மெலோஸ் முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெலோஸ் முற்றுகை (Siege of Melos) என்பது ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையே நடந்த போரான பெலோபொன்னேசியப் போரின் போது கிமு 416 இல் நடந்த ஒரு முற்றுகைப் போராகும். மெலோஸ் என்பது ஏஜியன் கடலில் உள்ள ஒரு தீவு ஆகும். இது கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதிக்கு கிழக்கே சுமார் 110 கிலோமீட்டர்கள் (68 மைல்கள்) தொலைவில் உள்ளது. மெலியன்கள் எசுபார்த்தாவுடன் மூதாதையர் உறவுகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் போரில் நடுநிலை வகித்தனர். கி.மு 416 கோடையில் ஏதென்சு மெலோஸ் மீது படையெடுத்தது. மெலியன்கள் சரணடைந்து ஏதென்சுக்கு கப்பம் செலுத்த வேண்டும் அல்லது அழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தது. அதற்கு மெலியர்கள் மறுத்துவிட்டனர், எனவே ஏதெனியர்கள் அந்த நகரத்தை முற்றுகையிட்டனர். மெலோஸ் நகரம் குளிர்காலத்தில் சரணடைந்தது. அதன்பிறகு ஏதெனியர்கள் மெலோசில் இருந்த வயதுவந்த ஆண்கள் அனைவருக்கும் மரணதண்டனை அளித்து, பெண்களையும், குழந்தைகளையும் அடிமைப்படுத்தினர்.

பின்னணி[தொகு]

பெலோபொன்னேசியன் போர் கி.மு. 431 முதல் 404 வரை நீடித்தது. எசுபார்த்தா தலைமையிலான கிரேக்க நகரங்களின் கூட்டணியான பெலோபொன்னேசியன் கூட்டணி மற்றும் ஏதென்சு தலைமையிலான கூட்டணியான டெலியன் கூட்டணி இடையே போர் நடந்தது. ஏதென்சு வலிமை வாய்ந்த கடற்படையைக் கொண்டிருந்தது. மேலும் ஏஜியன் கடலில் உள்ள அனைத்து தீவுகளையும் கட்டுப்படுத்தியது. ஏஜியன் கடலில் ஏதென்ஸ் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே குறிப்பிடத்தக்க தீவு மெலோஸ் ஆகும். மெலோஸ் மக்கள் டோரியர்கள், எசுபார்த்தன்கள் போன்ற அதே இனக்குழுவினர். ஆனால் அவர்கள் எசுபார்த்தன் பேரரசிலிருந்து தனித்து சுதந்திரமாக இருந்தனர். ஏதெனியர்கள் அயோனியர்களாவர். [1] [2] பொதுவாக, மெலியன்கள் போரில் நடுநிலை வகிக்க முயன்றனர். [3] இருப்பினும் தொல்பொருள் சான்றுகளின் படி கிமு 428 மற்றும் 425 க்கு இடையில், மெலியன்கள் எசுபார்த்தன் போர் முயற்சிக்கு குறைந்தபட்சம் இருபது மினாக்கள் வெள்ளியை (சுமார் 12½ கிலோ ) நன்கொடையாக அளித்தனர். [4]

கி.மு, 426 இல் ஏதென்சு 2,000 பேர் கொண்ட இராணுவத்தை மெலியன் கிராமப்புறங்களைத் தாக்க அனுப்பியது. [5] கிமு, 425 அல்லது 424 இல், ஏதென்சு மெலோசிடம் பதினைந்து தாலந்து வெள்ளியைக் கோரியது (தோராயமாக 390 கிலோ ). இந்தத் தொகையானது 15 மாதங்களுக்கு ஒரு கப்பல் குழுவினருக்கான ஊதியத்துக்கு போதுமானது. [6] அல்லது 540 மெட்ரிக் டன் கோதுமையைக் கோரியது. இது ஒரு ஆண்டுக்கு 2,160 வீரர்களுக்கு உணவளிக்க போதுமானது. மெலோசுக்கு விதிக்கப்பட்ட இந்த கப்பத் தொகையின் அளவைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இது ஒரு செழிப்பான தீவு என்பதைக் குறிக்கிறது. மெலோஸ் கப்பம் செலுத்த மறுத்துவிட்டது.

முற்றுகை[தொகு]

மெலோஸ், மற்றும் பண்டைய நகரத்தின் தோராயமான இடம்.[7]

கிமு. 416 கோடையில் எசுபார்த்தாவுடனான ஒரு சண்டையின் போது, ஏதென்சு குறைந்தது 3,400 பேரைக் கொண்ட இராணுவத்தை மெலோசைக் கைப்பற்ற அனுப்பியது. அதில் ஏதென்சில் இருந்து 1,600 கனரக காலாட்படையினர், 300 வில்லாளர்கள், 20 ஏற்ற வில்லாளர்கள் போன்றோரும் டெலியன் கூட்டணியின் பிற நகரங்களில் இருந்து 1,500 கனரக காலாட்படை வீரர்களும் இருந்தனர். இந்த இராணுவத்தை சுமந்துகொண்டு 38 கப்பல்கள் சென்றன. அதில் ஏதென்ஸிலிருந்து 30 கப்பல்களும், சியோசிலிருந்து 6, கப்பல்களும், லெஸ்போஸிலிருந்து 2 கப்பல்களும் இருந்தன. இந்த போர்ப் பயணமானது தளபதிகள் கிளிமிடிஸ் மற்றும் டிசியாஸ் ஆகியோரால் வழிநடத்தப்பட்டது. தீவில் தரையிறங்கி முகாமிட்ட பிறகு, ஏதெனியர்கள் மெலோசின் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தூதர்களை அனுப்பினர். மெலோஸ் டெலியன் கூட்டணியில் சேர்ந்து ஏதென்சுக்கு கப்பம் செலுத்த வேண்டும் அல்லது அழிவை சந்திக்க வேண்டும் என்று தூதுவர்கள் எச்சரித்தனர். மெலியன்கள் இந்த இறுதி எச்சரிக்கையை நிராகரித்தனர். ஏதெனியர்கள் நகரத்தை முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் ஏதெனியன் சுற்றுவட்டாரத்தின் ஒரு பகுதியை கைப்பற்றிய மெலியன்கள் முற்றுகையை உடைக்க முயன்று அதில் தோல்வியுற்ற. பதிலுக்கு, ஏதென்ஸ் பிலோகிரட்டீசின் தலைமையின் கீழ் துணைப்படைகளை அனுப்பியது. அதேசமயம் ஏதெனியர்களுக்கு மெலோசில் சில துரோகிகளின் உதவியும் இருந்தது. மெலோஸ் குளிர்காலத்தில் சரணடைந்தது. [8]

பின்விளைவு[தொகு]

ஏதெனியர்கள் வயது வந்த ஆண்களை கொன்றனர் [9] மேலும் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்றனர். பின்னர் அவர்கள் 500 ஏதெனியர்களை தீவில் குடியேற்றினர். [10]

கிமு 405 இல் ஏதென்சு போரில் தோல்வியடைந்த நேரத்தில், எசுபார்த்தன் தளபதி லைசாந்தர் ஏதெனியன் குடியேறிகளை மெலோசிலிருந்து வெளியேற்றி, முற்றுகையின் போது தீவிலிருந்து தப்பியவர்களை தீவில் மீண்டும் குடியமர்த்தினார். ஒரு காலத்தில் சுதந்திர அரசாக இருந்த மெலோஸ் ஒரு எசுபார்த்தன் பிரதேசமாக மாறியது, இதில் ஒரு எசுபார்தன் துணைப்படையையும் ஒரு இராணுவ ஆளுநரையும் (ஒரு ஹார்மோஸ்ட் ) கொண்டதாக மாறியது.

மெலியன் உரையாடல்[தொகு]

இஸ்ட்ரி ஆப்பெலோபொன்னேசியன் வார் (புத்தகம் 5, அத்தியாயங்கள் 84-116), நூலில் சமகாலத்திய ஏதெனிய வரலாற்றாசிரியர் துசிடிடீஸ், ஏதெனிய தூதுவர்கள் மற்றும் மெலோஸ் ஆட்சியாளர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை நாடகமாக்கினார். துசிடிடீஸ் பேச்சுவார்த்தைகளை நேரில் பார்க்கவில்லை, உண்மையில் அந்த நேரத்தில் அவர் நாடுகடத்தப்பட்டிருந்தார். எனவே இந்த உரையாடல் எவ்வாறு நிகழ்ந்தது என்று அவர் நம்பியதை அதில் விவரித்துள்ளார்.

குறிப்புகள்[தொகு]

  1. Herodotus. The Histories, 8.48: "The Melians (who are of Lacedaemonian stock) [...]"
  2. Thucydides. History of the Peloponnesian War, 5.84: "The Melians are a colony of Lacedaemon [...]"
  3. Thucydides. History of the Peloponnesian War, 5.84: "[The Melians] at first remained neutral and took no part in the struggle, but afterwards upon the Athenians using violence and plundering their territory, assumed an attitude of open hostility."
  4. Inscriptiones Graecae V 1, 1: "The Melians gave to the Lacedaimonians twenty mnas of silver."
  5. Thucydides. History of the Peloponnesian War, 3.91
  6. Thucydides. History of the Peloponnesian War, 6.8: "Early in the spring of the following summer the Athenian envoys arrived from Sicily, and the Egestaeans with them, bringing sixty talents of uncoined silver, as a month's pay for sixty ships, which they were to ask to have sent them."
  7. Brian Sparkes, in (Renfrew & Wagstaff 1982, pp. 53–55)
  8. Thucydides. History of the Peloponnesian War, 5.84–116
  9. The word by which Thucydides referred to the executed is hebôntas (ἡβῶντας), which generally means people who have passed puberty and in this context refers to the men as Thucydides described a different fate for the women and children. Rex Warner translated this as "men of military age". Another possible translation is "men in their prime". Thucydides made no specific mention of what happened to the elderly males.
  10. Thucydides. History of the Peloponnesian War, 5.116
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலோஸ்_முற்றுகை&oldid=3460216" இருந்து மீள்விக்கப்பட்டது