மெர்சி ரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெர்சி ரவி
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 18, 1945(1945-03-18)
எர்ணாகுளம் மாவட்டம், கேரளா, இந்தியா
இறப்பு 5 செப்டம்பர் 2009(2009-09-05) (அகவை 64)
சென்னை, தமிழ் நாடு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) வயலார் ரவி
பிள்ளைகள் 1 மகன்; 2 மகள்கள்

மெர்சி ரவி (Mercy Ravi, மார்ச் 18, 1945 – செப்டம்பர் 5, 2009) கேரள சட்டமன்ற உறுப்பினரும், சமூக ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார். இவர் இந்திய அரசியல்வாதி வயலார் ரவியின் மனைவி ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மெர்சி 1945 ஆம் ஆண்டில் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார்.[1]. இவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் [1]. 1969 ஆம் ஆண்டில் அரசியல்வாதியான வயலார் ரவியை மணந்தார். ரவி பின்னர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஆனார். இந்தத் தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ரவி கிருஷ்ணா எனும் மகனும், லிசா ரோகன், லட்சுமி ரவி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்..[1][2]

தொழில்[தொகு]

மெர்சி தனது அரசியல் வாழ்க்கையை ஒரு மாணவ ஆர்வலராகத் தொடங்கினார். பின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் பல முக்கியப் பதவிகளை வகித்தார், கேரள பிரதேச மகிலா காங்கிரஸ் மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார்.[2] தேசிய அளவில், 2000 ஆம் ஆண்டில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் பெண்கள் குழுவின் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் குழுவின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆசிய பசிபிக் பிராந்திய சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவும், பெய்ஜிங்கில் நடந்த உலக மகளிர் மாநாட்டிற்கான இந்திய தூதுக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[3] இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார்.

இறப்பு[தொகு]

கேரள சட்டசபையில் (2001-06) தனது பதவிக் காலத்தின் முடிவில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததுடன், சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்றார். செப்டம்பர் 5, 2009 அன்று, தனது 64 ஆம் வயதில், சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இறந்தார். கேரளாவின் அலுப்புழா மாவட்டத்தில் வயலாரில் உள்ள வயலார் ரவியின் மூதாதையர் இல்லத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.[2][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Niyamasabha. "Members-Niyamasabha". Kerala Legislative Assembly. பார்த்த நாள் 6 March 2013.
  2. 2.0 2.1 2.2 "Mercy Ravi laid to rest". All Voices. http://www.allvoices.com/contributed-news/4090447-mercy-ravi-laid-to-rest. பார்த்த நாள்: 6 March 2013. 
  3. The Hindu. "Mercy Ravi passes away". The Hindu. http://www.hindu.com/2009/09/06/stories/2009090653470400.htm. பார்த்த நாள்: 6 March 2013. 
  4. "Vayalar Ravi's wife passes away". Times of India. 5 September 2009. http://articles.timesofindia.indiatimes.com/2009-09-05/chennai/28107410_1_vayalar-ravi-kottayam-general-secretary. பார்த்த நாள்: 21 October 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்சி_ரவி&oldid=3081866" இருந்து மீள்விக்கப்பட்டது