உள்ளடக்கத்துக்குச் செல்

மெஹ்மூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெகுமூத் அலி
Mehmood Ali
பிறப்பு(1932-09-29)29 செப்டம்பர் 1932
மும்பை, மும்பை மாகாணம், இந்தியா
இறப்பு23 சூலை 2004(2004-07-23) (அகவை 71)
டன்மோர், பென்சில்வேனியா, அமெரிக்கா
பணி
பெற்றோர்மும்தாசு அலி
இலத்திஃபுன்னிசா அலி
வாழ்க்கைத்
துணை
மது (மணமுறிவு)
நான்சி குரோல்
பிள்ளைகள்7

மெகுமுது அலி (Mehmood Ali, 29 செப்டம்பர் 1932 – 23 சூலை 2004), என்று அறியப்படும் மெஹ்மூத் பாலிவுட் உலகின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், பாடகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 300 க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார் .

பிறப்பும், ஆரம்ப வாழ்க்கையும்

[தொகு]

மும்பை, பட உலகில் 40 மற்றும் 50 களில் ஹிந்தி சினிமா திரைப்படங்களில் நடிகராக இருந்த முக்தாஸ் அலி - லதி- உன் - நிஷா தம்பதியரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவதாக மெஹ்மூத் பிறந்தார். மெஹ்மூட்டில் மூத்த சகோதரி மற்றும் ஆறு இளைய சகோதரர்கள், சகோதரிகள் இருந்தனர். அவரது சகோதரி மினூ மும்தாஜ், பாலிவுட் திரைப்படங்களில் வெற்றிகரமான நடனக் கலைஞரும், நடிகையுமாக இருந்தார். அவரது இளைய சகோதரர் அன்வர் அலி யம் ஒரு நடிகர் மற்றும் குட்-தார் மற்றும் காஷ் போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.[1]

மெஹ்மூதின் மூதாதையர் தென்னிந்தியாவின் ஆற்காட்டு நவாப் ஆக இருந்தனர் , ஆங்கிலேயர்கள் நாடுபிடிக்கும் கொள்கைப்படி திப்புசுல்தானுக்கு உடந்தையாக இருந்தார் என்ற போலி குற்றச்சாட்டின் கீழ் உம் தாத் -உல் -உமாரா நவாப் பதவியில் இருந்து 1795 - 1801 இல்தூக்கி எறியப்பட்டார்.பின்னர் இவர் குடும்பம் பல்வேறு வகையில் சிதைந்தது .இந்த வழியில் வந்தவரே மெஹ்மூத்

சிறுவனாய் இருந்த போது பம்பாய் பிலிம்ஸ் நிறுவனத்தில் எடுபிடி வேலை செய்தார் .அப்போது கிசுமத் படத்தில் நடித்தார் . பின்னர் எந்த வேலையிலும் நிலை கொள்ளாமல் பல வேலைகளில் வயிற்றுப்பாட்டுக்காக வேலை செய்தார். சில சமயங்களில்மீனாகுமாரிக்கு டேபிள் டென்னிஸ் ஆசிரியராக பணிபுரிந்தார், மீனாகுமாரியின் தந்தை அவர் காதலுக்கு தடை போடவே ,மீனா தன் தங்கை மதூ - மெஹ்மூத் தம்பதியரின் வீட்டில் சில காலம் தங்கியிருந்தார் இயக்குநர் பி. எல். சந்தோஷி மற்றும் அவரது மகன் ராஜ்குமார் சந்தோஷி,க்கும் கார் ஓட்டுநராக பணி புரிந்தார் . ராஜ்குமார் அந்தாஸ் அப்னே அப்னே படத்தில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார்

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

1959 ஆண்டு முதல் சிரிப்பு நடிகராக நடிக்க ஆரம்பித்து ,பின் ஜொலிக்க ஆரம்பித்தார் . ஒரு கால கட்டத்தில் கதாநாயகனுக்கு நிகராகவும் , அதற்கு மேலும் சம்பளம் வாங்கினார் .கும்நாம் படத்தில் இவர் நடிகை ஹெலன் உடன் ஆடிப்பாடியது இவரது மதிப்புக்கு ஒரு உரைகல்.இந்த கால கட்டத்தில் தன் குதிரைகளை வளர்க்க ஒரு பெரிய பண்ணையையே விலைக்கு வாங்கினார் .மேலும் எல்லா மாடல் கார்கள் சுமார் 24 வைத்திருந்தார் சம்பளத்திற்கு 150 பேர் வேலை பார்த்தனர்.இப்படி பெரிய ராஜா போல் கொஞ்ச காலம் வாழ்ந்தார் .இந்த காலகட்டத்தில் அமிதாப் பச்சன் சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு மும்பையில் அலைந்து திரிந்தார் . அவருக்கு தங்குவதற்கு தன்வீட்டிலேயே தங்க இடம் அளித்தார். முதன் முதலாக பாம்பே டூ கோவா படத்தில் கதாநாயகன் வேடம் வாங்கித்தந்தார் . இந்த படம் மதராஸ் டு பாண்டிசேரி படத்தின் தழுவலாகும் . பின்னர் ஒரு பேட்டியில் அமிதாப் பச்சன் மெஹ்மூத் என் தெய்வ தந்தை ( GOD FATHER) என்று புகழாரம் சூட்டினார்

திரைப்படத் தயாரிப்பும் ,பின்னடைவும்

[தொகு]

1970 களில் சிரிப்பு நடிகர்கள் ஜெகதீப் ,அஸ்ராணி,பைந்தால்,தேவன் வர்மா ,காதர் கான் என்று பாலிவுட்டை முற்றுகையிட மெஹ்மூத் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன .எனவே சொந்த பட தயாரிப்பில் ஈடுபட்டார் .ஆரம்பத்தில் கைகொடுத்த பாலிவுட் பின்னர் இவரை கை கழுவியது . 1960 களில் க்ரிஹஸ்தி ,பரோசா ,ஜிட்டி,மற்றும் லவ் இன் டோக்கியோ இவருக்கு ஜோடியாய் நடித்தவர் ஸுபா க்ஹோடே . . 1970 களில் இவருடன் ஜோடி சேர்ந்தவர் அருணா இராணி . பாம்பே டு கோவா ,கரம் மசாலா , தோபோல்,முதலியன .அருணா இராணி - இவருக்கு பல படங்களில் சான்ஸ் வாங்கி தந்துள்ளார் . பிரதி பலனாக அவர் வாங்கிய சம்பளத்தில் கமிஷன் பெற்றுள்ளார் .பின்னர் இந்த பந்தத்தில் முற்றிலும் விடுபட்டு ,நேரடியாக டான்ஸ் ,மற்றும் வில்லி ரோல்களை பெற்றார் அருணா .பின்னர் மெஹ்மூத் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவின . சில படங்கள் பாதியிலே கைவிடப்பட்டன .

இறப்பு

[தொகு]

ஒரு இயக்குனராக, 1996 ஆம் ஆண்டில் மெஹ்மூத்தின் கடைசி படம் துஷ்மன் துனியா கா. அவருடைய மகன் மன்சூர் அலி அறிமுகமான இந்த படம், ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோரின் சிறப்பு நடிப்புகளை கொண்டிருந்தது. எட்டு குழந்தைகளின் இரண்டாவது மகன், மக்பூத் அலி (பிரபலமாக லக்கி அலி என்று அழைக்கப்படுகிறார்) இன்று பிரபல ஹிந்தி பாப் பாடகர் ஆவார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அவர் நுரையீரல் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, சிகிச்சை பலன் அளிக்காமல் 2004 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி 72 வயதில் மெஹ்மூத் தனது தூக்கத்திலேயே மரணமடைந்தார்.[1] சூலை மாதம் 28 ஆம் தேதி அவருடைய உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது. மறுநாள் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Indian comedian Mehmood dead". Daily Times. 24 July 2004. பார்க்கப்பட்ட நாள் 2 January 2009.
  2. Mumbai bids emotional farewell to Mehmood தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 28 July 2004.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெஹ்மூத்&oldid=4160811" இலிருந்து மீள்விக்கப்பட்டது