உள்ளடக்கத்துக்குச் செல்

மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°8′31.09″N 101°42′7.38″E / 3.1419694°N 101.7020500°E / 3.1419694; 101.7020500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG17  மெர்டேக்கா
| எம்ஆர்டி
மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Merdeka MRT Station
Stesen Merdeka MRT
默迪卡站
அமைவிடம்ஆங் ஜெபாட் சாலை
கோலாலம்பூர்; மலேசியா
ஆள்கூறுகள்3°8′31.09″N 101°42′7.38″E / 3.1419694°N 101.7020500°E / 3.1419694; 101.7020500
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
தடங்கள்9  காஜாங் 
3  அம்பாங்  (→) பிளாசா
4  செரி பெட்டாலிங்  (→) பிளாசா
நடைமேடை1 தீவுமேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள் AG8  SP8  (→) பிளாசா 180-மீ பாதசாரி வழி
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி நிலையம்
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG17 
வரலாறு
திறக்கப்பட்டது KG17  17 சூலை 2017
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
பசார் செனி
குவாசா டாமன்சாரா
 
காஜாங் வழித்தடம்
 
புக்கிட் பிந்தாங்
காஜாங்
அமைவிடம்
Map

மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Merdeka MRT Station; மலாய்: Stesen MRT Merdeka) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.

முன்பு இந்த நிலையம் சுங்கை பூலோ-காஜாங் வழித்தட நிலையம் என அறியப்பட்டது. தற்போது செரி பெட்டாலிங் வழித்தடம்; அம்பாங் வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் அமைந்துள்ள பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையத்திற்கான பரிமாற்ற நிலையமாகச் செயல்படுகிறது.

மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம் சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளின் கீழ் 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.

பெயர்

[தொகு]

இந்த நிலையத்தின் பெயர் மெர்டேக்கா; அதாவது விடுதலை என்று பொருள்படும். மேலும் இந்த நிலையத்திற்கு அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மெர்டேக்கா அரங்கத்தின் (Stadium Merdeka) பெயரிலிருந்து இந்த நிலையத்திற்கும் பெயர் சூட்டப்பட்டது. மெர்டேக்கா அரங்கத்தில்தான் மலாயா கூட்டமைப்பின் (Federation of Malaya) விடுதலை ஆகத்து 31, 1957 அன்று அறிவிக்கப்பட்டது.

மேலும் நிலைய வளாகத்தில் கோலாலம்பூர் நெகாரா அரங்கம் (Stadium Negara Kuala Lumpur) உள்ளது. இந்த நிலையம் ஆங் ஜெபாட் சாலை (முன்னர் ஜாலான் டேவிட்சன்) கீழ் அமைந்துள்ளது. இந்த நிலையம் மெர்டேக்கா அரங்கம், 118 மால் (en:118 Mall) போன்ற வரலாற்று இடங்களுக்கு அருகில் உள்ளது.[1][2][3]

அருகிலுள்ள நிலையங்கள்

[தொகு]

இந்த நிலையம் 180 மீட்டர் பாதசாரி இணைப்புப் பாதை வழியாக  SP8  AG8  பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையத்துடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த இணைப்புப் பாதை இரு நிலையங்களின் கட்டணப் பகுதிகளையும் இணைக்கிறது. இதனால் பயணிகள் 9 சுங்கை பூலோ-காஜாங் எம்ஆர்டி வழித்தடம் மற்றும் 4 செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய வழித்தடங்களுக்கு இடையே தடையில்லா தொடருந்து போக்குவரத்தை மேற்கொள்ள இயலும்.

மேலும் இந்த நிலையம்  SP9  AG9  ஆங் துவா நிலையம் மற்றும்  MR4  ஆங் துவா மோனோரெயில் நிலையத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில்; நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது

காஜாங் வழித்தடம்

[தொகு]

9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.

5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[4]

நிலைய அமைப்பு

[தொகு]
G தெருநிலை நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) ஆங் ஜெபாட் சாலை, (→) வாடகை வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்கள் (→) நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் மற்றும் படிக்கட்டுகள் (→) மேல் கீழ் இணைப்புவழி
B1 எம்ஆர்டி மேல் இணைப்புவழி (→) 118 மால்
B2 எம்ஆர்டி கீழ் இணைப்புவழி எம்ஆர்டி நிலையக் கட்டுப்பாடு, எம்ஆர்டி வாடிக்கையாளர் சேவை அலுவலகம், டிக்கெட் இயந்திரங்கள் மற்றும் கட்டண நுழைவாயில்கள் (→) நுழைவாயில் C, (→) பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையத்தின் இணைப்புவழி (→) நடைபாதை
B4 எம்ஆர்டி நடைபாதை நடைமேடை 1: 9  காஜாங்  (→)  SBK35  காஜாங் (→)
தீவு மேடை - கதவுகள் வலதுபுறம் திறக்கும்.
Platform 2: 9  காஜாங்  (→)  KG04  குவாசா டாமன்சாரா (←)

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
 காஜாங்  வழித்தட நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A ஆங் ஜெபாட் சாலை வடக்குப் பகுதி கடைகள், கிராண்ட் ஒலிம்பிக் விடுதி, YWCA KL (கோலாலம்பூர் இளம் பெண்கள் கிறித்துவ சங்கம்), விசுமா ஓசிஎம், டேவிட்சன் சாலை சீனப் பள்ளி
B ஆங் ஜெபாட் சாலை தெற்குப் பகுதி கோலாலம்பூர் நெகாரா அரங்கம் , மெர்டேக்கா 118, விக்டோரியா பள்ளி
C

எல்ஆர்டி-எம்ஆர்டி இணைப்பு வழி

உயர்மட்ட இணைப்புப் பாதைக்கு நகரும் படிக்கட்டுகள் இணைக்கப்பட்ட நிலத்தடி தளம் எல்ஆர்டி எம்ஆர்டி
D மேல் இணைப்புவழி தளம் நேரடி அணுகல் 118 மால் (எதிர்கால இணைப்பு)

காட்சியகம்

[தொகு]

மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம் (2022)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Underground jewels for the Klang Valley MRT | The Star".
  2. "Seven hidden gems of the MRT" (in en). The Star. 9 July 2017. http://www.thestar.com.my/news/nation/2017/07/09/seven-hidden-gems-of-the-mrt-a-new-mrt-train-service-will-pull-in-on-july-17-signalling-the-start-of/. 
  3. "MRT stations designed to tell the story of M'sia" (in en). The Star. 3 August 2017. http://www.thestar.com.my/metro/community/2017/08/03/learn-nations-history-from-ground-up-inspired-by-the-gombak-quartz-ridge-mrts-underground-stations-a/. 
  4. Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy. 

வெளி இணைப்புகள்

[தொகு]