்பர் 11ம் தேதி டிரான்ஸ்ஃபார்மர்ஸ் குழுவின் கையெழுத்திடப்படாத ஒரு கடிதம் வெளியானது. அவரது பொது வாழ்க்கைப் பிம்பத்திற்கு மாறான வகையில், படப்பிடிப்புத் தளத்தில் உடன் வேலை செய்வதைப் பொறுத்தவரையில் ஃபாக்ஸ் விரும்பத்தகாதவர் என்றும், மோசமான நடத்தை கொண்டவர் என்றும் கடுமையான முறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீது அந்தக் கடிதம் சுமத்தியது. பே, தாம் அந்தக் கடிதத்தை பொறுத்தருளவில்லை எனக் கூறி ஃபாக்ஸிற்கு துணை நின்றார். டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தில் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றிய ஆண்டனி ஸ்டெயின்ஹார்ட்டும் ஃபாக்ஸின் உதவிக்கு வந்தார். ஃபாக்ஸ், "பிறரது உணர்வுகள் குறித்துக் கடுமையாகவோ அல்லது செய்யப்பட வேண்டிய பணி குறித்து சிந்திக்காமல் இருந்ததாகவோ" தாம் ஒரு போதும் கண்டதில்லை என்று அவர் கூறினார்.[42]

ஆஞ்ஜலினா ஜோலியுடனான ஒப்பீடு[தொகு]

ஃபாக்ஸ், பல முறை நடிகை ஆஞ்ஜலினா ஜோலியுடன் ஒப்பிடப்பட்டுள்ளார். ஊடகங்கங்கள் அவரை "அடுத்த ஆஞ்ஜலினா ஜோலி" என்றே முத்திரை குத்தியுள்ளன.[43][44][45] ஃபாக்ஸ் ஜோலியுடன் ஒப்பிடப்படுவதன் காரணம் இருவரிடமும் "பச்சைக் குத்தல் தொகுப்பு" உள்ளது. மேலும் அவர்களது அந்தஸ்து, "பாலியல் குறியீடாக நிறுவப்பட்டுள்ளது".[46][47][48] இத்தகைய ஒப்புமைகள் ஊடகத்தினரின் படைப்பாற்றல் இன்மையைக் குறிப்பதாக ஃபாக்ஸ் கருத்து தெரிவித்தார். இவை ஜோலியும் தாமும் கருப்பு முடி கொண்டிருப்பதாலும், இருவரும் பச்சை குத்திக் கொள்வதாலும், இருவரும் அதிரடித் திரைப்படங்களில் நடிப்பதாலுமே கூறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த லாரா க்ராஃப்ட் திரைப்படத்தில் ஜோலிக்குப் பதிலாக ஃபாக்ஸ் நடிக்கப்போவதாக பல உறுதியாகாத வதந்திகள் இருந்தன.[49][50][51] இந்த ஒப்புமைகளைப் பற்றி மேலும் கூறுகையில், ஃபாக்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: "நான் பச்சை குத்திக் கொண்ட ஒரு கருத்த முடி கொண்ட பெண். கெட்ட வார்த்தைகள் பேசுகிறேன். மேலும் நான் முன்னமேயே பாலியல் பற்றிப் பேசியிருக்கிறேன். அதைப் பற்றி நான் நகைச்சுவையாகப் பேசுவது மக்களுக்கு கோபமூட்டுகிறது. அதனால் அவருடன் தொடர்ந்து ஒப்பிட்டு வருகிறார்கள்."[52] ஜோலியை சந்திக்கும் வாய்ப்பைத் தான் பெற்றதில்லை என்று கூறும் ஃபாக்ஸ், தமக்கு "அச்சமாக இருப்பதால்,அதைத் தவிர்க்க" முயன்றிருப்பதாகவும் கூறியுள்ளார்; ஏனெனில், "ஜோலி ஒரு சக்தி வாய்ந்த நபர்,அவர் என்னை உயிரோடு விழுங்கி விடுவார் என்று அடித்துச் சொல்வேன்".[49][53] ஃபாக்ஸ் தொடர்ந்து கூறுகிறார்: "நான் யாரென்றே அவருக்குத் தெரிந்திருக்காது என்று நிச்சயமாக நம்புகிறேன்" ஆனால், அவராக நான் இருந்தால், 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தில் நடித்து, எனக்கு அடுத்து வரப்போவதாகக் கூறப்படும் இந்த கேடுகெட்ட மாட்டு சாணங் ..தா யார்?' என்றுதான் நினைத்திருப்பேன். நான் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. எனக்குத் தர்ம சங்கடமாக இருக்கும்."[46][54]

பச்சை குத்தல்கள்[தொகு]

2007 அக்டோபரில், வெளியில் தெரியுமாறு குத்தப்பட்ட இரண்டு பச்சைகளுடன் ஃபாக்ஸ்

ஃபாக்ஸ் பச்சை குத்திக் கொண்டுள்ள எட்டு இடங்கள் அறியப்பட்டுள்ளன;[55] இவற்றில் அவருடன் முன்னால் மணவுறுதி மேற்கொண்ட "ப்ரியான்" என்பவரின் பெயர் அவரது கீழ் இடுப்பிலும், மர்லின் மன்றோவின் முகம் வலது முன் கையிலும் பச்சை குத்தப்பட்டுள்ளன.[56] தனது வலது தோளிலும் ஃபாக்ஸ் ஒரு பச்சை குத்திக் கொண்டுள்ளார். அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "பொன்முலாம் பூசிய பட்டாம்பூச்சிகளைக் கண்டு நாம் எல்லாரும் சிரிப்போம்." இது வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய கிங் லியர் என்னும் நாடகத்திலிருந்து தழுவப்பட்ட ஒரு வசனமாகும். அவரது இடது மணிக்கட்டின் உட்புறம் ஒரு யின் மற்றும் யாங்க் பச்சை உள்ளது. அவரது விலாவெலும்பின் இடது புறம் உள்ள ஒரு பச்சையில் எழுதப்பட்டுள்ள வாசகம்: "ஒரு பையன் தன் இதயத்தை நொறுக்கும்வரை காதல் என்பதையே அறியாத சிறுமி ஒருத்தி இருந்தாள்". மேலும், இவர் தமது கழுத்தில் "வலிமை" என்று பொருள்படும் ஒரு சீன வார்த்தையையும் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.[57] தமது வலது காலில் கணுக்காலுக்கு மேலாக உட்புறமாக, ஐந்து முனை நட்சத்திரம் ஒன்றின் மீதாகப் பரவும் இளம்பிறை நிலவு ஒன்றையும் அவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.[58] ஃபாக்ஸ் குத்திக் கொண்டுள்ள பச்சைகளில் இது ஒன்றுதான் வண்ணம் கொண்டது.[59]

தாம் மர்லின் மன்றோவின் பச்சை குத்திக் கொண்டிருப்பதைப் பற்றிக் கூறுகையில், ஃபாக்ஸ் இவ்வாறு உரைத்தார்: "நான் தொலைக் காட்சியில் முதன் முதலாகப் பார்த்த நபர்களில் அவர் ஒருவர், அதாவது, சொல்லப் போனால், நான் பிறந்து சில நொடிகளிலேயே. அவரது குரல் உயர்வதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நான் அழுது விடுவேன். நான் சிறுமியாக இருக்கும்போது அது ஏனென்று எனக்குத் தெரிந்ததில்லை, ஆனால் நான் பிரத்யேகமான கருத்துக்களைக் கொண்டிருந்தேன்". மேலும் ஃபாக்ஸ் அவரிடம் எப்போதும் பச்சாதாபம் கொண்டிருந்தார்.[60]

தமது யின்/யாங் பச்சையை அகற்றிக் கொள்வதில் ஃபாக்ஸ் ஆர்வம் காட்டியுள்ளார். ஏனெனில், அந்தப் பச்சையைக் குத்திய கலைஞர் மரிஜுவானாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் அதைச் "சரியாகச் செய்யவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், 2009 ஆகஸ்ட்[60] வரை ஃபாக்ஸ் அந்தப் பச்சையை அகற்றாமல்தான் வைத்துள்ளார். தமது பச்சைகளைப் பற்றிக் கூறும்போது, ஃபாக்ஸ் சொல்கிறார்: ஒவ்வொரு முறை பச்சை குத்திக் கொள்ளும்போதும், "அதை வேண்டாம் என்று சொல்லும் யாரிடமும் சின்னதாக '..த்தா' என்று சொல்வதைப் போன்றது அது."[61]

சொந்த வாழ்க்கை[தொகு]

2004வது வருடம், ஹோப் அண்ட் ஃபெய்த் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ப்ரியான் ஆஸ்டின் க்ரீனை முதன் முறையாகப் பார்த்ததிலிருந்தே, ஃபாக்ஸ் அவருடன் தொடர்ந்து பழகி வருகிறார்.[3][4] 2006வது வருடம் இருவருக்கும் திருமணம் நிச்சயமானது, ஆனால் திருமணம் செய்து கொளவதாகத் திட்டம் ஒன்றும் இல்லை என்று அவர்கள் இருவருமே அறிவித்தனர்.[4] 2008 ஜுலை[62][63] மற்றும் 2009 ஃபிப்ரவரியில் இந்த ஜோடி தங்கள் உறவை முடித்துக் கொண்டு விட்டதாக கூறப்பட்டது;[64][65]. இருப்பினும், அந்த இரண்டு நிகழ்வுகளின்போதும், தம் இருவருக்கும் உள்ள உறவு தொடர்வதாக ஃபாக்ஸ் மற்றும் கரீன் இருவருமே உறுதி செய்தனர்.[3][66] 2009 ஜூன் 15 அன்று Transformers: Revenge of the Fallen திரைப்படத்தின் முதற்காட்சியின்போது தான் தனியாக இருப்பதாக ஃபாக்ஸ் தெரிவித்தார்;[67] இருப்பினும், பிற்பாடு அவர் க்ரீனுடன் காணப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் உறவு பூண்டிருப்பதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன.[68] ஃபாக்ஸ் அளித்த "சாட்டர்டே நைட் லைவ் " என்னும் தொடரின் 35வது பருவத்தின் முதற்காட்சியில் "மேகன்'ஸ் ரூம்மேட்" என்னும் ஒரு எஸ்என்எல் எண்ணியல் சிறு காட்சியிலும், க்ரீன் தோன்றினார்.

2009 செப்டம்பரில் ஜென்னிஃபர் பாடி முதற்காட்சியின்போது ஃபாக்ஸ்

ஜென்னிஃபர் பிளாங்க், கெல்லான் ரூட், ஜென்னிஃபர்'ஸ் பாடி யில் தமது சக நட்சத்திரமான அமண்டா செய்ஃபிரைட், மைக்கேல் பைஹன் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தில் தமது சக நட்சத்திரமான ஷியா லாபிவௌஃப் ஆகியோருடன் ஃபாக்ஸ் நல்ல முறையில் நட்பு கொண்டுள்ளார்.[69] அவர் சித்திரப் புத்தகங்கள், அசைவூட்டங்கள் மற்றும் ஒளிக்காட்சி விளையாட்டுக்கள் ஆகியவற்றின் ரசிகை. 12வயதில் வயதில் தாம் கார்ட்டூன் நெட்வொர்க்கில் அடல்ட் ஸ்விம் அசைவூட்டக் காட்சிகளைப் பார்த்ததிலிருந்தே கலையிலான தமது விருப்பம் தொடங்கி விட்டதாக அவர் கூறியுள்ளார்.[14]

ஃபாக்ஸின் மிகப் பிரியமான கலைஞர் மைக்கேல் டர்னர். இவரது ஃபாதாம் சித்திரக் கதையை நீண்ட காலமாகத் தமக்குள் ஊன்றிய பிரியம் என்று அவர் விவரிக்கிறார்.[7] ஃபாக்ஸிடம் இரண்டு நாய்கள் உள்ளன. இவற்றில், பங்க்-உருச்சின்னமான சிட் விஷியஸ் பெயரை ஒட்டிப் பெயரிடப்பட்ட ஒரு பொமரேனியன் நாயும் உண்டு.[69][70] ஃபாக்ஸ், தாம் போதை மருந்துகளைப் பயன்படுத்தியதாக வெளிப்படையாகவே கூறியுள்ளார். அதனால், தாம் அதை விரும்பவில்லை என்று தெரிந்து கொண்டதாகவும், மேலும், தம்மையும் உள்ளிட்டு, போதை மருந்தின் பிடியில் இல்லாத சிலரைத் தாம் அறிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.[71] மரிஜுவானா சட்டபூர்வமாக்கப்படுவதைத் தாம் ஆதரிப்பதாக ஃபாக்ஸ் வெளிப்படையாக கூறியுள்ளார். அதை ஒரு போதை மருந்தாகத் தாம் நினைக்கவில்லை என்றும், அது விற்கப்படும் இடங்கள் இரண்டொன்றை முதலில் வாங்கும் நபர் தாமாகத்தான் இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.[72]

2008 செப்டம்பரில், ஃபாக்ஸ் தாம் ஒரு இருபால் புணர்வாளர் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்; ஜிக்யூ பத்திரிகையுடனான ஒரு பேட்டியில், தமக்கு 18 வயதாக இருக்கும்போது ஒரு பெண் ஆடை அவிழ்ப்பு நடனக்காரியுடன் காதல் கொண்டதாகவும், அவருடன் உறவை மேற்கொள்ளத் தாம் முயன்றதாகவும் ஃபாக்ஸ் கூறினார். தமது இந்த அனுபவத்தை, "எல்லா மனிதர்களும் இரு பாலினராலும் ஈர்க்கப்படும் ஆற்றல் கொண்டே பிறக்கிறார்கள்" என்னும் தமது நம்பிக்கையை விளக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார்; இதற்கும் மேலாக, ஒலிவியா வைல்ட் மற்றும் ஜென்னா ஜேம்சன் ஆகியோரிடமும் அவர் ஆர்வம் காட்டியுள்ளார்.[73][74][75] 2009 மே மாதம் தமது இருபால் புணர்ச்சித் தன்மையை அவர் உறுதி செய்தார்.[76] இருப்பினும் அவர், எல்லி பத்திரிகையின் 2009வது வருட ஜூன் மாத இதழில் அந்த ஆடை அவிழ்ப்பு நடனக்காரியுடனான தமது உறவு தொடர்பான சம்பவங்களைத் தாம் உருமாற்றிச் சொன்னதாகவும், தமது கடந்த காலத்தை "கிளுகிளுப்பாக மாற்றி"ச் சில ஆண் பத்திரிகையாளர்களுக்குத் தாம் கொடுத்ததாகவும் கூறினார். "அவர்கள் பையன்கள்; வெகு சுலபமாக அவர்களைக் கையாண்டு விடலாம்" என்று அவர் கூறினார். "அவர்களுக்கு கதைகள் சொல்லி அவர்கள் என்னைப் பார்த்து பிரமிக்க வைப்பேன். அவை எல்லாமே உண்மை அல்ல. உண்மையில், அதில் பெரும்பகுதி பிதற்றல்தான்".[77] ஃபாக்ஸ் கூறினார்:" அவள் எனது பெண் சிநேகிதி என்று நான் கூறியதேயில்லை! நான் அவளைக் காதலித்ததாகவே சொன்னேன், அவளை நான் காதலித்தேன்தான். உண்மையான கதை அமைதியானதுதான். அது பாலியல் தொடர்பான, ஜாலியான, கட்டற்ற கற்பனைக் கதையல்ல. ஆனால், அது நீங்கள்ஜிக்யூ விற்குச் சொல்லக் கூடிய கதை அல்ல".[77] 2009வது வருடம் ஜூன் 15ம் தேதி டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ஜ் ஆஃப் தி ஃபாலன் திரைப்படத்தின் ஐக்கிய இராச்சியத்திலான முதற்காட்சியின்போது தமக்கு செரில் கோல் மீதான ஆவலையும், கோலே குத்திக் கொண்டிருக்கும் பச்சைக் குறிகள் மீதான காதலையும் ஃபாக்ஸ் வெளியிட்டார்.[78] 2009வது வருடம் ஜூன் மாதம் தி கைல் அண்ட் ஜாக்கி ஓ ஷோ நிகழ்ச்சியில் தோன்றியபோது, கொரிய ஆண் பாப் பாடகரான ரெயின் மீது தாம் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறினார்.[79][80][81]

மேலும் தமது பாதுகாப்பின்மை உணர்வு மற்றும் சுயத் தீங்கு ஆகியவற்றைப் பற்றியும் ஃபாக்ஸ் வெளிப்படையாகவே இருந்து வந்துள்ளார். தமக்கு சுய மரியாதை மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் ஒப்புக் கொள்கிறார்:

Yeah. But I don't want to elaborate. I would never call myself a cutter. Girls go through different phases when they're growing up, when they're miserable and do different things, whether it's an eating disorder or they dabble in cutting. I'm really insecure about everything. I see what I look like, but there are things that I like and things that I dislike. My hair is good. The color of my eyes is good, obviously. I'm too short. But overall, I'm not super excited about the whole thing. I never think I'm worthy of anything... I have a sick feeling of being mocked all the time. I have a lot of self-loathing. Self-loathing doesn't keep me from being happy. But that doesn't mean I don't struggle. I am very vulnerable. But I can be aggressive, hurtful, domineering and selfish, too. I'm emotionally unpredictable and all over the place. I'm a control freak.[82]

மேலும், பாக்ஸிற்கு பறப்பதில் அச்சம் உண்டு; தமக்கு 20 வயதாகுபோது இந்த அச்சம் உருவானதாக அவர் கூறினார். தமக்கு அச்சத் தாக்குதல் நிகழாதிருப்பதற்கு தாம் பல வழிகளை முயன்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்; இவற்றில் குறிப்பிடத் தக்கது விமானத்தில் ஏறுகையில் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாடிய பாடல்களைக் கேட்பதாகும்.[83] இதற்கும் மேலாக, அவர் ஆண்கள் மீது பொதுவான ஒரு நம்பிக்கையின்மையைத் தெரிவித்துள்ளார்: "எனக்கு அவர்களைப் பிடிக்கவில்லை அல்லது அவர்களை நான் நம்பவில்லை" என்று ஃபாக்ஸ் தெரிவித்தார்.[77]

திரைப்பட விவரங்கள்[தொகு]

2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தின் முதற்காட்சியின்போது, உடன் நடித்த ராச்சேல் டெயிலருடன் ஃபாக்ஸ்
திரைப்படம்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2003 பேட் பாய்ஸ் II க்ளப் கிட் துணை நடிகர்

(பெயர் குறிப்பிடவில்லை)

2004 கன்ஃபெஷன்ஸ்ஆஃப் எ டீனேஜ் டிராமா க்வீன் கார்லா சாண்டினி துணைக் கதாகதாபாத்திரம்
2007 டிரான்ஸ்ஃபார்மர்ஸ் மிக்கேலா பேன்ஸ் முன்னணிக் கதா கதாபாத்திரம்
2008 ஹௌ டு லூஸ் ஃபிரண்ட்ஸ் அண்ட் ஏலியனேட் பீபிள் சோஃபி மேயஸ் துணைக் கதாபாத்திரம்
வோர் லாஸ்ட் முன்னணிக் கதாபாத்திரம்
2009 Transformers: Revenge of the Fallen மிக்கேலா பேன்ஸ் முன்னணிக் கதாபாத்திரம்
ஜென்னிஃபர்'ஸ் பாடி ஜென்னிஃபர் செக் முன்னணிக் கதாபாத்திரம்
2010 ஜோனா ஹெக்ஸ் லெயிலா (தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது
பேஷன் பிளே படப்பிடிப்பில் உள்ளது.
2011 தி கிராஸிங் அறிவிக்கப்பட உள்ளது முன்னணிக் கதாபாத்திரம் (தயாரிப்புக்கு முந்தைய நிலையில் உள்ளது)
டிரான்ஸ்ஃபார்மஸ் 3 மிக்கேலா பேன்ஸ் முன்னணிக் கதாபாத்திரம் (தயாரிப்புக்கு முந்தைய நிலையில் உள்ளது)

[84][85][86]

தொலைக் காட்சி அல்லது ஒளிக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படம்
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
2001 ஹாலிடே இன் தி சன் ப்ரியன்னா வாலேஸ் நேரடியாக- ஒளித்தகட்டிற்கு

(அறிமுக கதாபாத்திரம்)

2004 க்ரைம்ஸ் ஆஃப் ஃபேஷன் கான்டேஸ் தொலைக்காட்சித் திரைப்படம்
தொலைக்காட்சி
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
2002–2003 ஓஷன் ஏவ் ஐயோன் ஸ்டார் முன்னணிக் கதாபாத்திரம்
2004–2006 ஹோப் அண்ட் ஃபெய்த் சிட்னி ஷானோவ்ஸ்கி வழக்கமான கதாபாத்திரம்
தொலைக்காட்சியில் கௌரவத் தோற்றங்கள்
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
2003 வாட் ஐ லைக் அபவுட் யூ ஷானோன் "லைக் எ வர்ஜின் (கிண்டா)" (சீசன் 2, எபசோடு 5)
2004 டூ அண்ட் எ ஹாஃப் மென் ப்ரூடென்ஸ் "கேமெல் ஃபில்டர்ஸ் அண்ட் ஃபெர்மோன்ஸ்" (சீசன் 1, எபிசோடு 12)
தி ஹெல்ப் கேசென்ட்ரா ரிட்ஜ்வே "பைலட்" (சீசன்1, எபிசோடு 1)


"ஓல்லீ ஷேர்ஸ்" (சீசன் 1, எபிசோடு 2)
"ட்வையான் கெட்ஸ் எ கோல்ட்" (சீசன் 1, எபிசோடு 5)

மற்றவை
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
2009 எவ்வரி கேர்ல் தாமாகவே இசை ஒளிக் காட்சி

விருதுகள்[தொகு]

விருதுகள்
ஆண்டு முடிவு விருது பிரிவு பரிந்துரைக்கப்பட பணி
2005 பரிந்துரை இளங்கலைஞர் விருது ஒரு தொலைக் காட்சி தொடரில் (நகைச்சுவை அல்லது நாடக பாணி)சிறந்த செயலளிப்பு- இளைய துணைக் கதாபாத்திர நடிகை ஹோப் அண்ட் ஃபெய்த்
2007 டீன் சாய்ஸ் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட நடிகை: அதிரடி சாகசம் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்:

கட்டுடைத்த வெற்றி பெற்ற பெண்

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்:

லிப்லாக்

தேசிய திரைப்பட விருது ஒரு பெண்மணியின் மிகச் சிறந்த செயலளிப்பு
2008 எம்டிவி திரைப்பட விருது கட்டுடைத்த செயலளிப்பு
2009 வெற்றி[87] டீன் சாய்ஸ் விருது விருப்பத் தேர்வான பெண்:கவர்ச்சிக் கன்னி ஓன்றுமில்லை.
விருப்பத் தேர்வான வேனிற்கால திரைப்பட நட்சத்திரப் பெண் Transformers: Revenge of the Fallen
ஸ்க்ரீம் விருது[88] சிறந்த அறிவியல்-புனைகதை நடிகை
ஸ்பைக் ஒளிக்காட்சி விளையாட்டு விருதுகள் ஒரு மனிதப் பெண்ணின் மிகச் சிறந்த செயலளிப்பு டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஃபாலன்
(Source: IMDb.com)

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Maxim". BBC News. 2008-04-24. http://news.bbc.co.uk/1/hi/entertainment/7364647.stm. பார்த்த நாள்: 2008-04-25.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "bbc" defined multiple times with different content
 2. 2.0 2.1 "Megan Fox is world's sexiest woman". News.com.au. 2008-04-24. Archived from the original on 2008-05-08. http://web.archive.org/web/20080508040824/http://www.news.com.au/dailytelegraph/story/0,22049,23591039-5006920,00.html. பார்த்த நாள்: 2008-04-25. 
 3. 3.0 3.1 3.2 "Megan Fox heats up talk about film, love life". Access Hollywood (2009-05-05). பார்த்த நாள் 2009-05-05.
 4. 4.0 4.1 4.2 "On The Cover: Megan Fox". The Evening Herald. பார்த்த நாள் 2008-08-18.
 5. "Megan Fox on family background and celebrity inspired tattoo from Maxim Radio". Sirius.com. பார்த்த நாள் 2009-08-19.
 6. 6.0 6.1 6.2 6.3 "18 Things you didn't know about Megan Fox" (2009-08-04). பார்த்த நாள் 2009-08-09. பிழை காட்டு: Invalid <ref> tag; name "coed" defined multiple times with different content
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 "Megan Fox". Elle (2009-05-26). பார்த்த நாள் 2009-06-12. பிழை காட்டு: Invalid <ref> tag; name "elle" defined multiple times with different content
 8. "Who does Megan have tattooed on her arm?". Sirius. பார்த்த நாள் 2008-04-26.
 9. டெர்ரி மோர்ரோ, இன்சைடர்:ஆம்பிளைப் பெண்ணிலிருந்து 'பாலியல் கவர்ச்சி மிக்க'வராக உருமாறும் ராக்வுட் நட்சத்திரம், நோக்ஸ்வில்லி நியூஸ் செண்டினல், மே 2, 2008
 10. 10.0 10.1 "Megan Fox Celebrity Profile Biography". Rotten Tomatoes. பார்த்த நாள் 2008-04-25.
 11. "Megan Fox: Biography". MSN. பார்த்த நாள் 2008-04-25.
 12. AMTC (2009-09-16). "Success Stories: Megan Fox". www.amtcworld.com. பார்த்த நாள் 2009-09-16.
 13. மார்னிங்சைட்அகாடமி.காம்
 14. 14.0 14.1 14.2 14.3 "Megan Fox: Celeb Q&A". CosmoGirl! Magazine (June/July). பார்த்த நாள் 2009-08-09. பிழை காட்டு: Invalid <ref> tag; name "cg" defined multiple times with different content
 15. 15.0 15.1 "Megan Fox Biography". Yahoo! Movies. பார்த்த நாள் 2008-04-26.
 16. "Megan Fox: Awards". IMDb. பார்த்த நாள் 2009-08-08.
 17. Kit, Borys (2007-06-29). "Fox making 'Friends' for Weide pic". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3icab172bb79f71a0737ec507b71e6d9f4. பார்த்த நாள்: 2007-06-29. 
 18. "How to Lose Friends and Alienate People: Release Date". IMDb. பார்த்த நாள் 2009-08-19.
 19. பாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் How to Lose Friends & Alienate People
 20. "Whore (2008 film): Release Date". IMDb. பார்த்த நாள் 2009-07-20..
 21. "டிரான்ஸ்ஃபார்மஸ் இணைத் திரைப்படத்திற்காக 10 பவுண்டுகள் எடை கூட்டும்படி மேகன் ஃபாக்ஸ் கூறப்பட்டார்" யாஹூ எண்டர்டெயின்மென்ட்!
 22. "Transformers Moved Up Two Days". ComingSoon.net. 2009-02-12. http://www.comingsoon.net/news/movienews.php?id=52843. பார்த்த நாள்: 2009-02-12. 
 23. "IMDb Pro : Jennifer's Body Business Details". Pro.imdb.com. பார்த்த நாள் 2009-07-17.
 24. "Jennifer's Body: Story Line". IMDb. பார்த்த நாள் 2009-08-08.
 25. "Jennifer's Body". IMDb. பார்த்த நாள் 2009-07-20..
 26. Kit, Borys (March 3, 2009). "Megan Fox lines up two film projects". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3iee48bd23f07a5c212caf86dbc16e17a4. பார்த்த நாள்: April 8, 2009. 
 27. Liam (2009-06-23). "Megan Fox only has a small role in Jonah Hex". Filmonic. பார்த்த நாள் 2009-07-03.
 28. "The Crossing". பார்த்த நாள் 2009-08-31.
 29. By (2009-03-03). "Megan Fox to star in 'Fathom' – Entertainment News, Film News, Media". Variety. பார்த்த நாள் 2009-07-17.
 30. "IMDb Pro : Fathom Business Details". Pro.imdb.com. பார்த்த நாள் 2009-07-17.
 31. 31.0 31.1 Adam (2009-06-07). "Megan Fox: Im a role model for strong women". பார்த்த நாள் 2009-08-07. பிழை காட்டு: Invalid <ref> tag; name "london_interview" defined multiple times with different content
 32. 32.0 32.1 32.2 "Megan Fox: 'Transformed' by fame". E! Online (2009-06-09). பார்த்த நாள் 2009-08-08.
 33. "Megan Fox". The Insider. பார்த்த நாள் 2009-06-12.
 34. "Megan Fox – Picture of Transformers Star Megan Fox". CosmoGIRL. பார்த்த நாள் 2009-06-12.
 35. "Megan Fox is a Cosmo Girl!". The Insider. பார்த்த நாள் 2009-06-12.
 36. Published 9/16/08. "Pictures". The Insider. பார்த்த நாள் 2009-06-12.
 37. "GQ Articles, Pics, and More on men.style.com". Men.style.com. பார்த்த நாள் 2009-07-17.
 38. "Seth Rogen & Megan Fox candid interview". USA Weekend (2009-04-26). பார்த்த நாள் 2009-06-12.
 39. "Sex Oozes Out of Megan Fox’s Pores". The Insider. பார்த்த நாள் 2009-06-12.
 40. 40.0 40.1 Wilkinson, Amy (2009-07-29). "This Just In: Men Are Totally Over Megan Fox (Stranger Things Have Happened!)". MTV. http://hollywoodcrush.mtv.com/2009/07/29/this-just-in-men-are-totally-over-megan-fox-stranger-things-have-happened/. பார்த்த நாள்: 2009-10-01. 
 41. 41.0 41.1 Naoreen, Nuzhat (2009-09-30). "Megan Fox Sounds Off On Overexposure And That 'Body' In Nylon: Cover Story". MTV. http://hollywoodcrush.mtv.com/2009/09/30/megan-fox-sounds-off-on-overexposure-and-that-body-in-nylon-cover-story/. பார்த்த நாள்: 2009-10-01. 
 42. "Fox addresses transformers crew over letter". IBTimes. 2009-09-18. http://www.ibtimes.co.uk/contents/20090918/fox-addresses-transformers-crew-over-letter.htm. பார்த்த நாள்: 2009-09-23. 
 43. "The Next Angelina: Evangeline Lilly vs. Megan Fox" (2009-05-27.). பார்த்த நாள் 2009-07-20..
 44. "Who's Hotter? Megan Fox Or Angelina Jolie". New York Post (2009-06-04). பார்த்த நாள் 2009-06-12.
 45. "Megan Fox as Angelina Jolie 2.0 – Comedian or Sex Symbol?". National Ledger. பார்த்த நாள் 2009-06-12.
 46. 46.0 46.1 "News – Megan Fox: Stop Comparing Me to Angelina Jolie!". US magazine (2008-10-07). பார்த்த நாள் 2009-06-12.
 47. "It's war! Megan Fox vs. Angelina – Life and Style". Lifeandstylemag.com. பார்த்த நாள் 2009-06-12.
 48. "Megan Fox: “Stop It With The Angelina Jolie Comparisions [sic”]". Popcrunch.com. பார்த்த நாள் 2009-06-12.
 49. 49.0 49.1 "I'm terrified of Angelina Jolie, admits Transformers star Megan Fox". The Daily Record. பார்த்த நாள் 2009-06-12.
 50. "Will Megan Fox replace Angelina Jolie as Lara Croft?". Los Angeles Times. பார்த்த நாள் 2009-06-12.
 51. "Megan Fox “Lara Croft: Tomb Raider” Replacement For Angelina Jolie". Popcrunch.com. பார்த்த நாள் 2009-06-12.
 52. Hollie McKay (2009-07-30). "Megan Fox Bites Back: I Talk About Sex, That Doesn't Make Me Angelina Jolie". Fox News. பார்த்த நாள் 2009-08-07.
 53. "Angelina Jolie Power Too Much For Megan Fox". National Ledger (2009-05-02). பார்த்த நாள் 2009-06-12.
 54. "Megan Fox: 'Fallen' angel". Entertainment Weekly. பார்த்த நாள் 2009-06-12.
 55. "Shia LaBeouf and Megan Fox Interview – TRANSFORMERS". Collider.com (2007-06-18). பார்த்த நாள் 2009-06-12.
 56. "Megan Fox's Marilyn Monroe Tattoo – Art Inspired by Marilyn Monroe". LIFE (2007-08-25). பார்த்த நாள் 2009-06-12.
 57. "Megan Fox Tattoos". Meganfoxbuzz.com. பார்த்த நாள் 2009-06-28.
 58. "Megan Fox's Tattoos". LIFE (2007-06-01). பார்த்த நாள் 2009-08-31.
 59. Browne, Sally (2007-06-23). "A star is transformed". News.com.au. மூல முகவரியிலிருந்து 2012-12-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-04-25.
 60. 60.0 60.1 "Megan Fox Regrets Stoner Tattoo". Starpulse Entertainment News (2007-06-24). பார்த்த நாள் 2009-06-12.
 61. "Quote Of The Day: Megan Fox's Tattoo Rebellion". Starpulse Entertainment News. பார்த்த நாள் 2009-06-12.
 62. "Where's Megan Fox's Engagement Ring". Star Magazine (2008-06-16). பார்த்த நாள் 2009-07-20.
 63. James Wray and Ulf Stabe (2008-07-03). "Megan Fox's engagement off". Monsters and Critics. மூல முகவரியிலிருந்து 2012-09-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-06-12.
 64. Jordan, Julie (2009-02-24). "Megan Fox and Brian Austin Green Call Off Engagement". People. பார்த்த நாள் 2009-06-12.
 65. மேகன் ஃபாக்ஸும் ப்ரியான் ஆஸ்டின் க்ரீனும் தங்கள் திருமண உறுதியை ரத்து செய்கிறார்கள் யூஎஸ்வீக்லி, ஃபிப்ரவரி 24, 2009.
 66. "News – Brian Austin Green on Megan Fox: "We're Solid"". US Magazine (2008-07-09). பார்த்த நாள் 2009-06-12.
 67. "'I'm what you would call single'". The Sun (2009-06-15). பார்த்த நாள் 2009-06-25.
 68. "Megan Fox & Brian Austin Green Totally On Again". OK! Magazine (2009-06-30). பார்த்த நாள் 2009-06-30.
 69. 69.0 69.1 Bullock, Maggie (2009-05-26). Megan Fox. ELLE. http://www.elle.com/Entertainment/Cover-Shoots/Megan-Fox2/Megan-Fox-Read-the-ELLE-Interview-with-Megan-Fox-June-2009. பார்த்த நாள்: 2009-07-03. 
 70. Castina (August 11th, 2008). "Megan Fox Evicts Brian Austin Green Dog". PopCrunch. பார்த்த நாள் 2009-07-03.
 71. "Megan Fox Pro-Pot". TMZ.com (2007-07-08). பார்த்த நாள் 2009-06-12.
 72. "Megan Fox "I Smoke Weed"". MTV UK. பார்த்த நாள் 2009-06-12.
 73. "'Transformers' beauty: I had a crush on a stripper". CNN.com. September 16, 2008. http://www.cnn.com/2008/SHOWBIZ/Movies/09/16/people.megan.fox.ap/index.html?iref=mpstoryview. பார்த்த நாள்: 2008-09-17. 
 74. Elizabeth Snead. "'Transformers' Megan Fox tells GQ she's hot for Olivia Wilde!". LATimes.com. பார்த்த நாள் 2009-07-02..
 75. "Olivia Wilde Is So Sexy Even Megan Fox Wants Her". Fox News. பார்த்த நாள் 2009-07-02..
 76. "Megan Fox talks about being bisexual". Pink News (2009-05-13). பார்த்த நாள் 2009-06-12.
 77. 77.0 77.1 77.2 Bullock, Maggie (2009-05-05). "Megan Fox: ELLE's June cover girl on breaking up, misbehaving, and having men eating out of her hand". Elle. பார்த்த நாள் 2009-10-10.
 78. Fox, Megan (2009-06-16). "London Evening Standard: Megan Fox admits to fancying Cheryl Cole". Showbiz News. பார்த்த நாள் 2009-06-22.
 79. "Megan Fox's crush, Rain: Are you digging the 'Korean Justin Timberlake'?". Entertainment Weekly (2009-06-16). பார்த்த நாள் 2009-06-25.
 80. "Megan Fox Single, Longing for Rain". Vanity Fair (2009-06-15). பார்த்த நாள் 2009-06-25.
 81. "Megan Fox wants to date Rain?". allKPop (2009-06-11). பார்த்த நாள் 2009-06-25.
 82. Everett, Christina (2009-09-17). "Megan Fox opens up to Rolling Stone about cutting herself: 'I'm really insecure about everything'". New York Daily News. பார்த்த நாள் 2009-10-10.
 83. Martin, Lara (2009-09-18). "Fox 'uses Spears to conquer fear of flying'". Digital Spy. பார்த்த நாள் 2009-10-11.
 84. "Michaelbay.com".
 85. "Orci and Kurtzman not returning to write Transformers 3". TFW2005. 2009-10-06. http://www.tfw2005.com/transformers-news/transformers-movie-just-movie-31/orci-and-kurtzman-not-returning-to-write-transformers-3-168586/. பார்த்த நாள்: 2009-10-06. 
 86. "Optimus Prime Confirms "Transformers" Trilogy". 2007-06-07. http://www.worstpreviews.com/headline.php?id=4234. பார்த்த நாள்: 2009-09-10. 
 87. "Teen Choice Awards: Twilight Robert Pattinson Miley Cyrus Jonas Brothers". GoldDerby (2009-08-10). பார்த்த நாள் 2009-08-10.
 88. ப்ளடி-டிஸ்கஸ்டிங்.காம்,டிவி:ஸ்க்ரீம் 2009 விருது வென்றவர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகன்_ஃபாக்ஸ்&oldid=1713619" இருந்து மீள்விக்கப்பட்டது