மெலொக்சிகாம்
மெலொக்சிகாம் (Meloxicam) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக முடக்குவாத மூட்டழற்சி, எலும்பு மூட்டுத்தேய்வு போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து ஈனோலிக் காடிக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது. இம்மருந்து Mobic, Movalis, Melox, Melonex, Recoxa போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[1]
வேறு வணிகப் பெயர்கள் |
---|
Mobec, Mobicox, Bronax, Tenaron, Ilacox, Mavicam, Melocam, Niflamin, Artriflam.. |
மருத்துவப் பயன்பாடு
[தொகு]பொதுவாக முடக்குவாத மூட்டழற்சி, எலும்பு மூட்டுத்தேய்வு போன்ற நோய்களுக்கு மெலொக்சிகாம் பயன்படுத்தப்படுகின்றது, இவை தவிர காய்ச்சல் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
பக்க விளைவுகள்
[தொகு]இம்மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரதான பக்கவிளைவுகள் குடற்புண், இரையகக் குடலியக் குருதிப்போக்கு ஆகும். இவற்றைத்தவிர காதில் ரீங்காரம், குருதிக்குழலிய விளைவுகள் (மாரடைப்பு, மூளைக் குருதியடைப்பு) பக்க விளைவுகளும் மெலொக்சிகாம் பயன்பட்டால் ஏற்படும்.
பயன்பாட்டெதிர் நிலைகள்
[தொகு]இம்மருந்து குருதி சம்பந்த நோய்கள், ஆஸ்துமா, ஒவ்வாமை உள்ளவர்கள், கல்லீரல், சிறுநீரக நோய்கள், குடற்புண், இதயச் செயலிழப்பு, மாரடைப்பு, மூளைக்குருதியடைப்பு போன்ற நோய்கள் வந்தவர்களில் அல்லது இருப்பவர்களில் அறவே பயன்படுத்தக் கூடாது.[2]