உள்ளடக்கத்துக்குச் செல்

மெல்பேர்ண் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 37°40′24″S 144°50′36″E / 37.67333°S 144.84333°E / -37.67333; 144.84333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெல்பேர்ண் வானூர்தி நிலையம்
Melbourne Airport
 • ஐஏடிஏ: MEL
 • ஐசிஏஓ: YMML
  MEL is located in ஆத்திரேலியா
  MEL
  MEL
  வானூர்தி நிலைய இருப்பிடம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்/இயக்குனர்ஆஸ்திரேலிய பசிபிக் வானூர்திக் கழகம்
சேவை புரிவதுமெல்பேர்ண்
அமைவிடம்தளமரைன், விக்டோரியா, ஆஸ்திரேலியா
மையம்
 • ஜெட்ஸ்டார் ஏர்வேய்சு
 • குவாண்டாசு
 • ரெக்சு ஏர்லைன்சு
 • டைகர்ஏர் ஆத்திரேலியா
 • வர்ஜின் ஆத்திரேலியா
உயரம் AMSL434 ft / 132 m
ஆள்கூறுகள்37°40′24″S 144°50′36″E / 37.67333°S 144.84333°E / -37.67333; 144.84333
இணையத்தளம்melbourneairport.com.au
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
09/27 2,286 7,500 அசுபால்ட்டு
16/34 3,657 11,998 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2015/2016)
பயணிகள் இயக்கங்கள்33,704,854[1]
விமான இயக்கங்கள்234,789[1]
பொருளாதாரம் (2012)$6.8 billion[2]
சமூக தாக்கம் (2012)47.4 thousand[2]
மூலம்: ஆஸ்திரேலிய வானூர்தி முனையம்[3]

மெல்பேர்ண் வானூர்தி நிலையம் (Melbourne Airport; (ஐஏடிஏ: MELஐசிஏஓ: YMML), ஆத்திரேலியாவில் உள்ள சுங்கத்தீர்வு மற்றும் பன்னாட்டு நிலை பெற்ற வானூர்தி நிலையம் ஆகும். இது விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ணில் அமைந்துள்ளது. 1970-இல் அருகிலிருந்த எசென்டென் வானூர்தி நிலையத்திற்கு மாற்றாக பன்னாட்டு முனையமாக இது துவங்கப்பட்டது. இந்நிலையம், மெல்பேர்ண் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இவ்வானூர்தி நிலையம் துவங்குவதற்கு முன் எசென்டன் வானூர்தி நிலையம் தான் மெல்பேர்ண் நகரின் தலையாய நிலையமாக செயல்பட்டு வந்தது. பயணிகள் வருகை அதிகரிப்பால் 1950ல் எஸ்சாண்டன் நிலையம் பன்னாட்டு முனையமாக தரம் உயர்த்தப்பட்டது. 1950களின் இடையில் பன்னாட்டு விமானங்களை கையாள முனையத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனால் நகரின் மையத்தில் நிலையம் இருந்ததால், அதனைச் சுற்றி குடியிருப்புகளும் ஆக்கிரமிப்புகளும் பன்மடங்கு பெருகியிருந்தன. இதனை அகற்றிவிட்டு நிலையத்தை விரிவுபடுத்துவது முடியாத காரியமாக உணர்ந்தனர்.

எசென்டன் நிலையத்திற்கு மாற்றாக வேறு இடத்தினை தேர்வு செய்ய 1958ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனி குழு ஒன்று உருவாக்கப்பட்டது.[4]. இறுதியில் 1959ம் ஆண்டு மெல்பேர்ண் நகரின் அருகே 5,300 எக்டேர் பரப்பளவில் தளமரைன் என்ற இடத்தைத் தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அரசு.[5]. 1959ம் ஆண்டு மே மாதம் தளமரைனில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதாக அன்றைய பிரதமர் இராபர்ட் மென்சிஸ் அறிவித்தார். இதற்காக 1962-இல் ஐந்தாண்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு $45 மில்லியன் செலவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.[6][7][8][9][4]

விமான நிலையப் பணிகள் முழுமையடைந்து 1970ம் ஆண்டு சூலை 1ம் நாள் அன்றைய பிரதமர் ஜான் கார்ட்டன் திறந்து வைத்தார். இதன் மூலம் மெல்பேர்ண் பன்னாட்டு வானூர்தி முனையமாக 20 ஆண்டுகள் செயல்பட்டு வந்த எசென்டன் நிலையத்தில் சேவை முடிவிற்கு வந்தது.[10] இருந்தும் 1971ம் ஆண்டு சூன் மாதம் 26ம் நாள் வரை எசென்டென் வானூர்தி நிலையம் உள்நாட்டுப் போக்குவரத்திற்காக செயல்பட்டு வந்தது. புதிய வானூர்தி நிலையம் செயல்படத்துவங்கிய முதலாம் ஆண்டில் ஆறு பன்னாட்டு வானூர்திகளோடு மொத்த வெளிநாட்டுப் பயணிகள் வருகை 155,275 ஆக பதிவாகியது.[11][12][12]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Airport Traffic Data 1985–86 to 2015–16". BITRE. March 2016. பார்க்கப்பட்ட நாள் 7 January 2017.
 2. 2.0 2.1 "Melbourne airport – Economic and social impacts". Ecquants. பார்க்கப்பட்ட நாள் 7 September 2013.
 3. Aeronautical Chart பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்
 4. 4.0 4.1 "2010 Annual Report" (PDF). Melbourne Airport. 2010. பார்க்கப்பட்ட நாள் 20-09-2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
 5. "Melbourne Airport train link derailed by buck-passing". The Age (Melbourne, Australia). 26-06-2010. http://www.theage.com.au/travel/travel-news/train-derailed-by-buckpassing-and-vested-interests-20100625-z9sx.html. 
 6. "Melbourne to Get Jetport in 5-Year Development Plan". த நியூயார்க் டைம்ஸ். 27-11-1962. http://select.nytimes.com/gst/abstract.html?res=F30F15FB3D5A157B93C5AB178AD95F468685F9. பார்த்த நாள்: 27-09-2008. 
 7. "12,000-Car Melbourne Jam". The New York Times. 29-06-1970. http://select.nytimes.com/gst/abstract.html?res=F3061EFD3E5D137B93CBAB178DD85F448785F9. பார்த்த நாள்: 27-09-2008. 
 8. "Approval Given For New Melbourne Airport". The Canberra Times (Australian Capital Territory, Australia) 34, (9,553): p. 4. 18 மார்ச் 1960. http://nla.gov.au/nla.news-article105906147. பார்த்த நாள்: 13-8-2017. 
 9. "Spending on two airports will be increased to £32m.". The Canberra Times 39, (11,120): p. 3. 2-04-1965. http://nla.gov.au/nla.news-article131764839. பார்த்த நாள்: 13-08-2017. 
 10. "Tullamarine—a city's pride". The Canberra Times 44, (12,664): p. 11. 2-07-1970. http://nla.gov.au/nla.news-article110329924. பார்த்த நாள்: 13-08-2017. 
 11. "Essendon Airport History". City of Moonee Valley. Archived from the original on 2002-10-06. பார்க்கப்பட்ட நாள் 2007-2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 12. 12.0 12.1 "1997–1998 Annual Report" (PDF). Melbourne Airport. 1998. Archived from the original (PDF) on 2011-08-15. பார்க்கப்பட்ட நாள் 20-09-2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புக்கள்[தொகு]