உள்ளடக்கத்துக்குச் செல்

மெல்ஸ்டாகார்ப் பிஎல்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெல்ஸ்டாகார்ப் பிஎல்சி
வகைபொது நிறுவனம்
முதன்மை நபர்கள்
  • ஹசித ஜயவர்தன (தலைவர்)
  • ஜூட் பெர்னாண்டோ (குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி)
தொழில்துறை
வருமானம்Increase LKR 182.990 பில்லியன்
இயக்க வருமானம்Increase LKR 22.651 பில்லியன்
நிகர வருமானம்Increase LKR 17.635 பில்லியன்
மொத்தச் சொத்துகள்Increase LKR 311.947 பில்லியன்
மொத்த பங்குத்தொகைIncrease LKR 136.333 பில்லியன்
பணியாளர்Increase 22,765
தாய் நிறுவனம்மில்ஃபோர்ட் எக்ஸ்போர்ட்ஸ் (42.802%)
[1]

மெல்ஸ்டாகார்ப் பிஎல்சி (Melstacorp PLC) என்பது இலங்கையைச் சேர்ந்த ஒரு பல்பொருள் வர்த்தகக் கூட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ளது.[2] கொழும்புப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பத்து மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இதன் சந்தை மூலதன மதிப்பு தோராயமாக 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.[சான்று தேவை]

ஹசித ஜயவர்தன இந்நிறுவனத்தின் தலைவராகவும்,[3] ஜூட் பெர்னாண்டோ இதன் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியாகவும்[4] பொறுப்பு வகிக்கின்றனர்.

வரலாறு

[தொகு]

மெல்ஸ்டாகார்ப் பிஎல்சி முதன்முதலில் 1995ஆம் ஆண்டில் 'பேருவளை டிஸ்டில்லரி (பிரைவேட்) லிமிடெட்' என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர், இலங்கை டிஸ்டில்லரீஸ் கம்பெனி இந்நிறுவனத்தைக் கையகப்படுத்தி, அதற்கு 'மெல்ஸ்டாகார்ப் லிமிடெட்' என்று மறுபெயரிட்டது. தொடர்ந்து, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், அப்போதைய டி.சி.எஸ்.எல் (DCSL) நிறுவனத்தின் கீழ் இருந்த அனைத்துத் துணை நிறுவனங்களும் மெல்ஸ்டாகார்ப் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மாற்றப்பட்டன. அதன்பின்னர், 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தலைகீழ் பங்குப் பரிமாற்றத்தின் மூலம், மெல்ஸ்டாகார்ப் நிறுவனம் டி.சி.எஸ்.எல் நிறுவனத்தின் முதன்மைத் தாய் நிறுவனமாக மாறியது.[5]

இந்தப் பங்குப் பரிமாற்றத்திற்குப் பிறகு, மெல்ஸ்டாகார்ப் நிறுவனம் 2016 டிசம்பர் 30 அன்று கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடடப்பட்டது.[சான்று தேவை]

துணை நிறுவனங்கள்

[தொகு]

மெல்ஸ்டாகார்ப் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மதுபானம் வடித்தல், போத்தலில் அடைத்தல் மற்றும் விநியோகம், காப்பீடு, சுகாதாரம், உற்பத்தி, வழங்கியல், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மின்சக்தி, தேயிலை மற்றும் ரப்பர் பெருந்தோட்டங்கள், விருந்தோம்பல், சொத்து மேம்பாடு, பிராண்ட் மேலாண்மை மற்றும் விளம்பரம் ஆகிய பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளன.

இது இலங்கையின் புகழ்பெற்ற டிஸ்டில்லரீஸ் கம்பெனி பிஎல்சி நிறுவனத்தின் முதன்மைத் தாய் நிறுவனமாகும்.[6]

துணை நிறுவனங்களின் விவரம்:
துணை நிறுவனம்பங்குரிமை (%)சந்தை மதிப்பு / அடக்கவிலை (மில்லியன் இலங்கை ரூ)
பட்டியலிடப்பட்ட துணை நிறுவனங்கள்
ஐட்கென் ஸ்பென்ஸ் பி. எல். சி50.32%15,058
பலாங்கொடை பெருந்தோட்டங்கள் பிஎல்சி58.61%241
பிரவுன்ஸ் பீச் ஹோட்டல்ஸ் பிஎல்சி41.88%488
டிஸ்டில்லரீஸ் கம்பெனி ஆஃப் ஸ்ரீலங்கா பிஎல்சி92.44%57,831
மடுல்சீமா பெருந்தோட்டங்கள் பிஎல்சி55.91%871
பட்டியலிடப்படாத துணை நிறுவனங்கள்
பெல்வாண்டேஜ் (பிரைவேட்) லிமிடெட்100%75
போகோ பவர் (பிரைவேட்) லிமிடெட்99.30%993
கான்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட்100%1,164
மெல்ஸ்டா ஹெல்த் (பிரைவேட்) லிமிடெட்1,896
மெல்ஸ்டா லாஜிஸ்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்571
மெல்ஸ்டா பிராபர்ட்டீஸ் (பிரைவேட்) லிமிடெட்1,590
மெல்ஸ்டா டெக்னாலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட்10
மெல்ஸ்டா டவர் (பிரைவேட்) லிமிடெட்658
மில்ஃபோர்ட் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட்98.36%3,350
பெரிசைல் (பிரைவேட்) லிமிடெட்100%7
ஸ்ப்ளெண்டர் மீடியா (பிரைவேட்) லிமிடெட்51
டிம்பெக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்51.03%157

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Annual Report 2021/22" (PDF). Cse.lk. Melstacorp. Archived (PDF) from the original on 18 March 2023. Retrieved 22 February 2023.
  2. Melstacorp, Corporate Information |. "Corporate Information | Melstacorp". melstacorp.com (in ஆங்கிலம்). Archived from the original on 2024-11-03. Retrieved 2024-12-09.
  3. "Hasitha Jayawardena appointed as Melstacorp Chairman". Daily Mirror (in ஆங்கிலம்). 2025-02-07. Archived from the original on 2025-02-17. Retrieved 2025-02-07.
  4. "Jude Fernando new Group CEO at Melstacorp". Daily FT (in English). 2025-12-03. Archived from the original on 2025-12-03. Retrieved 2025-12-03.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Transformation at Distilleries as Melstacorp takes over parent company | The Sunday Times Sri Lanka". www.sundaytimes.lk. Retrieved 2018-11-23.
  6. "Melstacorp to become parent company of Distilleries Group". Daily FT. 2 August 2016. https://www.ft.lk/Business/melstacorp-to-become-parent-company-of-distilleries-group/34-558735.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்ஸ்டாகார்ப்_பிஎல்சி&oldid=4595586" இலிருந்து மீள்விக்கப்பட்டது