மெஹ்தி ஹசன் (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஸ்தாத் மெஹ்தி ஹசன் கான்
மெஹ்தி ஹசன்
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்கான் சாகிபு
கசல் மன்னர்
பிறப்பு(1927-07-18)சூலை 18, 1927
லூனா, ஜுன்ஜுனூ மாவட்டம், இராசத்தான், பிரித்தானிய இந்தியா
இறப்புசூன் 13, 2012(2012-06-13) (அகவை 84)
கராச்சி, சிந்து, பாக்கித்தான்
வகை (கள்)செவ்வியல் இசை, கசல், பின்னணிப் பாடகர்
பணிகள்பாடகர், இசையமைப்பாளர்
இசைக்கருவிகள்ஆர்மோனியம், வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1957–1999 (ஓய்வு)

மெகதி அசன் கான் (Mehdi Hassan Khan, உருது: مہدی حسن خان ‎; சூலை 18, 1927 – சூன் 13, 2012) ஓர் பாக்கித்தானிய கசல் பாடகரும் முன்னாள் லாலிவுட் திரைப்பட பின்னணிப் பாடகரும் ஆவார். "கசல் மன்னர்" என்று புகழ்பெற்ற மெகதி அசன் பாக்கித்தான் திரைப்படத்துறையில் பெரிதும் மதிக்கப்பட்டார். இவருக்கு பாக்கித்தானிய அரசு தங்கா-இ-இம்தியாசு, நிகழ்த்துக்கலை பெருமை மற்றும் இலால்-இ-இம்தியாசு ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது. நேபாள அரசும் கோர்க்கா தக்சிண பகு என்ற விருதை வழங்கியுள்ளது. நீண்டகால உடல்நலக் குறைவிற்குப் பின்னர் சூன் 13, 2012 அன்று கராச்சி தனியார் மருத்துமனை ஒன்றில் இயற்கை எய்தினார்.[1][2][3]

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. "Ghazal maestro Mehdi Hassan is dead". Archived from the original on 2012-06-16. பார்க்கப்பட்ட நாள் 2012-06-15.
  2. "Mehdi Hassan passes away in Karachi". 13 June 2012. http://timesofindia.indiatimes.com/entertainment/music/news-and-interviews/Mehdi-Hassan-passes-away-in-Karachi/articleshow/14087909.cms. 
  3. "India-born Ghazal legend Mehdi Hassan Died". Archived from the original on 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-06-15.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெஹ்தி_ஹசன்_(பாடகர்)&oldid=3568503" இலிருந்து மீள்விக்கப்பட்டது