மெ. ஆண்டி அம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெ. ஆண்டி அம்பலம் (M. Andi Ambalam)(பிறப்பு 1932-இறப்பு 28 மார்ச்சு 1999) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, ஆறு முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1977, 1980 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நத்தம் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகவும், 1980 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும் மற்றும் 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாலப்பநாயகன்பட்டி என்ற ஊரில் பிறந்தார். இவருக்கு இரண்டு மனைவியும், ஏழு குழந்தைகளும் உள்ளன.[சான்று தேவை] இவர் மார்ச் 28, 1999-ல் இறந்தார்.[1][2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெ._ஆண்டி_அம்பலம்&oldid=3568402" இருந்து மீள்விக்கப்பட்டது