மெஹந்தி சர்க்கஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெஹந்தி சர்க்கஸ்
இயக்கம்சரவண ராஜேந்திரன்
தயாரிப்புகே. இ. ஞானவேல் ராஜா
கதைராஜு முருகன்
இசைஷான் ரோல்டன்
நடிப்புமாதம்பட்டி ரங்கராஜ்
சுவேதா திரிபாதி
ஒளிப்பதிவுசெல்வகுமார் எஸ்.கே
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடுஏப்ரல் 19, 2019 (2019-04-19)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மெஹந்தி சர்க்கஸ் (Mehandi Circus)[1] என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் - மொழி அதிரடி காதல் நாடகத் திரைப்படமாகும். ராஜு முருகன் எழுதிய இதனை இவருடைய மூத்த சகோதரரான சரவண ராஜேந்திரன் இயக்கியிருந்தார்.[2][3] இந்தப் படத்தில் புதுமுகம் மாதம்பட்டி ரங்கராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும், சுவேதா திரிபாதி தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகியாகவும்,[4][5] விக்னேஷ்காந்த், வேல ராமமூர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார், செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவாளராகவும், மாநகரம் படப் புகழ் பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றினர். இந்த படத்தை கே. இ. ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார். இந்த படம் விமர்சகர்களிடையேயும், பொதுப் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

நடிப்பு[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Subramanian, Anupama (2018-06-28). "Elephant plays a crucial role in Mehandi Circus". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  2. Dinamalar (2019-01-06). "அண்ணன் படத்துக்கு தம்பி செய்த உதவி | mehndi circus helps his brother movie". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2019-01-10.
  3. "Raju Murugan's 'Mehandi Circus' is a hard-hitting romantic drama!". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2018-06-26. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  4. "Masaan actress Shweta Tripathi plays circus performer in her Tamil debut Mehandi Circus; film likely to release in September- Entertainment News, Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2018-07-02. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  5. "Real-life circus performers in 'Mehandi Circus' - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  6. "Mehandi Circus Movie Review {3/5}: Critic Review of Mehandi Circus by Times of India". The Times of India.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெஹந்தி_சர்க்கஸ்&oldid=3671373" இலிருந்து மீள்விக்கப்பட்டது