உள்ளடக்கத்துக்குச் செல்

மெல்லைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெல்லைட்டு
Mellite
பொதுவானாவை
வகைகரிமக் கனிமம்
வேதி வாய்பாடுAl2[C6(COO)6]•16H2O
இனங்காணல்
நிறம்தேன்-மஞ்சள், அடர் சிவப்பு, வெளிர் சாயல் சிவப்பு, பழுப்பு, சாம்பல், வெண்மை;
படிக இயல்புநீளமான இரட்டைக்கூர்நுனி பட்டகமாக மேற்பூச்சு மற்றும் முடிச்சு மற்றும் தூளான பொதி
படிக அமைப்புநாற்கோணம்
பிளப்பு{023} இல் குறைந்த/ தனித்துவமற்றதாக
முறிவுசங்குருவப் பிளவு
விகுவுத் தன்மைகிட்ட்த்தட்ட வெட்டலாம்
மோவின் அளவுகோல் வலிமை2-2 12
மிளிர்வுபளபளப்பு, பிசின், உயவு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி1.64
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (-) தன்னிச்சையாக ஈரச்சாகலாம்
ஒளிவிலகல் எண்nω = 1.539 nε = 1.511
இரட்டை ஒளிவிலகல்δ = 0.028
பலதிசை வண்ணப்படிகமைபலவீனம்; O = மஞ்சள் பழுப்பு; E = மஞ்சள்
புறவூதா ஒளிர்தல்வெளிர் மஞ்சளும் நீலமும்
பிற சிறப்பியல்புகள்தீமின்சாரம்
மேற்கோள்கள்[1][2][3]

மெல்லைட்டு (Mellite) என்பது Al2C6(COO)6·16H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும் [3]. கரிமச் சேர்மமும் ஓர் அரிய கரிமக் கனிமமுமான இதை தேன்கல் அல்லது அனிசுடோன் என்ற பெயராலும் அடையாளப்படுத்துகிறார்கள். மெல்லித்திக் அமிலத்தினுடைய அலுமினியம் உப்பே மெல்லைட்டு என்று வேதியியல் முறையில் வரையறுக்கிறார்கள். அதாவது அலுமினியம் பென்சீன் எக்சாகார்பாக்சிலேட்டு ஐதரேட்டு என்பது மெல்லைட்டு கனிமம் எனப்படுகிறது.

ஒளிகசியும் தேன் நிறத்திலான இப்படிகங்களை மெருகேற்றி ஒளிரும் பட்டைமுகப்பு ஆபரணக் கற்களாக மாற்ற முடியும். நாற்கோண நற்படிகங்களாகவும் உருவமற்ற பொதிகளாகவும் மெல்லைட்டு இயற்கையில் தோன்றுகிறது. 2 முதல் 2.5 என்ற மோவின் அளவு கோல் கடினத்தன்மை மதிப்பும் 1.6 என்ற ஒப்படர்த்தி மதிப்பும் இக்கனிமத்திற்கு கணக்கிடப்பட்டுள்ளன [1][3].

செருமனியின் துரிங்கியா மாநிலத்திலுள்ள ஆர்டெர்ன் நகரில் 1789 ஆம் ஆண்டு மெல்லைட்டு கண்டறியப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து உருசியா, ஆத்திரியா, செக் குடியரசு, அங்கேரி போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டது. தேனைப் போன்ற நிறத்துடன் காணப்படுவதால் இதற்கு அனிசுடோன் என்றும் பெயரிடப்பட்டது [4]. [2]

லிக்னைட்டு கனிமத்துடன் சேர்ந்து மெல்லைட்டு கனிமம் கானப்படுகிறது. இயற்கை களிமண்ணில் வழிப்பெறுதியாக கிடைக்கும் அலுமினியத்துடன் சேர்ந்து உருவாவதாகவும் ஊகிக்கப்படுகிறது [1].

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லைட்டு&oldid=2732498" இலிருந்து மீள்விக்கப்பட்டது