மெஹ்ரீன் பிர்சாடா
மெஹ்ரீன் பிர்சாடா | |
---|---|
பில்லௌரி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிர்சாடா | |
பிறப்பு | மெஹ்ரீன் கவுர் பிர்சாடா 5 சனவரி 1995[1][2] பட்டிண்டா, பஞ்சாப், இந்தியா |
மற்ற பெயர்கள் | மெஹ்ரீன் கவுர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மயோ கல்லூரி, அஜ்மீர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2016 – தற்போது வரை |
மெஹ்ரீன் கவுர் பிர்சாடா (Mehreen Kaur Pirzada) (பிறப்பு: சனவரி 5, 1995) ஓர் இந்திய நடிகையும் , வடிவழகியுமாவார். இவர் முக்கியமாக தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் தோன்றினார்.[3][4] 2016 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான கிருஷ்ணா காடி வீர பிரேமா கதா மூலம் அறிமுகமானார் .[5][6] இவர் 2017ஆம் ஆண்டில் பில்லௌரி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். மேலும், இதே ஆண்டில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.
ஆரம்ப கால வாழ்க்கை
இவர், சனவரி 5, 1994 அன்று பஞ்சாபின் பட்டிண்டாவில்[1][2] ஒரு சீக்கியக் குடும்பத்தில் ஒரு விவசாயியும், அசையா சொத்து வணிகரான தந்தைக்கும் இல்லத்தரசியான் தாய்க்கும் பிறந்தார்.[7] இவரது ஒரே உடன்பிறப்பான குர்பத்தே பிர்சாடா என்பவரும் வடிவழகரும் நடிகரும் ஆவார்.[8]
விளம்பரத் தொழில்
பிர்சாடா, தனது பத்து வயதில், அழகுப் போட்டியில் கலந்து கொண்டு "கசௌலி இளவரசி" என்ற பட்டத்தை வென்றார். பின்னர் இவர் தொராண்டோவில் 'மிஸ் ஆளுமை தெற்காசியா கனடா 2013' என முடிசூட்டப்பட்டார்.[9] 'ஜெமினி பேஸ் வடிவழகு' நிறுவனம் மூலம் பிரபலமான வடிவமைப்பாளர்களுக்காக இவர் மாதிரியாக இருந்தார். மேலும் கனடாவிலும் [[இந்தியா|இந்தியாவிலும் நிக்கன், பியர்ஸ், தம்ஸ் அப் போன்ற பொருட்களை விளம்பரப் படுத்துகிறார்.
திரைப்பட வாழ்க்கை
இவர், கிருஷ்ணா காடி வீர பிரேமா கதா[5] என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இ தில் இவர் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[10] இந்த படம் தெலுங்கு மாநிலங்களிலும், அமெரிக்கத் திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடியது.[11] மார்ச் 2017இல், அனுஷ்கா சர்மா, தில்ஜித் தோசன்ஜ், சூரஜ் சர்மா ஆகியோருடன் பில்லௌரி என்ற படத்துடன் பாலிவுட்டில் அறிமுகமானார்.[12]
தனிப்பட்ட வாழ்க்கை
அரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரனும், ஆதம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான குல்தீப் பிஷ்னாய் என்பவரை மார்ச் 2021 இல் நிச்சயதார்த்தம் செய்தார்.[13] 2021 ஆம் ஆண்டில் இவர்களது திருமணம் திட்டமிடப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.[14] ஆனால் பின்னர், இவர்களது இந்த திருமண ஒப்பந்தம் ஜூலை 2021 ஆரம்பத்தில் கைவிடப்பட்டது.[15][16]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Pattas girl Mehreen Pirzada celebrates her birthday in Maldives". 5 November 2020. பார்க்கப்பட்ட நாள் 19 June 2021.
- ↑ 2.0 2.1 "Kuldeep Bishnoi's son set to engage with Punjabi model Mehreen Kaur Pirzada on March 13". 5 February 2021. https://www.tribuneindia.com/news/haryana/kuldeep-bishnois-son-set-to-engage-with-punjabi-model-mehreen-kaur-pirzada-on-march-13-208394.
- ↑ "Mehreen Pirzada: I'll celebrate Diwali like a South Indian this time". Archived from the original on 26 December 2018. பார்க்கப்பட்ட நாள் 19 October 2017.
- ↑ "Mehreen's B-Town debut is a romantic drama". Archived from the original on 26 December 2018. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
- ↑ 5.0 5.1 "Another debut Down South". 4 February 2016. http://www.deccanchronicle.com/entertainment/tollywood/040216/another-debut-down-south.html.
- ↑ "Nani's Krishna Gadi Veera Prema Gaadha first look released". 7 January 2016. http://www.ibtimes.co.in/nanis-krishna-gadi-veera-prema-gaadha-first-look-released-lavanya-harish-impressed-kgvpg-poster-662401.
- ↑ Mehreen_Pirzada Mehreen Pirzada looks like a girl next door, magzter.com.
- ↑ [{https://www.indulgexpress.com/entertainment/celebs/2020/mar/27/exclusive-indulge-speaks-to-guilty-star-gurfateh-singh-pirzada-who-stole-the-show-as-the-flamboyant-23437.html Exclusive: Indulge speaks to Guilty star Gurfateh Singh Pirzada who stole the show as the flamboyant anti-hero], 27 March 2020, indulgexpress.com.
- ↑ "Mehrene K. Pirzada". ModelManagement.com. http://www.modelmanagement.com/model/mehrene-k.-pirzada/.
- ↑ "Krishnagaadi Veera Prema Gaadha Movie Review". timesofindia.com. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movie-reviews/Krishnagaadi-Veera-Prema-Gaadha/movie-review/51057183.cms.
- ↑ "'Krishna Gadi Veera Prema Gadha' collection crosses $0.5 million dollar at US box office in 5 days". ibtimes.co.in. http://www.ibtimes.co.in/krishna-gadi-veera-prema-gadha-collection-crosses-0-5-million-dollar-us-box-office-5-days-667395.
- ↑ "Mehreen Pirzada gears up for Bollywood debut with Phillauri". http://www.catchnews.com/bollywood-news/mehreen-pirzada-gears-up-for-bollywood-debut-with-phillauri-53954.html.
- ↑ "Inside Mehreen Pirzada and Bhavya Bishnoi's engagement and pre-wedding festivities". 12 March 2021.
- ↑ Adivi, Sashidhar (2021-05-25). "I am still dealing with after effects of Covid-19: Mehreen Kaur". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
- ↑ https://indianexpress.com/article/entertainment/telugu/mehreen-pirzada-calls-off-engagement-with-fiance-bhavya-bishnoi-7387651/
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/mehreen-pirzada-breaks-off-her-engagement-to-bhavya-bishnoi-i-have-no-further-association-with-him/articleshow/84092687.cms