மெர்க்குரிப் பூக்கள் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெர்க்குரிப் பூக்கள் என்ற நூல் எழுத்தாளர் பாலகுமாரனால் எழுதப்பட்ட நாவல். சாவி இதழில் 34 வாரங்கள் தொடராக வெளிவந்தது. பின்னர் இந்நாவல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கதைக் களம்[தொகு]

டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை, அதில் பணியாற்றும் தொழிலாளர்கள், கூலி உயர்வு சார்ந்த போராட்டங்கள் போன்றவையே இந்நாவலின் கதைக் களமாகக் காட்டப்பட்டுள்ளளது.

முக்கிய கதைப் பாத்திரங்கள்[தொகு]

கதையின் ஆரம்பத்திலேயே உயிரிழந்தாலும் கதை முழுவதும் பேசப்படுகின்ற கணேசன், எதையும் தீர்க்கமாக சிந்தித்து துல்லியமாக முடிவெடுக்கும் பெண்மணியாகக் காட்டப்படுகின்ற கணேசனின் மனைவி சாவித்திரி, வழக்கமான தொழிற்சங்கத் தலைவனாக கோபலன், கடுமையான காவல் துரை அதிகாரியாக துரைசிங்கப் பெருமாள், தன் டிராக்டர் தொழிற்சாலையை உணர்புபூர்வமாக நேசிக்கும் அதன் அதிபர் ரங்கசாமி, ஒத்த இரசனையுடைய, பொருந்தாக் காதலில் திளைக்கும் காதலர்களாக சங்கரன் - சியாமளி இணை, சியாமளியின் கணவனாக தண்டபாணி, அதிக பெண் பிள்ளைகளைப் பெற்று அவர்களைக் கறையேற்றப் போராடும் டெஸ்ட்பேட்ச் நாராயண சுவாமி, மனிதாபிமானம் சிறிதும் இல்லாத ரெளடியாக அறிவுக்கரசன், உணர்சிவயத்திலேயே முடிவெடுக்கப் பழக்கப்பட்ட சுப்பையா ஆகிய முக்கிய கதைப் பாத்திரங்கள் தவிர வேறு சில சிறிய கதைப் பாத்திரங்களும் கதையின் போக்கிற்கு ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.

கதை[தொகு]

யதார்த்தமான ஒரு தொழிற்சங்கப் பிரச்சனை, யாதர்த்தமான தொழிற்சங்கப் போராட்டம், முதலாளி - தொழிலாளி ஆகிய இரு பக்கமும் போராட்டம் ஏற்படுத்தும் வேதனைகள், இரு தரப்புமே விட்டுக்கொடுத்து பிரச்சனைய முடிவுக்கு கொண்டுவரும் பக்குவம் என கதை செல்கிறது. இதற்கிடையே சங்கரன் - சியாமளின் பொருந்தாக் காதலை விவேகத்துடன் முடித்து வைக்கிறார் கதை ஆசிரியர். சாவித்திரியின் கதாபாத்திரம்தான் கதை முழுவதும் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் பெரிய படித்த பெண்மணியாகக் காட்டப்படாமல் வீட்டுப் பொறுப்பை மட்டுமே கவனிக்கின்ற சாதாரணப் பெண்மணியாகக் காட்டப்படுகிறார். கதாபாத்திரங்களின் நிறை குறைகள் விவாதிக்கப்படாமல் யாதார்த்தமாக சொல்லப்பட்டு விவாதங்களை வாசகர்களே மேற்கொள்ளுமாறு செய்திருக்கிறார் கதை ஆசிரியர்.

மேற்கோள்[தொகு]

மெர்க்குரிப் பூக்கள் ஆசிரியர் பாலகுமாரன், பதினாறாம் பதிப்பு, விசா பதிப்பதகத்தார் வெளியீடு